மந்திரமென்ன மங்கையே ? – 6

0
159

மந்திரம் – 6

” ஏய் துஜா , என்னடி எந்த நேரத்துல இங்க வந்துட்ட?” என்று சாரு வினவ , “முக்கியமான விஷயம் டி ” என்று சொல்லி அவளை ஓரமாக தள்ளி கொண்டு போனால் துஜா .

சாருவின் கணவன் ருபேஷும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை . அடிக்கடி இது எல்லாம் சகஜம் தான் . “இந்த துஜா ஏதாவது புதிதாக சாப்பிட்டு இருப்பாள் ..அது தான் அவளை பொறுத்தவரை முக்கியமான விசியம் ” என்று எண்ணிக்கொண்டே அவனும் அறைக்குள் சென்றுவிட்டான் .

“என்னடி ?” என்ற சாருவிடம் அந்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை நீட்டினாள் துஜா . “யாரடி இவன் ..உனக்கு ஏதும் பாடிகார்டு தேடுறியா என்ன?” என்றவள் கேட்க …”பக்கி ..எனக்கு பாத்துருக்க மாப்ள டி ” என்று எரிந்து விழுந்தால் துஜா . ” என்னது மாப்பிள்ளையா ?” என்றவள் முழிக்க ,”ஆமா பாக்க நல்லா இருகாருல ..எனக்கு ஏதோ பாத்ததுமே புடுச்சுருச்சு டி” என்ற துஜாவை நம்பமுடியாமல் பார்த்தாள் சாரு .

அந்த போட்டோவையும் துஜாவையும் மாறி மாறி பார்த்தவள் , ” நீ நல்லா தான இருக்க , இல்ல லூசு எதுவும் ஆகிடியா ?” குழப்பம் அவள் குரலிலேயே வெளிப்பட்டது . ” ஏண்டி அப்படி கேக்கற ?” என்று தாங்கலாக வினவிய துஜாவிடம் , ” இல்ல …இவன் போட்டோலேயே ஆளு கரடு முரடா இருக்கான் ..கொஞ்சம் பயம் தான் வருது …நீயோ பாத்தாலே புள்ளப்பூச்சி மாறி இருக்க …இவன புடுச்சுருக்குனு நீ சொல்றத என்னால நம்ப தான் முடியல ” என்றவள் நீட்டி முழக்கி கூறவும் , ” தெரியல டி எனக்கு புடுச்சுருக்கு …உனக்கு பிடிக்காட்டி போ ..நா என் ஆள கட்டிக்குவேன் ” என்றவளை அணைத்துக்கொண்டாள் சாரு .

‘சும்மா விளையாட்டுக்கு தான் டி சொன்னேன் ..ரெண்டு பேரும் நல்ல மேட்ச் டி ..அதுலாம் இருக்கட்டும் ..அய்யா எந்த ஊரு ?” என்றவள் கேட்க ,”அய்யையோ அதுலாம் கேட்கலையே டி …சரி நா போய் இன்போர்மஷன் கேதர் பண்றேன் ….நாளைக்கு மீட் பண்ணுவோம் ..ஓகே வா ” என்றுவிட்டு வேகமாக ஓடிய துஜா , அதே வேகத்தோடு மீண்டும் வந்து அவள் கையில் இருந்த அவளின் மனம்கவர்த்தவனின் போட்டோவை புடுங்கி கொண்டு ஓடினாள் .

” ம்ம்ம் ..மேடம்க்கு பத்திக்கிச்சு …” என்று எண்ணி சிரித்துக்கொண்டே சாருவும் அவள் வேலையை பார்க்க சென்றுவிட்டாள் .

வீட்டினுள் நுழைந்த துஜாவை ” எங்கடி ஓடிட்டு வர ?’ என்றவள் அம்மா
விசாரணை செய்ய , “வேற எங்க அத்தை …மாப்ள போட்டோ கைல இருக்குல்ல ..சாருவ பாக்க தான் போயிருப்பா ” என்றபடி அங்கே வந்தார் ஜானவி . ” அண்ணினா அண்ணிதான் ” என்றவள் கன்னத்தை பிடித்து கிள்ளி விட்டு உள்ளே ஓடினாள் துஜா .

” என்ன மாமியாரும் மருமகளும் என் புள்ளய வேடிக்கை பாத்துட்டு நிக்கறீங்க ?” என்று கேட்டபடி துரைமுருகனும் வர , ” அப்பறம் …எட்டாவது அதிசயமா உங்க மக வெக்க பட்டா ….வேடிக்கை பாக்காமா ?” என்று கூறி நகைத்தார் பத்மா . ” அப்போ இந்த இடத்தையே முடுச்சிரலாம்னு சொல்ற” என்றவர் கேட்க ” மாமா ..நல்லா விசாரிச்சுடீங்களா ?” என்று கேட்டாள் ஜானவி .

“மாப்ள ஜாதகம் வந்த அன்னிக்கே விசாரிக்க தொடங்கிட்டேன் மா ..குடும்பமும் நல்ல குடும்பம் ..மாப்பிள்ளை பத்தியும் தப்பு தவறா ஏதும் இல்ல ..நல்ல வேல , நம்ம அந்தஸ்துக்கும் பொருந்தி வருது ” என்றவர் விளக்க ..” எல்லாம் பொருந்தி வந்து , நம்ம துஜாக்குட்டிக்கும் ஓகே னா நாம சீக்கிரமே முடுச்சுரலாம் மாமா ” என்றவள் மகிழ்ச்சியோடு கூறினார் .பத்மாவும் துரைமுருகனும் அதை ஏற்றுக்கொண்டனர் .

இரவு உணவின் போது , “மாப்ள பத்தி எப்படி விசாரிக்கிறது ?’ என்ற குழப்பத்தோடு துஜா சாப்பாட்டை அளக்க , ” என்ன ஜானு ..உன் புருஷனுக்கு விஷயத்தை சொல்லிட்டாயா ? நாலா நாளைக்கு துஜாவ பரிசம் போட வராங்கனு ?” என்று துரை வினவ , துஜாவிற்கு புரை ஏறியது .

“அதுக்குள்ளவா ?” என்றவள் கேட்டு வைக்க , ” ஏன் உனக்கு மாப்பிள பையன புடிக்கலையா?” என்று எடக்காக அவர் அவளை கேட்டார் . ” அப்படி இல்ல பா ..இன்னிக்கு தான வந்தாங்க ..” என்றவள் தயங்க ” நீ இன்னிக்கு தான் பாத்தா ” என்று மேலும் அவளுக்கு அதிர்ச்சி குடுத்தார் அவர் .

அவளின் முசுட்டு தனம் தலைதூக்க ” அப்பப்பா …ஏன் என்கிட்ட முன்னமே சொல்லல ..எதுக்கு என்கிட்ட இருந்து மறைச்சீங்க ? ” என்றவளின் கோவத்தை கண்டுகொள்ளாமல் ” சரி பத்மா ..உன் புள்ள பேசறதை பாத்தா ..அவளுக்கு இஷ்டம் இல்ல போல ..நீ அவங்களுக்கு போன் போடு ” என்று கறாரான குரலில் கூறினார் அவர் .

” அய்யயோ ” என்று பதறியவள் ” என்னமோ பண்ணுங்க …நா ஒன்னும் புடிக்கலைனு சொல்லல ” என்றுவிட்டு பாதி சாப்பாட்டோடு எழுந்துஉள்ளே சென்றுவிட்டாள் . அவளுக்கு உறக்கம் வரவில்லை . ” அவன் ஓகே தான் ..ஆனா அவனை பத்தி எதுவுமே தெரியாதே ..அவன் பேரு கூட தெரியாம பரிசமா …ஏன் இந்த அப்பா இப்படி பன்றாரு ? ” என்று குழம்பியவள் அப்படியே உறங்கியும் விட்டாள் .அடுத்த நாள் காலை எழுந்து கெளம்பியவளை பிடித்துக்கொண்டார் பத்மா .

“எங்கடி போற ? நாளைக்கு பரிசம் போட வராங்க ..மறந்துட்டியா ? அந்த வேலைய பாக்க வேணாமா ? போ நீயும் உன் அண்ணியும் போய் ப்ளௌஸ் தெச்சுட்டு பார்லர் போயிட்டு ..அந்த வேலைலாம் பாருங்க ” என்று சொல்லி அவளை உள்ளே அனுப்பிவிட்டார் .

துஜாவை காண்பதற்காக ஆவலாக அன்று மாலை கலாகேந்திராவிற்கு சென்றவனுக்கு ஏமாற்றமே . அவளை காணாமல் அவன் தவிப்போடு செல்வதை கவனித்த சாருவிற்கு , அவன் மீது இரக்கம் தோன்றியது .அவனை பின்தொடர்ந்து ஓடியவள் ” வசீகரன் ” என்று அழைக்கவும் , திரும்பியவன் அங்கே சாருவை கண்டதும் ” துஜா ? ” என்று ஒற்றை கேள்வி மட்டும் கேட்டான் . ” நீங்க அவ பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட் பண்ணாதேங்க சார் ,நாளைக்கு அவளுக்கு எங்கேஜ்மெண்ட் ” என்று மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாள் சாரு .

நம்பமுடியாத செய்தியை கேட்டவன் போல உறைந்து நின்றான் வசீ .

Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here