“தேவ் ..தேவ் என்னடா மாப்பிளை கல்யாணத்துக்கு ரெடியாகிட்டியா?”என குசலம் விசாரித்தபடி வந்தான் அவன் நண்பன் விக்ரம்.
“ம்ம்ம்”என்ற பதில் மட்டும் மொழிந்தது தேவின் திருவாய்.
சரியாக சவரன் செய்யப்படாத தாடியும்,கலையிழந்த முகமும் அவன் ஆழ்மனதில் இன்னும் பழைய நினைவுகள் கரையவில்லை என்பதை உணர்த்தியது அதை முழுவதுமாய் உணர்ந்துகொண்டான் விக்ரம்.
“இதற்கு மேல் ஏதாவது கேட்டால் தன்னை கொன்றாலும் கொன்றுவிடுவான்”என்பதையறிந்தான் விக்ரம்.
அவனுக்கு ஒருவாராய் மாப்பிள்ளை தோரணைக்கு தயார் செய்து மணவறைக்கு அழைத்துச்சென்றான் விக்ரம்.
“கெட்டிமேளம்…கெட்டிமேளம்”என்று மேளவாத்தியமும் நாதஸ்வரமும் முழங்க
மங்கலநாணை யாழினி கழுத்தில் கட்டினாள்.
பூவையாய் வீற்றிருந்த பாவையவள் நாணத்தோடு அந்த மங்கலநாணை தன்னவனிடம் கழுத்தில் வாங்கிக்கொண்டாள்.
முகத்தை திருப்பியவாறு எதற்கோ திலகமிடுவதைப்போல இஷ்டமின்றி அவள் நெற்றியில் திலகத்தை வைத்துவிட்டான் தேவ்.இது நடந்தது திருமணத்தன்று.
“அப்பா உனக்கு அம்மாவை எவ்வளவு பிடிக்கும் “என்றாள் குட்டி மகள் தீப்தி.
“ரொம்ப…ரொம்ப பிடிக்கும்”என சிரித்தவன் தன் அலுவலக கோப்புகளை ஒருகையில் ஏந்தியவாறு மறுகையில் மெல்ல அவள் இடையை கிள்ளிச்சென்றான்.
“ஆஆவென “கத்தியவள் தீப்தி இருப்பதைக்கண்டு சுதாரித்து விட்டு அமைதியானாள்.
“சரியான இம்சை இம்சை”என புலம்பியவாறும் சிறு புண்ணகையோடும் அடுக்களை வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
காதலை ஒவ்வொரு தருணமும் உணரச்செய்யும் கணவன்,அவர்கள் ஆன்புக்கு அடையாளமாய் தீப்தி குட்டி இவையெல்லாம் கிடைப்பதற்கு யாழினி மட்டுமே காரணமாவாள்.அவளின் சமயோஜித புத்தியும்,ஆழமான காதலும் இல்லாமல் தேவ் மனதைமாற்றுவது கடினமான காரியம்.
யாழினி_தேவ் காதல் எங்கே எப்படி மலர்ந்தது என்று பார்க்கலாமா.
தேவின் அத்தைமகள் பூரணி.இருவருக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்தான்.பூரணியின் பூரணமான அழகும் அவளின் அவளின் கூர்மையான வசீகரிக்கும் கண்களும் செதுக்கி வைத்த சிற்பமாய் அழகாய் தெரிந்தாள்.
அதைவிட அவளின் சாந்தமான பண்பும் அடக்கமான தன்மையும் அவள்புறம் அவன்மனதை வசீகரம் செய்தது.
“தட்டை மாத்திக்கோங்க”என்று ஐயர் கூறியதும் இருகுடும்பத்தாரும் தாம்பூலம் மாற்றிக்கொண்டர்.
பிரபல இரும்புத்தொழிற்சாலையின் மேனேஜராக பணிபுரிபவன் .தொழில் என்று வந்துவிட்டால் அவனுக்கு அடிபணிந்து வேலைகளை சரியாக செய்ய வேண்டுமென்று நினைப்பான்.அத்தனை ஸ்ட்ரிக்ட் பேர்வழி இன்று பூர்ணிமாவிடம் மனதை பறிகொடுத்து இளகி நின்றான்.அவன் ஆண்மை அத்தைமகளிடம் தோற்றது காதலின் வலிமையை உணர்ந்தான்.அவளிடம் பேசவும்,அவளோடு பழகிடவும் அவன் மனம் ஏங்கிக்கிடந்தது.
திருமணநாள் குறித்துவிட்டார்கள் இன்னும் சரியாக ஒருமாதம்தான் இருக்கிறது.அதற்குள் அவளைப்பற்றி ஐம்பது சதவிகிதமேனும் தெரிந்துகொள்ளவேண்டுமென அவன் மனம் துடித்தது.
நாளை அவளுக்கு பிறந்தநாள் சிறுவயதில் பொம்மையென்றால் அவளுக்கு கொள்ளைப்பிரியம் அவளுக்காக அழகான பிங்க் வண்ண டெடியை வாங்கிவந்தான் தேவ் .அத்தோடு அவன் வருங்கால மனைவிக்கு இரவெல்லாம் கண்விழித்து காதல் கவிதையையும் எழுதிக்கொண்டான்.
இப்பொழுது டிரெண்டாக இருக்கும் மொபைலும் அவளுக்கு பிறந்தநாள் பரிசாக பேக் செய்யப்பட்டது.
காலையில் ஏழு மணிக்கெல்லாம் அவள் வீட்டு காலிங்பெல்லை தட்டினான்.எரிச்சல் தோய்ந்த முகத்தோடு வந்த பூர்ணிமா”வாங்க அத்தான்”எனச்சொல்லிவிட்டு கடகடவென அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.அவள் வெட்கப்படுகிறாள் என நினைத்தவன் மனது அதைத்தவறாக எண்ண முற்படவில்லை.
பூரணியின் பெற்றோரும் வராத சிரிப்பை வரவைத்துக்கொண்டு “வாங்க மாப்பிள்ளை”என்றனர்.
பூரணியின் தாய் சூடான காபியை கொண்டுவந்தாள்.அதை அருந்தியவன் கண்கள் அவளைத்தேடியது.
“பூரணி… பூரணி”என அவள் அம்மா அவளை அழைக்க மெல்ல அன்னநடையிட்டு அவனருகே வந்தாள்.
“ஹேப்பி பர்த்த்டே “என அவள் கைகளை குலுக்கினான்.அவள் மெல்ல கைகளை அவனிடமிருந்து விலக்கினாள்.அவன் அவள் நாணத்தால் அப்படி செய்கிறாள் என்று நினைத்தான் .
முற்றத்தில் துளசிமாடத்தின் அருகில் நின்றவன் முதன்முதலாக காதலுக்காக யாசிக்கிறான் .கையிலிருந்த டெடியௌயும் அவன் எழுதிவந்த கவிதையையும் அவளுக்காக பரிசளித்தான்.
அவள் சிரித்தவாறே”தாங்க்ஸ் அத்தான்”என்றாள் கன்னத்தில் விழுந்தும் விழுந்திடாத குழிதெரிய.
அத்தைமகளின் அத்தான் என்ற வார்த்தை அவன் ஆயுசுமுழுக்க நிலைக்கவேண்டும் என்று அவனுக்கு இஷ்டமான குலதெய்வம் பெருமாளை வேண்டிக்கொண்டான்.அவன் மொபைலில் ரீங்காரம் அடித்தது.அவன் நொறுங்கிப்போனான்”என்ன அப்பாவுக்கு ஆக்ஸிடென்டா..எந்த ஹாஸ்பிட்டல்”என்றவன் “பூரணி நான் கிளம்புறேன் பை”என்று கிளம்பினான்.
உள்ளே புது மொபைலிருப்பதை கண்டவளுக்கு ஏகபோக குஷியானது மனம்.அந்த மொபைலில் அவன் நம்பர் சேவ் செய்யப்பட்டிருக்க “தேங்க்ஸ்”என்ற ஒற்றை வார்த்தை குறுஞ்செய்தி அவளிடமிருந்து புதுமொபைல் மூலமாக வந்தது.
பெருமாளுக்குகூட பிடிக்கவில்லை இந்த காதல்.இப்படி அவன் எண்ணங்களை கூறச்செல்லும் வேலையிலே “இது நமக்கு சரிபட்டுவராது”என்பதை அவன் அப்பாவின் ஆக்ஸிடென்ட் மூலம் பொருளுரைத்துள்ளார்.
“உங்கள் கவிதை நல்லாயிருக்கு அத்தான்”என்றாள் பூர்ணிமா.
அவளுங்கு பிடித்துவிட்டதென அவனுக்கு தலைகால் புரியவில்லை.தினமும் இரவூடும் வேலைகளில் காதலன் காதலிக்கு அழைப்பது போல் அழைப்பான்.அவளும் மொபைலை அட்டெண்ட் செய்து அவன் சொல்வதற்கெல்லாம்”ம்ம்ம்”என்ற பதில் மட்டும் கூறுவாள்.எத்தனை பணிவான பெண் என்று நினைத்தது காதல் கொண்ட அன்பானவன் நெஞ்சம்.
குணசீலனுக்கு சிறிய அடியென்பதால் ஒருவாரத்தில் இயல்புநிலை திரும்பியது.
இதோ திருமணம் நெருங்கிவிட்டது.நண்பர்கள் புடைசூழ ஒவ்வொருவரும் பல விதமான கல்யாண டிப்ஸ்களை அள்ளித்தெளிக்க புதுமாப்பிள்ளையின் சந்தோஷம் இரட்டிப்பானது.
“கெட்டிமேளம்…கெட்டிமேளம்”என்று மேளம்முழங்க தாலியைக்கட்ட சென்றவனுக்கு பேரதிர்ச்சி.பூர்ணிமாவின் வலதுபுறம் அமர்ந்திருந்த இவன் கையில் ஒரு தாலியிருக்க,வலதுபுறத்தில் அந்த கருவாயன் குறித்த முகூர்த்தத்தில் அவள்கழுத்தில் தாலிகட்டிவிட்டான்.
தேவின் தாய் சக்தி அவள் அண்ணனிடம்”என்ன பொம்பளபுள்ளையை நீ பெத்து வைச்சிருக்க”தாம்தூமென கத்திகூப்பாடு போட்டுக்கொண்டிருக்க.பூர்ணிமா”ஐ ஆம் ஸாரி”என்ற ஒரு வார்த்தையை தேவிடம் உதிர்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பி அவன் பைக்கிலேறி சென்றாள்.
மண்டபத்திலிருந்து வெளியேறியவன் காரிலேறி அமர்ந்தான்.அங்கு குப்பைத்தொட்டியில் அவளுக்கு ஆசையாய் பரிசளித்த டெடிபியர் கிடந்தது.”சீ..இதுதான் காதலா”என குப்பைத்தொட்டியை பார்த்தவனுக்கு சலிப்பு தட்டியது வாழ்க்கை பகடிப்பற்று போனது.இத்தனை நாள் பூர்ணிமா ஆடியது நாடகமா? என அந்த அமுக்குனியை நினைந்து வெந்துநொந்து போனான்.
“பூரணி பூரணி “என கத்திக்கொண்டே தலைகுனிந்தவாறு அவள் பெற்றோர் சென்றனர்.திருமணமேடை வரை சென்ற திருமணம் அபசகுணமாக கருதப்படுவது தம் தமிழ்நாட்டு பாணிப்பாயிற்றே.அனைவரும் முகம் சுழித்தவாறு தேவின் புறம் பரிதாபப்பார்வை வீசினர்.
அவன் கம்பெனி தொழிலாளர்கள்கூட அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள்.கம்பீரமாக இருந்தவனுக்கு காதல் தோல்வி,கல்யாணமுறிவு,மற்றவர்களின் ஏளனப்பார்வை எல்லாம் ஒன்றுசேர்ந்து மன உளைச்சலை தந்தது.
ஒருமாதகாலம் எதையோ பறிகொடுத்தவனாய் வீட்டினுள் முடங்கிக்கிடந்தான்.அந்த பெரியதொழிற்சாலையில் மேனேஜர் பதவியிலிருந்து நீக்கப செய்யப்பட்டான்.அடுத்தடுத்து அடி எவ்வளவுதான் தாங்க இயலும் அவனால்.
அவன் தாயும் தந்தையும் அவனுடைய நிலை கண்டு நிலைகுழைந்தனர்.நல்ல திறமைசாலி என்பதால் ஒருவருடபோராட்டத்திற்கு பின்னர் வேறொரு தொழிற்சாலையில் மேனேஜராக பொறுப்பேற்றான்.
அவன் கவனம் முழுவதையும் தொழிலில் திருப்பினான் நல்ல முன்னேற்றம் கண்டான். ஒரு கட்டத்தில் அவன் கடும்உழைப்பை பாராட்டி மேலும் இரண்டு கம்பெனிகளின் பொறுப்பையும் தர்மராஜன் கொடுத்தார்.அவன் நேர்மையும் சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் தர்மராஜனுக்கு பிடித்து போனது.
தன் ஒரே அன்புமகள் யாழினியை அவனுக்கு மணம் முடிக்க அவன் பெற்றோரிடம் மாப்பிள்ளை கேட்டார்.
தேவின் தாய் பத்மாவதி அவனிடம் ஒற்றைக்காலில் நின்று திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைத்தாள்.
இவையெல்லாம் அவன் நெருங்கிய நண்பன் விக்ரமிற்கு தெரியும்.இந்த திருமணத்திற்கு மற்ற எந்த நண்பர்களுக்கும் திருமண அழைப்புகூட தரவில்லை.விக்ரம் மட்டுமே அவன் கடுமையான நேரங்களை கடப்பதற்கு உதவிசெய்தான்.மற்றவர்கள் எள்ளிநகையாடுவதிலேயே இருந்தனர் அவன் மனவேதனையை புரிந்துகொள்ளவில்லை.
மறுமுறை கெட்டிமேளம் முழங்கியபோது திருமணம் சீரும்சிறப்புமாக நடந்தேறியது.
யாழினி பூர்ணிமாவைக்காட்டிலும் சற்று நிறம் குறைவானவள்தான் ஆனால் அவளைவிட அழகான முகமும்,புத்திகூர்மையும்,எதையும் பளிச்சென பேசும் திறனும் கொண்டவள்.நல்ல படிப்பு,அந்தஸ்துடன் அனைவரையும் அனுசரித்து போகும் குணமுடையவள்.
திருமணம் முடிந்து அன்று தேவ்_யாழினி தம்பதி முதலிரவு அறைக்குள் அனுப்பப்பட்டனர்.அவள் மஞ்சள் முகம் முழுக்க வெட்கம் பூசி மெருகேறியிருந்தாள்.
அவனோ முகம்முழுக்க எரிச்சலோடு அவள் அவனிடம் நீட்டிய பால்சொம்பை தட்டிவிட்டான்.அவளுக்கு பகீரென்றானது இருந்தாலும் சமாளித்துக்கொண்டாள்.
“இப்போ என்ன உங்களுக்கு இந்த முதலிரவுல உடண்பாடில்லை…சரி நான் மேலே படுத்துக்குறேன்,நீங்கள் கீழே படுங்கள்”என்றவள் பாய் ,தலையணை மற்றும் போர்வையை எடுத்து கீழே போடாடுவிட்டு”நீங்களே விரிச்சுக்கோங்க …நான் டயர்டா இருக்கேன்”என சொல்லிவிட்டு குப்புறப்படுத்து தூங்கினாள்.
அவனுக்கு அதிர்ச்சி தாளவில்லை ,அவன் சொல்கேட்டு நடப்பவர்களை மட்டுமே பார்த்தவனுக்கு இந்த திமிர் பிடித்தவளை பார்க்கும்பொழுது கோபமாய் வந்தது.
“இவள் என்ன இவ்ளோ பிஹூ பண்றா”என நினைத்தவன் அவனாகவே போர்வையை விரித்து படுத்துத்தூங்கினான்.???
“சரியான திமிர்பிடிச்சவளா இருப்பாபோலயே…என் பூர்ணிமா அப்படியில்லை “என நினைத்தவனுக்கு..இப்பொழுது மனதில் தெரிந்தது துரோகி பூர்ணிமா…
“சே…அந்த நம்பிக்கைதுரோகியை போய் நினைக்குறேனே என்னோட மனதை முழுவதும் கொன்று புதைச்சு போட்டாளே.அவளை போய் நினைக்குறேன்”என்று மனம் சொல்ல வேகமாக கோபத்தில் சுவற்றை ஓங்கி குத்தினான்.
“அய்யோ அம்மா…வலிதாங்க முடியலையே”எனக்கையை உதறியவன் யாழினி கொறட்டை விட்டு தூங்குவதைப்பார்த்துவிட்டு கையில் ஐயோடெக்ஸ் மருந்தை தேய்த்துவிட்டு உறங்கினான்.
காலையில் எழுந்தவனுக்கு பேரதிர்ச்சி அவளைக்காணவில்லை காலைக்கடன்களை முடித்து குளித்து கீழிறங்கியவன்.அவள் நல்லவள் போல் அவனருகில் வெட்கத்தோடு வந்து”இந்தாங்க காபி எடுத்துக்கோங்க”என்றாள்.அதனை வேண்டாவெறுப்பாய் வாங்கியவன் மனம்”அடேங்கப்பா உலகமகா நடிப்புடா சாமி”என நினைத்தது.
காபியை அருந்தியவன் அருகில் நின்றவள் புருவங்களை ஏறதூக்கிவிட்டு மெல்ல கண்ணடித்தாள்.தேவ் படாரென கீழே குனிந்துவிட்டான்.
விக்ரமின் ஃபோன் கால் வந்தது”மச்சி எல்லாம் ஓ.கே ஆயிடுச்சா”என்றான் விக்ரம்.
மெல்ல வெளியே எழுந்து சென்றவன்”அடச்சீ வாயமூடுடா….ஏன்டா எல்லோரும் சேர்ந்து படுத்துறீங்க …இப்போ புதுசா இவள் வேற இம்சை பண்றாடா”என்று தேவ் கூறியதும் உடனடியாக இணைப்பை துண்டித்துவிட்டான் விக்ரம், இதற்குமேல் அவனை தேவ் கடித்துகுதறிவிடுவான் என்பதை நன்குணர்ந்தான் விக்ரம்.
“சரியான லூசுபய…இவனும் இப்படித்தான் இருக்கிறான்”என தலையில் அடித்துக்கொண்டு ஆபிஸ் கிளம்பினான் தேவ்.
“அத்தை அவர் கிளம்பிட்டாரு நானும் கிளம்புறேன்”என்று தன் ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு அவனுடன் செல்வதற்கு தயாரானாள் யாழினி.
“ஏய் நீ எங்க வர்ற நான் ஆபிஸ் போறேன்” என்றான் எரிச்சலாக.
“ஹலோ சார் நானும் இனி தினமும் உங்ககூட ஆபிஸ் வருவேன்…அப்பா ஆறுமாதத்துக்கு வெளிநாடு போகிறார் பிஸ்னஸ் சம்பந்தமாக அதனால் என்னைய கம்பெனியை பார்த்துக்கொள்ள சொல்லியிருக்கிறார்”எனாறாள் யாழினி.
“ஐயோ பெருமாளே ஏன் என்னை இப்படி சோதிக்கிற “என்று மனதில் நினைத்தவன் வாய்விட்டே சொல்லிவிட்டான்.
“ஹீஹீ….உங்களோட தலையெழுத்தை யாரும் மாற்ற இயலாது”என்றவாறு சிரித்தாள் யாழினி.
அவன் பைக்கில் பின்புறம் ஏறியவள் அவன் இடுப்புப்பகுதியை இறுக்கமாகப்பிடித்தாள்.
“ஏய்…ஏய்…நீ என்ன பண்ற”என்று பதறியவனை பார்த்தவளுக்கு சிரிப்பாய் வந்தது.
“பைக் ரைட்னா எனக்கு பயம்…அதான் இறுக்க பிடிச்சுட்டேன்”என்றாள்.
“கீழே இறங்கு முதலில்…உனக்கு கேப் பேசிவிடறேன் நீ ஆபிஸ் வா”என்றான்.
இவள் ஏதும் பேசாமல் கீழிறங்கி முகத்தை உம்மென வைத்துக்கொண்டாள்.அதற்குள் அங்கு வந்த சக்தி”ஏன்மா டல்லா இருக்குற”எனக்கேட்டார்.
“அத்தை அவர் என்னைய பைக்ல ஆபிஸ்கூட்டிட்டு போகாமல் கேப் புக் பண்றாரு”என்று சொல்லதான் செய்தாள் யாழினி.சக்தி வானுக்கும் பூமிக்கும் குதிக்க ஆரம்பித்தாள் சக்தி.
அம்மாவின் நச்சரிப்பு தாளாமல்”நான் பைக்லயே கூட்டிட்டு போறேன்ஶ்ரீ..ஏறுமா தாயே”என யாழினியை பைக்கில் ஏற்றினான்.
அவளின் மெல்லிய கரத்தின் இளகிய அணைப்பு அவனுக்கு ஆனந்தத்தை தரவில்லை மாறாக”எப்படா ஆபிஸ் வரும்”என்ற எண்ணம் தொற்றியது.
ஆபிஸில் கணக்கு வழக்கு பார்ப்பதிலும் வீட்டை அவன் பெற்றோரை பராமரிப்பதிலும் கெட்டிக்காரியாக திகழ்ந்தாள்.சமையலும் அத்துபடி ஆனாலல் அவளுடைய ஒரே குறை அவள் கணவன்மட்டும்தான்.
விதவிதமாய் உடுத்தினாலும் சரி,கண்டுகொள்ளாததுபோல அவனை கண்காணித்தாலும் சரி,விதவிதமாய் சமைத்தாலும் சரி, எதற்கும் மசியாத கல்நெஞ்சுக்காரன் அவன்.
இப்பொழுதுதெல்லாம் சொந்தங்களிடமிருந்து வரும் ஒரே வார்த்தை”என்ன இன்னும் விசேஷமில்லையா”.
இவளுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை”ஏதாவது நடந்தாதானேடா விஷேசம் வரும்…சிறுபிள்ளைதனமா பேசுராங்களே”என டேக் இட் ஈஸியாக மனதை தேற்றிக்கொண்டாள்.எல்லாம் அவன் மனதை எப்படியும் மாற்றிவிடலாம் என்ற ஒரே நம்பிக்கைதான்.
ஒருவருடம் இப்படியே ஓடிப்போனது திருமணநாளும் வந்தது.பெற்றோர்களின் இம்சை தாளாமல் கோவிலுக்கு சென்றவனுக்கு பேரதிர்ச்சி.
கருவாயனும் பூர்ணிமாவும் கையில் ஒன்றரை வயது குழந்தையுடன் நின்றிருந்தார்கள்.இவனுக்கு பற்றிக்கொண்டு வந்தது.
பூர்ணிமா அவனை எதேர்ச்சையாக பார்க்க தலையை கவிழ்த்துக்கொண்டாள்.இவன் மெல்ல யாழினி அருகில் சென்று அவள் தோல்மேல்கைபோட்டு”சரி வா தங்கம் வீட்டுக்கு கிளம்பலாம் மணியாயிடுச்சு”என்றவன் குங்குமம் வேறு வைத்துவிட்டான்.
“என்னடா இவனுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சா “என நினைத்தவாறுஅவன் செய்கையை அறியாமல் உற்று நோக்கினாள் யாழினி.
“குழந்தையை ஒரு நிமிடம் பிடிச்சுக்கோங்க”என்றவள் வேகமாக தேவிடம் ஓடிவந்தாள்.
“அத்தான் அத்தான் என்னை மன்னிச்சுருங்க…நான் பண்ணுனது தப்புதான் .எல்லாத்துக்கும் நான்தான் காரணம்.அப்பா அம்மாவுக்கு பயந்துதான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்,அர்ஜூனைத்தான் நான் விரும்பினேன்”என அவன் கால்களில் விழுந்து மன்றாடினாள் பூர்ணிமா.
“ஏய் வழியை விடு…நீ யாருனே எனக்குத்தெரியாது”என மூர்க்கமாக அவளை தள்ளிவிட்டவன் வேவேகமாக நடையைக்கட்டினான்.
பூர்ணிமா “அத்தான்அத்தான்”எனக்கதறியும் அவன்செவிசாய்க்கவில்லை.வேகமாக தன் ராயல்என்ஃபீல்டில் ஏறியவன் பைக்கை கிளப்பினான்.
“ஏய் உனக்கு வேற சொல்லனுமா ஏறுடி வண்டியில”என ஒரு அதட்டு போட்டதும் கப்சிப்பென வண்டியில் ஏறினாள் யாழினி.
“அம்மாடியோவ்…இந்த சிடுமூஞ்சிக்கு இவ்ளோ கோவம் வருதே…யாழுமா நீ கொஞ்சம் அடக்கிவாசி “என மனதில் நினைத்துக்கொண்டாள்.
வண்டியை வேகமாக ஓட்டியவனிடம்”கொஞ்சம் மெல்ல போங்க”என்றாள் யாழினி.
“அதெல்லாம் எனக்கு தெரியும் நீ அமைதியா வா”என்றவன் முழுமூச்சில் வீட்டை அடைந்தான்.
“அப்பாடா…தப்பிச்சோம்”என நினைத்தது யாழினியின் மனம்.
வேகமாக உள்ளே நுழைந்தவன் கூலர்ஸை கழற்றி சோபாவில் எறிந்துவிட்டு வேகவேகமாய் ரூமிற்குள் நுழைந்தான்.இவளும் அவனுடன் வேகமாக ரூமிற்குள் நுழைந்தாள்.
“ஏய் எதுக்கிப்ப ரூமுக்கு வர்ற…மனுஷனை தனியா நிம்மதியா கொஞ்சநேரம் இருக்கவிடமாட்ட”என்றான் தேவ்.
வேகமாக அங்கிருந்த வந்தவள் பளார் பளாரென தேவின் இரு கன்னங்களிலும் அரைந்தாள்.
தேவ் மிரட்சியுடன் அவளை கண்சிமிட்டாமல் பார்த்தான் இரு கன்னங்களிலும் கைவைத்தவாறு.
அவள் தான் ஃப்ரீஹேர் விட்டிருந்த தலைமுடியை அள்ளி கொண்டையாக முடிந்தவள் ஆக்ரோஷமாய் பேச ஆரம்பித்தாள்.
“என்ன ஓவரா பண்ணிட்டு இருக்க,நானும் ஒரு வருடமா எல்லாத்தையும் பொறுத்துப்போய்ட்டு இருக்கேன்…அப்புறம் எதுக்கு என்னைய கல்யாணம் பண்ணுன”
“நீ அப்ப திருந்திடுவ இப்போ திருந்திடுவனு ஒருவருடமா வெயிட் பண்ணிட்டு இருக்கிற, என்னைய பார்த்தால் கிறுக்கச்சி மாதிரி இருக்கா”
“இல்…லை “என்றவனை.
“ஸ்ஸ்ஸ் வாயமூடு இப்போ இது என்னோட டர்ன் நான் பேசறதை மட்டும் நீ கேளு”என்றாள்.
அவன் அப்படியே ஆணி அறைந்தார்போல அவளையே உற்றுநோக்க ஆரம்பித்தான்.
“உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையானு எனக்குத்தெரியலை…ஆனால் நான்கு வருடங்களுக்கு முன்னாடி கொல்கத்தாவில் இன்டஸ்ட்ரியல் மீட் நடந்தது ,அங்கே நீயும் வந்திருந்தீல” என்றாள் யாழினி.
“ம்ம்ம்”என தலையசைத்தான் தேவ்.
“அங்கே நானும் வந்தேன். உன்னுடைய கம்பீரம்,ஆளுமைத்திறமை,பொறுப்புணர்ச்சி எல்லாம் என்னை கவர்ந்தது.இப்படியொரு நேர்மையானவனைத்தான் திருமணம் செய்துக்கனும் என்ற எண்ணமும் வந்தது
என் அப்பாவும் நீ முதலில் வேலை பார்த்த இன்டஸ்ட்ரியின் முதலாளியும் நெருங்கிய நண்பர்கள்.உனக்கு அவர்தான் சர்டிபிகேட் வேறு கொடுத்தார் நல்லவன்,வல்லவன் என்று.
இதுவே என்னை உன் பின்னால் சுற்ற வைத்தது.உன்னைதான் திருமணம் செய்துகொள்ளவேண்டுமென என் தந்தையிடம் நான் கேட்க.நான் ஆசைப்பட்டதையெல்லாம் நிறைவேற்றும் என் தந்தை சம்மதம் சொன்னார்.
அதற்குள் உனக்கு திருமணம் என்பதை கேள்விபட்டு என் காதலை சுக்குநூறாய் உடைத்துவிட்டேன்.உன் திருமணம் முறிந்துவிட்டது என்ற செய்தி என் காதில் விழுந்திட,மனதில் உடைந்த பிம்பங்களை ஒன்றாய் சேர்த்தேன்.நீயாகவே என் தந்தையின் இன்டஸ்ட்ரிக்கு வேலைக்கு வேறு சேர்ந்தாய் எல்லாம் கடவுளின் செயலென நம்பினேன்.என்றும் உனக்கான காதல் என்னிடம் மட்டும்தான் உள்ளது என நம்பினேன்.
திருமணத்திற்கு முன் உனக்கு ஏற்பட்ட எல்லாவற்றையும் விக்ரம் அண்ணா மூலம் தெரிந்துகொண்டேன்”என்றாள் யாழினி.
கொட்ட கொட்ட விழித்தவள் “அப்போ எல்லாமே தெரியுமா”என்றான் தேவ்.
“தெரியும் தெரியும்….ஆமா நீ செய்தது பெயர் காதலா? ,உன்னிடம் ஒருமுறைகூட காதலை வெளிபடுத்தாதவள் மனதில் என்ன இருக்கிறது என்பதுகூட தெரியாதா? …சொல்லு நீ அவ்வளவு பெரிய ட்யூப்லைட்டா”எனக்கேட்டாள் யாழினி.
“என்னது…ட்யூப்லைட்டாஆஆஆஆ”என வாயைப்பிளந்தான் தேவ்.
இப்பொழுது அவள் பேச்சில் அவன் சற்று தெளிவுற்றான்.
“உன்னோட காதல்கவிதையை படித்தவள் உன்னிடம் அது எத்தனை தூரம் அழகாயிருக்கிறது என்பதைக்கூட சொல்லலையே…அப்பவே அவளுக்கு உன்மேல காதல் இல்லைனு உனக்கு புரியலையா?
அதெல்லாம் சரி உன் கண்முன்னாடியே இன்னொருத்தனிடம் தாலி வாங்கி சென்ற அவள் பெரிய உத்தமி.ஆனா உனக்காக சுத்தி சுத்தி வந்து உன் கையால தாலி கட்டிகிட்ட நான் கெட்டவள் நல்லாயிருக்குடா உன் நாடகம்.
உன்கிட்ட பேசாமல் உன்னைத்தவிர்தவளுக்காக நீ காதலை கொட்டித்தீர்ப்ப…ஒருவருடமா உன் பின்னாடியே திரியுற என்னைய தள்ளி வச்சகருக்குற…போதும் போதும் இனி எனக்கு நீ தேவையில்லை போ…என்றவள்
சடாரென அவள் மொபைலை எடுத்து “எனக்கு உடனடியா டைவர்ஸ் அப்ளை பண்ணுங்கப்பா”என்றாள்.
மறுமுனையில் யாழினி தோழி கீர்த்தி”ஏய் லூசு என்னடி உளறிட்டு இருக்க….மூளை எதுவும் கலண்டுடுச்சா?”எனக்கேட்டாள்.
இவளோ”எனக்கு இந்த லைஃப் செட் ஆகலை டைவர்ஸ் அப்ளை பண்ணுங்க.வேணாம்பா வேணாம்”என ஃபோனை துண்டித்தாள்.
என்னவோ ஏதோவென பதறிய கீர்த்தி மறுபடி கால் செய்தாள்.இவள் கட் செய்தாள்.
“ஜஸ்ட் ஃபார் எண்டர்டெயின்மென்ட்”என்ற அவள் குறுஞ்செய்தியை பார்த்ததும் அமைதியாகிப்போனாள் கீர்த்தி.
யாழினி காலேஜ் படிக்கும்போது அப்பாவிடம ஏதாவது தவறு செய்து மாட்டிக்கொண்டால் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை”ஜஸ்ட் ஃபார் என்டர்டெயிண்மென்ட்”எனவே அவள் ஏதோ விளையாட்டாக செய்கிறாள் என்பதை உணர்ந்துகொண்டாள் கீர்த்தி.
அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் ஒரு ட்ராலியில் அவள் உடைமைகளை பேக் செய்ய ஆரம்பித்தாள்.
“யாழினி யாழினி ப்ளீஸ்மா நீ போயிடாத உன்னை புரிஞ்சுக்காம இருந்துட்டேன் என்னைய மன்னிச்சுக்கோ”என்று மன்றாடினான் தேவ்.
“நகரு நகரு…எனக்கு வேலையிருக்கு என எல்லாவற்றையும் இன்னும் வேகமாய் எடுத்துவைத்த யாழினி டொம்மென சூட்கேஸை ஒரு ஓரத்தில் போட்டுவிட்டு ஜன்னலோரம் சாய்த்து வாசலை வெறித்தபடி அமர்ந்தவள் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.
மெல்ல அவளருகிலமர்ந்தவன் அவள் கைகளை மெல்ல வருடினான்.யாழினி அவனை ஒரு முறை முறைத்தாள்.இருந்தாலும் ஏற்கனவே அடிவாங்கி சிவந்திருந்த அவன் கன்னங்களில் அவள் மறுபடி அடிக்கவில்லை.
அப்படியே மெல்ல நெருங்கியவன் அவளை இறுக அணைத்துக்கொண்டான்.அவள் பொலபொலவென்று கண்ணீர்துளியை உதிர்த்து அழுது தீர்த்தாள் யாழினி.
அவள் முகத்தை தன் கைகளால் ஏந்தியவன்”ஐ ஆம் ஸாரிடி.. இனி என் மனசுல இந்த அராத்து பிடிச்சவளை இந்த சவுண்டு சரோஜாவைத்தவிர வேறு யாருமில்லை”என்றான் சிரித்தவாறு.
“அப்போ இனிமேல் பூர்ணிமா…பூசணிக்காய்னு சொல்லிட்டு இருக்கமாட்டேனு சத்தியம் பண்ணு”என்று அவனிடம் கையைநீட்டினாள் .
அவனும் “ப்ராமிஸ் இனி எவளையும் இந்த ராட்சசியை விட்டுட்டு நினைச்சுபார்த்து அடிவாங்க நான் தயாராயில்லை”என்றவாறு அவனுடைய அடிவாங்கிய கன்னங்களை.இறுகமூடிக்கொண்டான் தேவ்(இனிமேல் அடிவாங்க அவன் உடலில் திராணியில்லை?????) .
அவளை மெல்ல கட்டிலில் அமரவைத்தவன் அவளின் இதழ் அழுந்த முதன்முதலாய் முத்தம் பதித்தான்.காதல் மெல்ல குடிகொண்டது தேவிற்கு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.காதல் ஒருபடிமேல் சென்று முதலாம் ஆண்டு கல்யாண நாளில் எதிர்பாராவிதமாக இருஉயிர்களின் அன்பு அடுத்தநிலைக்கு முன்னேறியது.முதலாம் ஆண்டு திருமணநாள் முதலிரவாகவும்.மாறிப்போனது.
இன்று அவன் மார்பில் முகம் புதைத்து வெட்கத்தோடு அவன் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த யாழினியிடம்”நமக்குள்ள பிரச்சனைனா நம்ம இரண்டு பேரும் பேசித்தீர்த்துக்கனும் அதை விட்டுட்டு மாமாவுக்கு வேற டைவர்ஸ் அது இதுனு ஃபோன் போட்டு பேசிட்ட.அப்போ என்னைய விட்டுட்டு போயிடுவியா”என இறுகக்கட்டினான் தேவ்.
வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு”ஆமா போயிடுவேன்” என்றவள் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டாள்.
“எங்கே வெளியில எப்படி போகுறனு பார்க்குறேன்”என்றவன் அவளை மேலும் இறுக அணைத்து கன்னத்தினருகே அவன் கன்னங்களை பதிக்க அவள் பெண்மை அங்கே தோற்றுப்போனது.அவனுடைய அருகாமையின் சுகந்தத்தில் தன்னை மறந்தாள் அந்த பேதை.தன்னவனின் சிறு தீண்டுதலும் இத்தனை இன்பம் பயக்கக்கூடியது என்பதை அவள் முதன்முறை உணர்ந்தாள்.
“நான் இப்போ சொல்ற மேட்டர்ல நீங்க அப்படியே சாக் ஆயிடுவீங்க “என்றாள்.
“என்ன என்ன சொல்லுடியர்” என்றான் தேவ்.
“ஹா ஹா ஹா நான் எங்க அப்பாவுக்கு ஃபோன் போட்டேனு நீங்க நினைச்சீங்களா…எற் ஃபோனை எடுத்து டயல்டு லிஸ்ட் பாருங்க”என்றாள்.
தேவ் வேகமாக அவள் மொபைலில் டயல்டு லிஸ்ட் செக் செய்தான் அதில் கீர்த்தனாவின் நம்பர் இருந்தது.
“அடிப்பாவி அப்போ கீர்த்தனாவுக்கு ஃபோன் போட்டுதான் இந்த சீன் போட்டியா….உன்னைய என்ன பண்றேன் பாரு”என்ற தேவ் அவளைத்துரத்த ஆரம்பித்தான்.
அவளும் அரைமணிநேரமாய் அவனுக்கு ஏய்ப்பு காட்டிவிட்டு அங்குமிங்கும் ஓடி அயர்ந்து ஓரிடத்தில் அமர்ந்தாள் மூச்சிரைத்தபடி, அவனும் அவளுக்கு சிறிது இடைவெளி விட்டு மூச்சிரைக்க அமர்ந்தான்.
இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கலகலவென சிரித்தனர்.காதலில் புரிதலும் மகிழ்ச்சியும் அங்கு குடியேறியது.
அவளை மெல்ல நெருங்கி அவள் இருகைகளையும் பின்புறம் மடக்கி கட்டியவன் அவள் இதழருகே செல்ல அவள் கண்களை மூடினாள்.தேவ் படக்கென்று அவள் காதுகளைத்திருகி”மவளே இனிமே இப்படி சேட்டை பண்ணுவியா….புருஷனை அடிப்பியா”எனக்கேட்டான்.
“ஐயோ அம்மா வலிக்குது விடுடா லூசு”எனக்கதறினாள் யாழினி.
இருவரும் முதலாம் ஆண்டு திருமணநாளை இனிதே கொண்டாடினர் மாலையில் பிரபல ஹோட்டலில் அவளுக்காக சர்ப்ரைஸ் டின்னர் கேண்டில்லைட்டுடன் ஏற்பாடு செய்தான்.
அவளுக்கு ஆச்சர்யம் தாளவில்லை”என்ன இவாளோ சர்ப்ரைஸ் என்னால நம்பவே முடியலை”என்றாள் யாழினி.
“என்னோட மகாராணியை எப்படி வச்சுக்கனும்னு நினைச்சேனோ அப்படித்தான் இபோ உனககு செய்யறேன்”
நான் லவ் பண்ணுனது தப்பில்லை தப்பான ஒருத்தரை லவ் பண்ணுனதுதான் தப்பு.
எனக்கே எனக்கான தேவதை நீமட்டும்தான் இதை நான் உணருவதற்கு இத்தனை நாள் ஆயிடுச்சு.என்னைய கஷ்டப்படுத்திட்டு போனவளை நினைச்சுட்டு என்னைய நினைச்சு உருகுற உன்னைய உதாசீனப்படுத்திட்டேன்..ப்ளீஸ் என்னைய மன்னிச்சுடுமா”என்றவன் கண்களின் ஓரம் இருதுளி நீர் கசிந்தது.
அழுவது ஆண்மகனுக்கு அழகில்லை என்றாலும் தவறை உணர்ந்து கண்ணீர் சிந்துவது தவறில்லை என பதை உணர்ந்த யாழினி சிறிது நேரம் அவன் மனபாரங்களை கொட்ட விட்டாள்.
அவனருகில் மெல்ல சென்றவள் அவனை இறுக அணைத்து அவன் கண்களில் முத்தம் பதித்து”ஐ லவ் யூ தேவ்”என்றாள்.
அவன் மனம் வானுக்கும் பூமிக்கும் குதித்தது.முதன்முறை ஒரு பெண் தன் காதலை அவனிடம் வெளிப்படுத்துகிறாளென்ற மகிழ்ச்சிதானது.
“சரி சரி…இன்னைக்கு நைட் இங்கே ரூம் புக் பண்ணிருக்கேன்…ஃபர்ஸ்ட் இயர் அனைவர்ஸரியை இங்க கொண்டாடலாம்”என்றான் தேவ்.
“அடப்பாவி மறுபடி செலப்ரேஷனா …இந்த பாடி இதுக்கு மேல தாங்காதுடா ஆளை விடு”என்றாள் யாழினி.
“அடச்சீ பயப்படாத …இந்த ஒரு வருடம் பேசாததையெல்லாம் இன்னைக்கு நீ பேசலாம் நான் கேட்பேன்”என்றான் தேவ்.
“செம டீல் “என்றவள் பற்கள் பளிச்சென தெரிய சிரித்தாள்.
இருவரும் அறைக்கு சென்று உடைமாற்றி கட்டிலில் அமர்ந்தனர்.யாழினி பேச ஆரம்பித்தவள் பேசிக்கொண்டேயிருக்க,ம்ம்ம்”மட்டும் கொட்ட ஆரம்பித்தான்.
“அய்யோ கடவுளே தெரியாமல் இவளை பேசச்சொல்லிட்டேனேஇந்படி நைட் இரண்டு மணியாயிடுச்சு இன்னும் வச்சு செய்றாளே… ஐடியா பேசாமல் தூங்கிட்டோம்னா எஸ்கேப் ஆயிடலாம்”என நினைத்தவன் உறங்கியும் போனான்.
காலையில் மணி ஆறு தொட்டதும் எழுந்தவன் அவளை எழுப்ப” இன்னும் பெண்டிங் ஸ்டோரி இருக்கு அதுக்குள்ள நைட் தூங்கிட்டீங்க” என மறுபடி ஆரம்பித்தாள்.
“இவளை எழுப்புனது தப்பாபோயிடுச்சே மறுபடி எப்.எம் பாட ஆரம்பிச்சுடுச்சே”என நினைத்தவன்
“சீக்கிரம் கிளம்பு வீட்டுக்கு போகனும்”என்றான்.
ஒரு வழியாய் அருவியென இறைந்த அவள் பேச்சு அடங்கியது.அவனுக்குள்ளோ புயலுக்கு பின்னால் வரும் அமைதி கிடைத்தது.
வேகமாய் வீட்டிற்கு நடையை கட்டியவன் நேராக கிளம்பி ஆபிஸ் சென்றுவிட்டான்.இதற்குமேல் அவள் போடும் பிளேடை தாங்கும் நிலையில் அந்த பிஞ்சு நெஞ்சமில்லை.இனியொருமுறை அவளை பேசச்சொல்லும் தப்பை செய்யமாட்டேன் என உறுதிபூண்டான் தேவ்.
இருவரும் மகழ்ச்சியோடிருப்பதைப்பார்த்த யாழினியின் பெற்றோர் தர்மராஜன்தேவமதி, தேவின் பெற்றோர் குணசேகரன்சக்தி தம்பதியும் இருவரும் உள்ளம் மகிழ்ந்தனர்.
“அனபிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்”அவர்களின் இல்லற வாழ்வில் அன்பு கரைபுரண்டோடியது.இக்கால தம்பதிகளாய் சேட்டையும் சில்மிஷமுமாக நாட்கள் நகர்ந்தன.
தேவ்_ யாழினிக்குஅழகான பெண் குழந்தை பிறந்தது .அவளுக்கு தீப்தி என பெயர்சூட்டினர்.அவளே அவர்கள் இருவரின் உலகமாகிப்போனாள்.அவளே இருகுடும்பத்திற்குள் செல்லமான பேத்தி.
ஒருநாள் தீப்தி அவள் தந்தையிடம்”அப்பா அம்மாவை உனககு எவ்ளோ பிடிக்கும்”என தீப்தி கேட்டாள்.
“உங்க அம்மானா எனககு உயிர்”என்றான் தேவ்.
“அபபோ உங்க லவ் ஸ்டோரி எப்படி ஸ்டார்ட் ஆனதுனு எனக்கு சொல்லுப்பா”என்றாள் தீப்தி.
“அதுவந்து….என் கன்னம் வலிக்குது”என இரு கன்னங்கையும் மூடினான் தேவ்.
இதை கவனித்துக்கொண்டிருந்த யாழினி காய்கறி வெட்டிக்கொண்டிருந்த கத்தியை தூக்கிக்காட்டி”சொன்னீனா கொன்னுடுவேன்”என வாய்காகுள் சொல்லலானாள் .
எல்லாம் புரிந்தவனாய் தேவ் கலகலவென சிரிக்க.
“ஏய் ஓடு முதல்ல இங்கிருந்து ஏழு வயசா குழந்தை மாதிரியா பேசறா…லவ் ஸ்டோரி கேக்குற வயசை பாரு,போ…போய் ஹோம்ஒர்க் நோட்டை எடுத்துட்டு வா”என தீப்தியை பற்றிவிட்டாள் யாழினி.
தீப்தி முறைத்துக்கொண்டே தன் அறையில் இருக்கும் ஹோம் ஒர்க் நோட்டை எடுக்கச்சென்றாள்.
தேவ் கிடைத்த நொடிப்பொழுதில் வேகமாய் நச்சென யாழினியின் இதழ்களில் முத்தம் பதித்தான்.
தீப்தி அங்கே வரும் சத்தம் கேட்டு வேகமாய் விலகியவன் விக்ரம் அங்கே வந்திட அவனுடன் வெளியே சென்றான்.
நண்பனின் வாழ்க்கை அழகாகவும் திருப்திகரமாகவும் அமைந்ததை எண்ணி மகிழ்ந்தான் விக்ரம்.
தன்னுடைய குறும்புக்கார மனைவி அள்ள அள்ள குறையாத காதல் ஊற்றை தந்திட ஐயாவுக்கு இப்பொழுது புதிதாக முளைத்தது பெரிய தொப்பையும் ஐந்து கிலோ எடையும் கூடிவிட்டது.தினமும் ஜாகிங் சென்றாலும் தொப்பை குறையவில்லை யாழினியின் கைப்பக்குவம் அப்படி.அவள் சமைக்கும் உணவுக்கு கிடைத்த பரிசுதான் இவைகள்.
அன்றிரவு தீப்தி” நான் பாட்டிதாத்தாவுடன் உறங்குகிறேன் அவங்க சூப்பர் கதையெல்லாம் சொல்வாங்க”என அடம்பிடிக்க அவர்கள் ரூமிலேயே படுத்துக்கொண்டாள்.
யாழினி இரவு வேலைகளை முடித்துவிட்டு லேப்டாப்பை அலசிக்கொண்டிருந்த தேவின் அருகிலமர்ந்து மெல்ல அதனை சட்டவுன் செய்தாள்.
“ஏண்டி இப்படி பண்ணுற கொஞ்சம் ஆபிஸ் வொர்க் பெண்டிங் இருக்கு”என்றான்.
“ஏய் பாப்பா எங்கே “எனக்கேட்க யாழினி அவனிடம்”அத்தை மாமாகூட தூங்குறா “என்றாள்.
“அப்போ ஜாலிதான் இன்னைக்கு “என ஓடிவந்து அவள் இடையை இறுகப்ற்றினாள்.
முகம்சற்று வாட்டமாய் இருந்தவளைப்பார்த்த தேவ்”ஏய் குள்ளச்சி என்னடியாச்சு,ஏன் உம்ம்னு இருக்கிற”எனக்கேட்டான்.
எல்லாத்துக்கும் காரணம் உங்க பொண்ணுதான்”உங்க பொண்ணு என்னைய இம்சை படுத்துறா,அவங்க கிளாஸ்ல எல்லோருக்கும் தம்பி தங்கச்சி இருக்காம்…எனக்கு தம்பி இல்லைனா தங்கச்சி வேணும்னு” அவள் அடம்பிடிக்க அரம்பிச்சுட்டா.
அத்தைதான் நீ இன்னைக்கு பாட்டிதாத்தாகூட படுத்துக்கோ உனக்கு கதை சொல்றோம் என நாசுக்காய் சமாளித்து தூங்க போட்ருக்காங்க வர்ற வர்ற இவளோட இம்சை தாங்கமேடியலை என நடந்ததை அப்படியே ஒப்புவித்தவள் நன் கணவன் பயங்கரமான விஷமக்காரன் என்பதை ஒருநிமிடப்பேச்சில் மறந்துபோனாள்.
அவனோ கலகலவென சிரிக்க யாழினி”என்னைய பார்த்தா நக்கலாயிருக்கா நானே பயங்கர டென்ஷன்ல இருக்கேன் உன் பொண்ணு இம்சை தாங்காமல்”எனக்கத்தினாள்.
அவளை நெருங்கியவன் “கூல் கூல் அவள் கேட்டதில் என்ன தவறு இருக்கிறது…அதுக்கும் ரெடி பண்ணிடலாம் “என சிரித்தவாறு அவளை மேலும் நெருங்கினான்.
“ஏய் கொன்னுடுவேன் ஒழுங்கா ஓடிப்போயிடு”என அவனை தள்ள முயற்சித்தவளை இறுகபற்றியது அவன் கரம்.
அவன் ஸ்பரிசத்தில் கரைந்தவளுக்கு பத்துமாதத்தில் அழகிய ஆண்குழந்தை பிறக்க”ஐயா தம்பி வந்துட்டான்”எனக்கொண்டாடியபடி குதித்து ஹாஸ்பிட்டலிலேயே ஆட்டம் போட்டாள் தீப்தி.
“கெட்டிமேளம் கெட்டிமேளம்”என்ன மக்களே எல்லோரும் ஆஆஆனு வாயைத்திறக்குறீங்க.இது நம்ம தீப்தி கல்யாணம் நடக்குது நம்ம தேவ்_யாழினி சந்தோஷமாக பூக்களை தூவுறாங்க.