உன்னை
பார்த்த நாள் முதலாய்- என்
பசியும் என்னை மறந்தது !!!என்
நினைவும் உன்னை தாங்கியது!!!என் விரல்கள் உன்னை ஸ்பரிசிக்க ஏங்கியது!!!
அப்பாவின் எச்சரிக்கை மழையையும் அம்மாவின் அறிவுரை புயலையும் சகாக்களின் பொறாமை ஆற்றையும் தாண்டி
தம்பி தங்கைகளின் ஆசை அழைப்பையும் தாங்கி
உனை அழைத்தேன் !!!
என் கை பிடித்து
நீ என் வீடு வந்தாய் !!!
என் உலகமே நீ என்றானாய்!!!
காலையில் விழிக்கும் முன்
உன் குரல் என் செவியினில் ;
இரவிலும் விழித்தேன் உன்
குறும்பான கண் சிமிட்டலில் ;
நாள் முழுதும்
என்னருகே நீ;
உன்னருகே நான் !!!
உன் மூலம்
உலகறிய ஒரு ஜென்மம்
போதாது!!!
உன் துயிலின் போது
என் ரகசிய தொடுகையால்
கண் திறக்கிறாய்!!!
ஒவ்வொரு
தீண்டலுக்கும்
ஒவ்வொரு
முகம் காட்டுகிறாய்!!!
நீ இல்லாத இத்தனை நாட்களில்
எப்படி ஜீவித்தேன் !!!
தெரியாமல் தவித்தேன்!!!
உன்னுள் என்னை இழந்தேன்!!!
இப்படிக்கு,
(அலைபேசியில் )உன்னில் இருந்து
மீட்டெடுக்க வழியிருந்தும்
மனம் இல்லாமல் தவிக்கும்
நான்…..!!!!