பெண்களுக்கு

0
4

பெண்களுக்கு

அலைபேசியில்
ஆறு மணி
அலாரம்
ஆறு முறை
அலறியதும்
அலறியடித்து எழுவதற்கு பதில்
அலாரம் வைக்காமல்
அதே
ஆறு மணிக்கு எழுந்தால்
அது ஞாயிறு…..

அவசரமாக போடும்
அழகிய 2 புள்ளி கோலத்துக்கு பதில்
அட்டகாசமாக கோலம் இட்டு
ஆசையோடு நின்று ரசித்தால்
அது ஞாயிறு….

இஞ்சி டீ யின்
இனிமையை ருசிக்க எண்ணி
ஏடு படிய விட்டு
ஈ மொய்க்கும் முன்
வாய்க்குள் ஊற்றுவதற்கு பதில்
இஞ்ச் இஞ்சாக தொண்டைக்குள்
இறக்கினால்
அது ஞாயிறு…..

அழகிய கூந்தலை
அழுந்த வாரி போடும்
அடுக்குபின்னலுக்குபதில்கொண்டையாக
அள்ளி முடிந்தால்
அது ஞாயிறு…

அடுக்கு டப்பாவில்
ஆறிய சாப்பாட்டுக்கு பதில்
ஆவி பறக்க
அன்னமதை
அள்ளி உண்டால்
அது ஞாயிறு…..

கைப்பையோடு
கடைகளை
கடந்து
காய்கறி பையும்
கட்டைப்பையில் மளிகையையும்
கையில் சுமந்து
காய வேண்டிய துணிகளையும்
தேய்க்க வேண்டிய பாத்திரங்களையும்
முடிக்க வேண்டிய வேலைகளையும்
எண்ணி எண்ணி வீட்டை
வலம் வந்தால்
அது ஞாயிறு……

மாலை வந்ததும்
மறுநாளைப் பற்றிய
மலைப்பு
மனதில் வந்தால்
அது ஞாயிறு…..

வாரா வாரம்
வரும் ஞாயிறு!!!
வராது ஓய்வு!!!
பெண்களுக்கு!!!

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here