ஆணுக்கு அழகு
ஆளுமை
என்றே இருந்தேன்
உன்னை
காணாதவரை…
அமைதியும்
அழகே என்று
உணர்த்தினாய்
உன் வாய்
திறவாமலேயே!!!
குயிலின் குரலை
பெண்களோடே
ஒப்பிட்டுவிட்டான்
முட்டாள் கவிஞன்
உன் குரலிசையை
கேட்காமலேயே!!!
கருமை நிறம்
கொண்டவர்கள்
பெண்மையை
ஈர்ப்பவர்களாம்..
பால்போல் தேகம்
கொண்டே
குழந்தையாகி
அனைவரையும்
ஈர்க்கின்றாயே!!!!
அத்தனை
முரண்பாடுகளும்
ஒத்துப்போகின்றன
உனக்கு…
உன் புன்னகை
போலே
முரணும் கொள்ளை
அழகு உன்னிடத்தில்!!!!!
Facebook Comments