மகிழ்ச்சி.!!!

0
59

சித்திரை முதல் நாள் !!!மகிழ்ச்சி பொங்கும் திருநாள்!!!

என்ன எழுதலாம் னு யோசிச்சிட்டு இருந்தப்ப தோன்றின விஷயம்….To throw some positive vibes….னு
“நம் சந்தோசம் நம் கையில்” நம் மனதை மகிழ்ச்சியாக வைத்திருப்பதும் ஒரு கலை தான்!!!நம்ம சந்தோசத்துக்கு மத்தவங்கள எதிர்பார்த்துக் காத்திருக்க கூடாது…..

யாரையாவது சந்தித்தால் நாம் சந்திக்கும் முதல் கேள்வி எப்படி இருக்கீங்க??? அதுக்கு வித விதமான பதில்கள்!!! “சூப்பரா இருக்கேன்”,
” நல்லா இருக்கேன் இருக்கேன்”,
“என்னத்த, நல்லாவே இல்ல” ,
“ஏதோ இருக்கேன் பா “….இப்படி பதில்கள் வரும்…
இதில்தான் சூட்சமமே இருக்குன்னு நான் நினைக்கிறேன்.. நாம எப்படி இருந்தாலும் வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டாலும், யாராவது எப்படி இருக்கீங்க ன்னு கேட்டா நான் நல்லா இருக்கேன் சூப்பரா இருக்கேன்னு சொல்லி பாருங்க ,மகிழ்ச்சி தானா வரும்…..

வாழ்க்கைங்கிறது காற்று மாதிரிங்க எங்கும் நிறைந்திருக்கிற காத்து மாதிரி இந்த காத்துல ஊதுபத்தி வாசனை வருவதும் சாக்கடை வாசனை வருவதும் நம்ம எண்ணத்தைப் பொறுத்து தான்…. “எண்ணம் போல் வாழ்வு!!!” என்று சும்மாவா சொன்னாங்க பெரியவங்க…. நமக்கு ஒரு கஷ்டம் வந்தா ஏன் எனக்கு மட்டும் கஷ்டம் வருது.. நான் மட்டும் வாழ்க்கை பூரா கஷ்டப்படுறேன் நினைக்காதீங்க கஷ்டத்துக்கு தீர்வு என்ன என்று யோசியுங்கள்… தீர்வுக்கான கதவை தட்டாமல் அது பூட்டியிருக்கும் நினைக்காதீங்க… அது பூட்டுப் போட்டு பூட்ட படாமல் சாத்தியிருக்கலாம்.. ஒருவேளை பூட்டியிருந்தால் ஒரு ஜன்னல் இருக்காதா இல்ல ஒரு வென்டிலேட்டர் ஆவது இருக்காதா….

” நல்லதே நினை நல்லதே நடக்கும்”

” நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்”

அதனால மக்களே,” Be happy” .
நம் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி ஆரம்பமாகட்டும் மகிழ்ச்சி பரவட்டும் மகிழ்ச்சி நிலைக்கட்டும் !!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here