நீயே என் உலகமடி_6

0
234

இரண்டு நாட்கள் வழக்கம்போல முடிவுற
அன்றைய காலையிலேயே அழைத்திருந்தார் அவரது தந்தை. கதிர்
புதன்கிழமை வந்துடுவல்ல. நீ வந்தா உதவிக்கு நல்லா இருக்கும். உன் அம்மா,
உமா ரெண்டு பேருமே கேட்டு கிட்டே இருக்கறாங்க. உன் பொஞ்சாதியையும் கூப்பிட்டுட்டு வந்திடு. உனக்கு கல்யாணம் முடிஞ்சது இங்க எல்லோருக்கும் தெரியும்.
சபையில் ரெண்டு பேரும் நின்னாதான் மரியாதையா இருக்கும். அப்புறம் ஈஸ்வரையும் அழைச்சிட்டு வந்திடு.

சொன்ன எல்லாவற்றிற்கும் சரிங்கப்பா என பதில் உரைத்தவன். அடுத்ததாக பானுவை அழைத்தான். பானு ஒரு நாளைக்கு முன்னாடியே வர சொல்லி இருக்கறிங்க. நீயும் வரணும் இன்றைக்கு நைட் கிளம்பணும். டிக்கெட் போட்டுடறேன் சரியா….

நாம மட்டும் தான் போறமா…

இல்ல இங்க ஈஸ்வரனும் வருவான். திரும்பி ஈஸ்வர்ரை பார்த்து உனக்கும் டிக்கெட் போட்டுடலாமா….

அதே நேரம் போன் வர திவ்யா அழைத்திருந்தாள். இவன் புறம் திரும்பியவன் ஒரு நிமிடம் பேசிவிட்டு வரேன் வெளியேறியவன்…. சொல்லு திவ்யா. ..

என்ன நீயும் போறியா. அவன் கேட்டதும் உடனே தலையாட்டி இருப்பையே…

ஆமாம். பக்கத்தில் பானு பேசிவிட்டு இருக்கறாளா …

டேய் நீ ஏன் நந்தி மாதிரி கூட போற. உனக்கு அறிவே இல்லையா…அவங்கல தனியா அனுப்பி வை. கூட போன மகனே தொலைஞ்ச. நீ ஏதாவது சாக்கு சொல்லி நாளைக்கு கிளம்பு சரியா.

ஓ… சரி சரி. புரியுது.

போ . உள்ள போய் சொல்லு. கூடவே அவனை தெலுங்கில் திட்ட….

எதுக்கு இப்ப தெலுங்குல பேசற… எப்பவும் போல தமிழில் பேசு.

ஏன் பேசினா சாருக்கு என்னவாம். தெலுங்கு பேசற பொண்ணு வேணும். ஆனா தெலுங்கு பேசக்கூடாதா…

சரிக்கு சரியா பேச மட்டும் செய். வைக்கிறேன். வீட்டிற்குல் நுழைய அதே கேள்வியை மறுபடியும் கேட்டான்.

டிக்கெட் போட்டுடவா ஈஸ்வர்…

கதிர் நாலு ஆர்டர் இருக்கு. அத முடிச்சிட்டு பகல்ல கிளம்பறனே. இத முடிச்சி கொடுத்துட்டா இந்த மாசம் டாரகேட் முடிஞ்சது நம்மல தொந்தரவு பண்ண மாட்டாங்க. என்ன சரியா…

நீ சொல்லறதும் சரி தான். நான் பானுவை கூப்பிட்டுட்டு கிளம்பறேன்.

சரி நைட் கதவை பூட்டிவிட்டு கிளம்பிக்கோ. லோக்கல் ஆர்டர் முடிச்சிட்டு குன்னூர் ஆர்டரையும் முடிச்சிட்டு அப்படியே ரெண்டு நாளைக்கு நான் என் ரூம்ல தங்கிக்கறேன்.

மாலை ஆறு மணியை நெருங்க சிறு சூட்கேசில் இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகளை சுமந்தபடி வந்திரங்கினாள் பானு.

கதிர் நாலு செட் டிரஸ் போதும்ல்ல. பட்டு சேலை ரெண்டு எடுத்து இருக்கிறேன். சாதாரண சேலை ரெண்டு போதும்ல.

பானு இப்ப அங்க சுடிதாரே போட ஆரம்பிச்சுடாங்க. இரு வரேன். அவனது அறைக்குள் சென்றவன் திரும்ப வரும் போது இரண்டு வேலைபாடுகள் நிறைந்த சுடிதாரை எடுத்து வந்தான். ஊருக்கு போறேன்ல நேற்று கடைக்கு போய் எல்லோருக்கும் டிரஸ் எடுத்துட்டு் வந்தேன் . பட்டு ஸ்ஸாரி ஒன்ன எடுத்துடு.

இப்ப எதுக்கு எனக்கு. ..

இந்த மாதிரி விஷேசத்துக்கு தான் புதுசு போடணும். சொன்னவன் லக்கேஜ்ஜை
வெளியில் எடுத்து வைத்தவன் கதவை பூட்டிய கடைசி நொடி பானுவின் முகம் பார்த்தவன். இத எப்படி மறந்தேன். ஒரு நிமிஷம் உள்ள வா பானு….

என்ன என புரியாமலே அவனை பின் தொடற பூஜை அறைக்கு அழைத்து சென்றவன் அங்கே ஏற்கனவே சாமி படத்தில் மாட்டி வைத்திருந்த தாலியோடு கூடிய சங்கிலியை எடுத்து பானுவின் கழுத்தில் மாட்டி விட ஒரு நிமிடம் திகைத்து அவனது முகத்தை பார்த்தாள்.

சட்டபடி கல்யாணம் முடிஞ்சாலும் தாலியும் அப்பவே வாங்கி இருக்கணும். ஏனோ அப்ப தோணவே இல்ல. இப்ப ஊருக்கு போனா எல்லோரும் உன் கழுத்தை தான் பார்ப்பாங்க… இப்ப போகலாம் வா…

என்ன மாதிரியான உணர்வு இது . பானுவிற்கு உள்ளுக்குள் நடக்கும் மாற்றத்தை அவனுக்கு கூறாமல் அவனை பின் தொடர்ந்தாள். . மனதிற்குல் எதுவோ புரிவது போல் தோன்ற கையில் தாலியை பிடித்தபடி அவனோடு கூடவே நடந்தாள்.
சற்றே கனமான சங்கிலி கழுத்தில் இருக்க மனசு லேசாக இருந்தது பானுவிற்கு…….. இவ்வளவு நாள் வார்த்தைகளால் உணர வைத்தவன் இன்று செயலால் உணர வைத்தான். மாற வேண்டியது அவன் அல்ல தான் தான் என்பதை உணர்வாளா… பானு மாற்றம் நடந்திடுமா….

தொடரும்.

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here