அன்றைய நாளில் பத்தாவது முறையாக மொபைலில் வாட்ச்சப் செய்தியை பார்வையிட்டாள் மிருதுளா.. அதனை அடுத்து மெசென்ஜரில் தனியாக செய்தியை அணுப்பினாள்…
ப்ளீஸ் சூர்யா நீ எங்கே இருக்கற… எனக்கு பயமாக இருக்கு. தயவு செய்து உடனே பதில் தா… ஏற்கனவே இது போல பல முறை தகவல் அனுப்பி இருக்க.. பார்த்ததிற்கான அடையாளம் எதுவும் இல்லை. இதையாவது பார்ப்பான் என நினைத்து அணுப்பி இருந்தாள்.
அடுத்தது எஃப் பி பேஜை ஓபன் செய்தவள் அவனது குரூப்பில் ஏதாவது தகவல் இருக்குமா என தேட அதிலும் பெரிதாக எதுவும் இல்லை. இன்றோடு அவனின் அடையாளம் தொலைந்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் முடிந்து இருந்தது. சோஷியல் மிடியாவில் எப்போதும் அக்டிவாக இருப்பவனால் எப்படி தன்னுடைய மொத்த அடையாளத்தையும் மறைத்து விட்டு காணாமல் போக முடியும். இதுவரை அவனை யாராவது தேடுகிறார்களா என்றால் அப்படி யாரும் தேடியதாக தெரியவில்லை அவளை தவிர…
அவன் யாருக்கு தகவல் சொல்லாமல் விட்டாலும் இவளிடத்தில் சொல்லாமல் எங்காவது செல்வான் என சிறிதும் இவள் யோசிக்க வில்லை… ஒரு வேளை இவள் தான் அவரிடத்தில் அதிகமாக சலுகை எடுத்து கொண்டாளோ!!!
அப்படியும் சொல்ல முடியாதே அவளை பார்க்கையில் அவனது பார்வையில் தோன்றும் சிரிப்பு கண்களில் தோன்றும் ஆவல் இதை வேறு யாரிடமும் கண்டதில்லையே… இத்தனைக்கும் அதிகமான நாட்கள் கூட அவனை கண்டதில்லை. வருட கணக்காய் தெரிந்தவன்தான். ஆனாலும் அவ்வளவாக அவனை தெரிந்து கொள்ள தவறி விட்டாளோ!!!
சில நிகழ்ச்சிகளுக்கு இவளும் கூட கலந்து கொண்டடருந்தாலே அதுவும் கூட அவனின் மேல் இருந்த மரியாதையால்…எதோ ஒன்று அவளை கட்டிப்போட்டு அவன் எங்கெங்கு செல்கிறானோ அங்கெல்லாம் அவளும் அல்லவா பின் தொடர்ந்து கொண்டிருந்தாள். சில நாட்களாக… என கூறியும் விட முடியாது கிட்டத்தட்ட மூன்று வருடமாய் இவளது தாய் தந்தை இருந்த போதே…
அதுவும் அவளது தாய் தந்தை இறந்த அன்று அவன்தானே முன் நின்று அத்தனை காரியங்களையும் செய்தான். இவளது தமையன் சிறியவன் தான் அவனால் அந்த நேரம் என்ன செய்வது என தெரியாமல் நிற்கையில் அத்தனை பொறுப்பாக எடுத்து நடத்தியவன் அல்லவா… அது தான் அவனை இன்று இப்படி தேட சொல்கிறதோ..
இவளுக்கே நிறைய குழப்பம் தானே அவனிடம் இவள் கொண்ட அன்பை பற்றி… ஒவ்வொரு முறையும் இவனது தம்பி இவளுக்கு அறிவுரை கூறிக்கொண்டு தானே இருக்கிறான்
இன்றலவும் இவள் தான் காதில் வாங்குவதே இல்லையே…
ஏன் இவளது தம்பி ப்ரவினுக்கு அவனை பிடிக்கவில்லை… இனறலவும் இவளுக்கு தெரியாதது. எப்போது கேட்டாலும் அவன் கூறுவது இதை தான். ..
அக்கா அவனோட பார்வையில் உண்மை இல்லை. நிச்சயமாக அவன் நல்லவன் இல்லை. அவன் இப்படி கூறும் போது எல்லாம் அவனோடு சண்டை மட்டுமே போட்டு கொண்டிருந்தாள்.
இவர்களது தாய் தகப்பன் இறந்த பிறகு இவளிடம் அவனை பற்றி பெரிதாக குறை கூறுவது இல்லை என்றாலும் அவனது மனநிலை பழையது போல் தான் இருந்தது என்பது இப்போதைய பேச்சில் ஞாபகம் வந்தது.
அக்கா காணப் போணா போகட்டும் தொல்லை விட்டதுன்னு நிம்மதியாக இரு… இரண்டு நாட்கள் முன்பு கூறவும் கோபமாக திட்டியவள் இரண்டு நாட்களாக அவனிடமும் பேசாமல் சுற்றிக் கொண்டு இருந்தாள்.
இவளை விடவும் மூன்று வயது சிறியவன் இவனது தம்பி பர்வின் இரண்டு வருடம் முன்பு தாய் தந்தை இறந்தபோது அவன் பதினோன்றாம் வகுப்பில் இருந்தான். இவளோ காவேஜ் இரண்டாம் வருடத்தில் இருந்தாள். தற்போது படிப்பை முடித்திருக்க தனியார் நிறுவனத்தில் மாதம் பதினைந்தாயிரம் சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள்.
இன்றைக்கு இருந்தால் அவனது வயது இருபத்தி ஏழு இருக்குமா… அதற்குமேல் அவனது சமூகத்தின் மேல் இருந்த பார்வை பெரிது தானே
எத்தனை பேர்ல் பிறருக்காக போராட்டம் நடத்த முன் வருவர் அதுவும் தனக்கு எந்தவிதமான லாப நோக்கம் இல்லாமல்…
அது தான் அவளை அவனை திரும்பி பார்க்க வைத்ததோ.. இவள் கூட பல முறையும் அவளை கிண்டல் செய்திருக்கிறாளே… போராட்டம் சோறு போடாது தோழரே என…
அப்போதும் அவன் சளைக்காமல் பதில் சொன்னவன் தானே.. ஏன் நீ எனக்கு சோறு போட மாட்டாயா என…
பெயரை போலவே பிரகாசமானவன் தான். சூர்யா பேச்சு கூட அவன் பேச ஆரம்பித்தாள் கேட்பவரால் மறுத்து பேச முடியாது அது போல அழகாய் கோர்வையாக பேச்சு இருக்கும். அவன் கூறும் உதாரணங்கள் எதிராளியை யோசிக்க வைக்கும்… அது தான் அவனது இன்றைய மறைவுக்கு காரணமோ…
காரணமே இல்லாமல் பல எதிரிகளை சம்பாதித்து இருந்தவன் தானே…அது தான் இன்றைய நிலைக்கு காரணமா..
இன்றும் மனம் ஏதேதோ நினைக்க எழுந்ததில் இருந்து வேலைக்கு புறப்படும் எண்ணம் இன்றி உட்கார்ந்து இருக்க… அவளது தோளின் மேல் ஆறுதலாக ஒரு கரம் விழுந்தது.
மயங்காதே..