பிரியும் போது புரியும் —குறுங்கதை

0
179

அன்று மனநல ஆலோசகர் ரங்கராஜன் .நீதிமன்றத்தில் இருந்து கவுன்சிலிங் பெற அனுப்பி வைத்த இளம் தம்பதியினர் அசோக்–அபர்ணா சம்மந்தப்பட்ட பைலை படித்துவிட்டு இருவரையும் தனிதனியாக பேச விரும்பினார் .முதலில் அபர்ணா வாடிய முகத்துடன் வந்து அமர்ந்தாள்.அப்போது ரங்கராஜன் “எந்த பிரச்சனையா இருந்தாலும் நீ மறைக்கவும் வேண்டாம்.தயங்கவும் வேண்டாம்.உன் முன்னாடி இருக்குறது உன் அப்பான்னு நினைச்சுட்டு சொல்லும்மா”என்றதும் வடிந்த கண்ணீரை துடைத்து கொண்டு பேச ஆரம்பித்தாள் .

“எனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் தான் ஆகுது .பெத்தவங்க பாத்து கல்யாணம் செஞ்சு வச்சாங்க.கல்யாணத்துக்கு அப்புறம் என் வாழ்க்கை சொர்க்கம் மாறி இருந்துச்சு .என் புருஷன் என்னை அவ்ளோ லவ் பண்ணுனார்.ஒவ்வோரு நிமிஷமும் என்கிட்ட அவ்ளோ பிரியமா இருப்பார் .என் மாமனாரும் மாமியாரும் சொந்த பொண்ணு மாதிரி பாத்துக்குறாங்க.இரண்டு மாசமா என் புருஷன்ட்ட திடீர் மாறுதல் .என்னை வெறுக்குறார்.திட்டுறார்.நான் பக்கத்துல போனாலே விலகி போயிடுறார்.ஒரு நாள் புல்லா குடிச்சிட்டு வந்து”நீ என்னை விட்டு போயிரு.உன் கூட செத்துருவேன் “அப்படின்னு சொல்லிட்டார் .அவர் மனசு மாறும்னு தோணல .ஆனா அவர எனக்கு ரோம்ப புடிக்கும் சார் “என்று தேம்பி தேம்பி அழுதாள் .

சின்ன இடைவேளைக்கு பிறகு அசோக் அழைக்கப்பட்டு”நீங்க பேசுற எந்த விஷயமா இருந்தாலும் அது ரகசியம் காக்க படும் .ஆனா அது உண்மையா இருக்கணும் “என்றதும் அசோக் நிமிர்ந்து “எல்லா வீட்டுக்கும் கல்யாணம் முடிஞ்சதும் ஒரு பொண்ணு புதுசா வரும்.என் வீட்டுக்கு வந்தவ தேவதைகள்.அவளோட தலைமுடியில் இருந்து கால் விரல்கள் வரை நான் இதுவரை மனசுக்குள்ள கற்பனை செஞ்சு வச்சிருந்த ஒரு உருவம் .ஏழு ஜெண்மம் தொடர்ந்து இறப்பே இல்லாம வாழ சொன்னாலும் சலிப்பே இல்லாம ரசிச்சு வாழ்ந்திருப்பேன்.ஆனா என்னால முடியல.எனக்கு கேன்சர் இருக்கு.இரண்டு மாசத்துக்கு முன்னாடி தான் தெரிஞ்சது .எல்லா டாக்டரிடம் போய் செக் பண்ணிட்டேன் .கட்டுப்படுத்த முடியும் .குணப்படுத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்க .நானே சாவோட போராட்டி இருக்கேன் .என் பொண்டாட்டி என் சார் கஷ்டப்படணும்.அவள ரோம்ப லவ் பண்றேன் சார் .அதனால தான் அவள என் வாழ்க்கையில் இருந்து அனுப்புறேன் .அவ வாழ்க்கையாவது நல்லா இருக்கட்டும் .உண்மையான நிலைமையை சொன்னா போக மாட்டா.சார் அவள பிரிச்சு விட்ருங்க சார்.அவ பாவம் சார் “என்றவன் கேன்சர் சர்ட்டிபிகேட்களை அவரிடம் கொடுத்து அழ தொடங்கினான் .

கோர்ட் இருவருக்கும் விவாகரத்து அளிக்க சம்மதித்தது.அபர்ணா அழுத படி ஆட்டோவில் ஏறி தனது பெற்றோருடன் சென்றபிறகு மழை பலமாய் பெய்தது.அமைதியா மழையோடு பேசி கொண்டிருந்தவனிடம் வந்த ரங்கராஜன் “ரோம்ப நல்ல பையன்டா நீ.நீ எல்லாம் சாகமாட்டா பாரு .உலகத்துல சில நோய்கள முற்றிலும் குணப்படுத்த மருந்து கண்டுபுடிக்க மாட்டாங்க .ஏன்னா இது மிகப்பெரிய மருத்துவ வணிக வளாகம்.நம்ம எல்லாம் வாடிக்கையாளர்கள் அவ்ளோ தான்.அவன் கொடுக்குற மருந்துல நம்ம இயங்கனும் சாவுற வரையில் .நீ போய் டிரிட்மெண்ட் பாரு .குணம்மானதும் உன் தேவதையை தேடி போ.சத்தியமா அவளும் உனக்காக மட்டும் காத்திருப்பா”என்று கிளம்பினார் .

டாக்டரின் ஆலோசனை படி ஆஸ்பத்திரில அட்மிட் ஆக முடிவு செய்தான் .அவன் கிளம்பும் போது அபர்ணாவின் ஒரேயொரு சேலை,போட்டோ ,ஏராளமான நினைவுகளுடன் கிளம்பினான் .

[முற்றும் ]

நன்றிகள் !
வணக்கங்களுடன் !

நான்
உங்கள்
கதிரவன் !

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here