மீளா உறக்கம்

0
46

தாய் வயிற்றிலிருந்து வெளிவந்து
தந்தை மடியில் உறங்கி
மண்ணில் தவழ்ந்து விளையாடி
மக்களோடு மக்களாக கலந்து நடை பயின்று

குடும்ப சுமைதாங்கி குழந்தை நலம் பேணி கோல் ஊன்றி குடை பிடித்து கொழுக்கம்பு தேடி – மீண்டும்

மண்ணில் தவழ்ந்து
மண்ணோடு மண்ணாக
பூமித்தாயின் வயிற்றில்
“ மீளா உறக்கம்” கொண்டோம் – அதற்கு
மரணம் என பெயரிட்டோம்.

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here