பெற்றோர்கள்

0
26

ஒரு நாள் தந்தையை ஒரு உயர்தர ரெஸ்ட்டோரண்டுக்கு அழைத்துச் சென்றான் மகன். தந்தையோ வயது முதிர்ந்தும் கொஞ்சம் இயலாமலும் இருந்தார்.

அவர் சாப்பிட்டுகொண்டிருக்கும் பொது பலவீனமாக இருந்ததால் சோற்றுப் பருக்கைகளும் உணவுத்துண்டுகளும் அவரது சட்டை ஜீன்ஸ் மேலும் தரைமேலும் விழுந்து கொண்டிருந்தது. பக்கத்திலிருந்து சாப்பிடுவோர் இதைப்பார்த்து தங்கள் முகத்தைச் சுழித்துக் கோணல்மாணல் ஆக்கி மகனைப்பார்த்து முறைத்துக்கொண்டு இருந்தனர்.

ஆனால் மகனோ மிகவும் அமைதியாக அப்பா சாப்பிடுவதையே பார்த்துக்கொண்டிருந்தான். இருவரும் சாப்பிட்டு முடித்ததும் மகன் எந்தத் தயக்கமும் இல்லாமல் தனது தந்தையை ஓய்வு அறைக்கு அழைத்துச்சென்று அவரது முகத்திலும் ஆடையிலும் ஒட்டி இருந்த உணவுப்பருக்கைகளை துடைத்துக் கழுவி, அவரது தலையை வாரி அவரது கண்ணாடியையும் துடைத்து அவருக்கு மாட்டினான்.

இருவரும் ஓய்வு அறையில் இருந்து வெளியில் வர ரெஸ்ட்டோரண்ட் மிக அமைதியானது. மகன் கவுண்டருக்குச் சென்று பில்லிற்ற்கு பணம் செலுத்தி தனது தந்தையை கவனமாக அழைத்துச் செல்ல தயாரானான்.

அப்போது அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் எழுந்து “எதையாவது விட்டுவிட்டுச் செல்கிறீர்களா” என்று கேட்டார்.

மகனோ “இல்லையே நான் எதையும் மிஸ்பண்ணவில்லை” என்றார்.

அதற்கு அந்த மனிதர் “இல்லை நீங்கள் இங்கு சிலதை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்; இளையோருக்கு ஒரு பாடத்தை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள் அத்தோடு எல்லாப் பெற்றோருக்கும் நம்பிக்கையை விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்”. என்றதும் அந்த ரெஸ்ட்டோரண்டே மிக அமைதி ஆனது.

மிகப்பெரிய மதிப்பு என்னவென்றால் நம்மை கவனமாகப் பார்த்துக்கொண்ட வயது முதிர்ந்தோரை நாமும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் திறமைதான்.

நமது பெற்றோரும் முதியோரும் தங்களது வாழ்வின் நேரத்தை, பணத்தை, நிபந்தனையற்ற அன்பை நமக்காகத் தியாகம் செய்ததோடு நம்மை மிகுந்த மரியாதையோடு பார்த்துக்கொண்டார்கள். நாமும் அவர்களை நன்கு பார்த்துக்கொள்வோமே!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here