உலகில் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் புனுகுப் பூனையும் ஒன்றாகும். இந்த பூனைகள் 12-க்கும் மேற்பட்ட வகைகளில் இருப்பதாக விலங்கியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பல வகையான புனுகுப் பூனைகள் உள்ளது. ஆனாலும் ஆப்பிரிக்க புனுகுப் பூனைகள் தான் மிகவும் பிரபலமானவை.
தமிழகத்தில் மரநாய் எனும் பெயர் புனுகுப் பூனைக்கு உண்டு. புனுகு என்பது அந்த பூனையின் வால் பகுதியில் உள்ள இரண்டு சுரப்பிகளில் சுரக்கும் ஒரு வகை வாசனைக் கலந்த திரவமே.
இந்த பிசின் போன்ற திரவம் தான் புனுகு பூனையின் இனப்பெருக்கத்துக்கு உதவுகிறது.
புனுகுப் பூனையின் கழிவுகளை வாசனைத் திரவியங்கள், புகையிலை பொருட்களின் நறுமணத்தை அதிகரிக்கவும், மருந்துப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர்.
இந்த புனுகு பூனையின் கழிவில் இருந்து தயாரித்த வாசனை திரவியத்துடன் குங்குமப்பூ, சந்தனம், கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து திருப்பதி கோவிலில் வெங்கடாஜலபதி சிலைக்கு பூர்ணாபிஷேகம் செய்ய பயன்படுத்துகின்றனர்.
அதுவும் உலகின் விலை உயர்ந்த காபியான லூவா (Luwak) காபி புனுகுப் பூனைகளின் கழிவுகளில் இருந்து தான் வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகிறது.
இந்த புனுகுப் பூனைகள் காபி பழங்களை விழுங்கிய பின் அதன் கொட்டைகளை கழிவுகள் மூலம் வெளியேற்றும்.
அந்த கழிவுகளில் இருந்து வெளியேறும் கொட்டைகளை சுத்தம் செய்து அதை காபித் தூளாக பயன்படுத்துகிறார்கள்.
வெளிநாடுகளில் இவ்வகை காபித் தூளின் ஒரு கிலோ விலை ரூபாய் 20,000 இருந்து 25,000 வரையாக உள்ளது.