பகுதி-6

0
183

பகுதி-6
தோழிகள் இருவரும் பிரபல ஷாப்பிங் மாலிற்க்கு சென்றனர். தங்களுக்கு தேவையான உடைகள் மற்றும் அதற்கு தோதான மேட்ச்சிங் நகை வகைகளை வாங்கியவர்கள் தங்களை தொடர்ந்து வரும் விமலை கவனிக்கவில்லை . அது அவனுக்கு சாதகமாக மாறி நல்லவனாக சித்தரித்தது விதியின் விளையாட்டா அல்லது தோழிகள் இருவரது எதிர்கால வாழ்க்கையில் சந்திக்கவிருக்கும் சோதனையின் துவக்கமா என்பதனை யார் அறிவர்.
“வைஷூ பில் கவுண்டர் ரஷ்ஷா இருக்குடி… நீ போய் பக்கத்துல ஆர்டர் பண்ண ஜிவல்ஸ் வாங்கிட்டு பார்க்கிங்ல இருக்க ஸ்கூட்டிய எடுத்துட்டு வாடி அப்புறம்… வந்து இதுக்கும் பயமா இருக்குன்னு சொல்லிடாத … பிளிஸ் டி ” என்றாள் வைஷூ.
“ஏய் என்னடி தனியா அனுப்புற கூட்டமா இருந்தா கூட பரவாயில்ல டி நாம ரெண்டுபேரும் சேர்ந்தே போய்டலாம்” வைஷாலி.

“சென்னைல தனியா வந்து படிக்கிற பொண்ணு இப்படி பயப்படுறியே ! இது உனக்கே நியாயமா? ” .என்று அவள் தோழியின் பயத்தை கண்டு தலையில் அடித்துக்கொண்டாள் வைஷ்ணவி .

“சரிசரி ரொம்ப அலுத்தூக்காதடி… இங்க நான் பில் பே பண்றேன் நீ போய் இது எல்லாம் செஞ்சிட்டு வா “என்று சலித்து கொண்டாள் வைஷாலி.

“வைஷூன்னு என் பேர்ல இருக்க பாதிய வெச்சிக்கிட்டு இப்படி பயப்புடுரியே என்னடி என் பெயருக்கு வந்த சோதனை
என்று தோழியை கேளி செய்து ஸ்கூட்டி சாவியை விரலில் மாட்டியவள் “சரி நீ பே பண்ணு நான் போய்ட்டு கால் பண்றேன் வெளியே வா என்று கூறி மால் ஐ விட்டு வெளியே சென்றாள் வைஷ்ணவி.

கியூவில் இருந்தவளுக்கு பின் நின்ற இரு ஆண்கள் அவளையே பார்த்திருந்தனர் . எதேச்சையாக பின்னால் திரும்பியவளுக்கு பின் நின்றவர்களின் ஆரஞ்சு பிங்க் கலர்களில் ஸ்பைக் , தலையில் காதின் ஓரத்தில் போட்ட நான்கு கோடு, புருவத்தின் மத்தியில் போட்டிருந்த வளையம் , காதில் தொங்கிய கம்மல், கழுத்திலும் கைகளிலும் போட்டிருந்த நகைகள் இது போன்ற ஒரு தோற்றத்தை பார்த்து பயம் ஏற்படாமல் இருந்தால் அவள் வைஷாலி இல்லையே .

அணிந்து இருந்த கண்ணாடி கூட அழகாக இருந்த அவள் மருண்ட விழிகளில் இதோ அதோவென எட்டிபார்க்க நிற்க்கும் கண்ணீரையும் ,கைகளில் ஏற்பட்ட படபடப்பையும் மறைக்க பிரம்ம பிராயத்தனப்பட்டாள்.

தக்க தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தவனுக்கு தானாக அமைந்தது அவளிடம் பேசும் சந்தர்ப்பம் .

அவளிடம் நெருங்கியவன் “ஹாய் வைஷூ ஷாப்பிங் முடிஞ்சிதா ? தனியாகவா வந்திருக்கிங்க? “என்றான் தற்சேயலாக வந்தவன் போல்

தெரியாத பேயை விட தெரிஞ்ச பிசாசே மேல் என்று நினைத்தவள் ” ஆமா விமல்… கூட வைஷுவும் வந்தா… அவ ஸ்கூட்டிய எடுக்க போய் இருக்கா.. நீங்க ஷாப்பிங் முடிச்சிட்டிங்களா? ” என்றாள்

அவள் தோழியை குறிப்பிட்டதும் ஒரு நிமிடம் முகம் இறுகியவன் மறு நிமிடமே சகஜநிலைக்கு திரும்பினான். சிரித்தமுகமாக “சரி கூட்டமா இருக்கு கொடுங்க நான் பே பண்றேன்” விமல்.

“பரவயில்லை விமல் நானே பே பண்றேன் நீங்க இருங்கிங்களா” என்று பின் நின்றிருந்தவர்களை ஒரு முறை திரும்பி பார்த்து விட்டு கெஞ்சுவது போல் கூறினாள் வைஷூ.

இதற்காகவே காத்திருந்தவன் அங்கே நின்றிருந்தவர்களை முறைத்தவுடன் அவர்கள் வேறு திக்கில் இருக்கும் பெண்களை நோக்கி பார்வையை செலுத்தினர்.

வைஷாலி தனக்கென்று ஒரு வட்டத்தை இட்டு அதற்குள்ளே வாழ்கிறவள் . அவளிற்க்கு இருக்கும் ஒரே இலட்சியம் தாய் இல்லாமல் வளர்த்த தன் தந்தையின் ஆசையான யூனிவர்சிட்டியில் முதல் மாணவியாக வரவேண்டும் என்பதே! அதை நிறைவேற்றியவள் வாழ்க்கை பாடத்தில் கோட்டை விட்டாள் . வாழ்க்கையில் பயம் ஒருவரை மிகவும் பலவினம் ஆக்கிவிடும் . படித்தால் மட்டும் போதாது மனிதர்களில் நல்லவர் கெட்டவர் என்று எடை போடும் பகுத்தறிவு இல்லாமல் போனது, தைரியம் தன்னம்பிக்கையையும், வளர்த்துக்கொள்ளாமல் ஒருவரை சார்ந்தே வாழ பழகியவளுக்கு தெரி்யவில்லை. அவன் மலருக்கு மலர் தாவும் வண்டு என்று தெரிந்திருந்தால் அழகான மலர் ஒன்று தன் வாழ்நாளில் அந்த கொடுமையை சந்தித்து இருக்காது.

அவனை பற்றி அதிகம் தெரிந்து வைத்து கொள்ளாதவள் அவன் பேச்சு சிரிப்பு உண்மை என நம்பினாள் .

விமலின் எண்ணம் ” பட்சி பறந்துறதுக்குள்ள நம்மோட இமேஜ் மெய்ன்டெய்ன் பண்ணி அவள என் வலைக்குள்ள சிக்க வைக்கனும் “

இவர்கள் பேசியதை எதையும் அறியாதவள் தோழிக்கு போன் செய்தால் “வெளியே வாடி நான் வந்துட்டேன்” வைஷூ

மாலில் நடந்ததை கூறினாள் தோழி இன்னும் கேளி செய்வாள் என்று நினைத்தவள் நடந்ததை மறைத்து “இதோ வரேன் வைஷூ”

“ஓகே விமல்… வைஷூ வந்துட்டா இவ்வளவு நேரம் இருந்ததுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் “ என்றவள் அந்த இடத்தை விட்டு சென்றாள்.

“சரி வைஷூ அப்புறம் மீட் பண்ணுவோம்” என்றான்

வைஷ்ணவியும், வைஷாலியும் ஸ்வேதாவின் வீட்டை நோக்கி ஸ்கூட்டியில் சென்றனர் வழியில் சிக்னலில்
நின்றிருந்தவர்களின் பின்னால் வந்து நின்ற பைக் ஸ்கூட்டியை முட்டி நின்றதில் நிற்கின்ற பேலன்ஸ் தவறி கிழே விழ நேர்ந்தது. சாதரணமாகவே கோபம் வரும் நம்ம ஆளுக்கு… அன்னைக்கு சொல்லவா வேணும் சாமியாடிட்டா … வாக்குவாதம் முற்றியதில் சட்டையை பிடித்து விட்டாபாருங்க ஒரு அறை வாங்கியவன் பாடு சொல்லவா வேணும்? விட்டால் போதும் என்றிருந்தது. அய்யோ அம்மா இவளிடம் யார் மாட்டிக்கொண்டு அல்லாடப்போரானோ என்று நினைத்துக் கொண்டான் அறை வாங்கியவன். அவனை மீட்க ஆபத்பாண்டவன் அனாத ரட்சகனாக வந்தாள் அவளுடைய தோழி ” வைஷூ பிளிஸ் டி எல்லாரும் பாக்கறாங்க விட்டிடுடி … அவர்தான் அவரு செஞ்சதுக்குதான் சாரி கேட்டாரே ! போதும் டி”வைஷாலி

ஹேய் இப்போ நான் அடிச்ச உடனே தானே சாரி கேட்டான். அதுக்கு முன்னாடி எப்படி கேவளமா பேசினான் … பொண்ணுங்கன்னா என்னவேனாலும் பேசலாம்ணு நினச்சிக்கிட்டு இருக்கான் …இவன விட சொல்றியா? ” வைஷூ

“சரிடி அங்க பாரு டிராபிக் போலிஸ் அவரு இங்கதான் வராரு வா நாம போய்டலாம்”வைஷாலி

அய்யோ அய்யோ அவன்மேல இருக்க கோவத்த விட உன் மேலதான் கோவம் அதிகமா வருது … போலீஸ் வந்தா என்ன?அவன் மேலதானே தப்பு நாம ஏன் போகனும் ? இதுக்கு எல்லாம் பயப்பட கூடாது ஷாலு” வைஷூ

இது முடியாது என்று நினைத்தவள் வைஷூவை இழுத்துக் கொண்டு சென்றாள் வைஷாலி

“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது”வைஷூ

வண்டியை எடுத்துக்கொண்டு அன்றைய கோட்டவான ஒரு சண்டையை முடித்துக்கொண்டு அடுத்த சண்டையில் ஈடுபடாமல் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்

தோழியின் திருமணம் பெங்களூரிலேயே நடப்பதால் தன் வீட்டிற்கே வந்து சேர்ந்தாள்.

மனதினில் காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க “வைஷூ இப்ப எப்படி இருக்குடா தலைவலி என்று கேட்டுக்கொண்டு வந்தார்” உஷா .

சட்டென்று சகஜநிலைக்கு திரும்பியவள் “இப்ப கொஞ்சம் பரவயில்லை அத்த உங்க காபிக்கு ஈடு இணை இருக்கா? … தலை வலி இருக்க இடமே தெரியலை”வைஷூ

“போடி வாலு உன்னை போலவே உன் பொண்ணு அவ பேசுறதே உன்னை பார்த்துதான்” என்று சொல்லி சிரித்தார் உஷா

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here