மேகத்தில் ஒன்றாய் நின்றோமே

0
389

” அம்மா சின்னு ….. ரெடி ஆகிட்டியா ??? ” என்று கேட்டபடியே மகளை தேடி அவளது ரூமினுள்ளே வந்தார் செண்பகம்மாள் ……..

செண்பகம் : சீக்கிரம் ரெடி ஆகு ..இன்னைக்கு ஏதோ மீட்டிங்க்கு சென்னை போறதா சொன்ன ….. எத்தனை மணிக்கு ட்ரெயின் ????”

சின்னு : 11 மணிக்கு தான் ட்ரெயின் …..

செண்பகம்: உன்னை அப்பாவை ட்ரோப் பண்ண சொல்லட்டுமா ???? “

சின்னு : இப்போ உனக்கு என்னமா பிரச்சனை …என்னை பாத்துக்க எனக்கு தெரியும் ..நானே ஸ்டேஷன் போய்டுவேன் ….. என்னை டிஸ்டர்ப் பண்ணாம வெளிய போங்க ப்ளீஸ் …….

அவளது பதிலை கேட்டு செண்பகம் ஒன்னும் பேசாமல் வெளியேறினார் …..

இப்படி பேசுற அளவுக்கு நம்ம ஹீரோயினிக்கு என்ன நடந்துருக்கும்ன்னு நெனைக்கிறிங்களா ????? பொறுமையா யோசிச்சு கெஸ் பண்ணுங்க …. உங்க கெஸ் கரெக்டா தப்பான்னு நான் இந்த கதையோட பின்வரும் பகுதியில் சொல்லுறேன் …….

செண்பகம் நடந்ததை தன் கணவர் சேகரிடம் கூறி வருத்தப்பட்டார் ….. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கீழிறங்கி வந்தவள் … இவர்களை திரும்பியும் பார்க்காமல் வெளியில் சென்றுவிட்டாள் …. தாயுள்ளம் அடம்பிடிக்க செண்பகம் வெளியே வந்து தனது மகள் சென்றுவிட்டாளா என்று பார்க்க …..அதற்குள்ளாக சின்னு டாக்ஸியில் ஏறி அமர்ந்திருந்தாள் ….. அந்த டாக்ஸி தெருமுனையை கடக்கும் வரை பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார் .. டாக்ஸியில் ஏறி அமர்ந்த சின்னுவின் மனம் ஏனோ இன்று அலைபாய துவங்கியது …சற்று நேரம் கண்மூடி அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்த முற்பட ….அந்த முயற்சியில் தோற்று தனது கடந்த கால நினைவுகளை புரட்ட துவங்கியது மனது ..

10 வருட காதல் …….. இணைந்தே இருப்போம் என்ற உறுதி …என்ன ஆயிற்று அவை எல்லாம் என்று யோசிக்க தொடங்கியவள் ……………. அன்றைய தினத்தின் நினைவுகளை புரட்ட துவங்கினாள் …. அழகான மாலை பொழுது ….உறவினரின் திருமணத்திற்கு கிளம்பிக்கொண்டிருந்த தனது தாயிடம்

சின்னு : அம்மா…. கோபுர பொட்டு வைங்க …இது நல்லாவே இல்லை……

செண்பகம் : என்ன டி உனக்கு பிரச்சனை ..நேரம் ஆகுது நாங்க கிளம்புறோம் ….நீயும் தம்பியும் பத்திரமா இருங்க …..2 மணி நேரத்துல வீட்டுக்கு வந்துருவோம் ……………… கிளம்பி சென்ற அவருக்கு தெரியாது இன்னும் சில நாட்களில் தனது மகளை தானே வருத்தப்போகிறோம் என்று …..

அடுத்த நாளும் விடிந்தது …அந்த விடியல் அவர்கள் எல்லோருக்காகவும் வைத்திருந்ததை அவர்கள் யாரும் அறியவில்லை….

அன்று காலை எழுந்த சின்னுவிற்கு ஏதோ மனம் சஞ்சலத்துடன் இருப்பதாகவே தோன்றியது ….. குளித்து முடித்து வெளியே வந்தபோதே கவனித்தாள் …. செண்பகமும் சேகரும் ஏதோ பேசிக்கொண்டிருக்க இவள் வெளியே வரவும் அவர்களது பேச்சு அப்படியே நின்றுவிட்டதை கவனித்தாள் …. ஏதோ அவளுக்கு தப்பாக தோன்ற ….. அப்பொழுது அவர்கள் இருவரும் உள்ளே சென்று பேச தொடங்கினர் ….. அவர்களின் பேச்சை வைத்து ஊகித்தாள் ……..

நேற்று இரவு அவர்கள் சென்றிருந்த திருமணத்தின்போது சின்னுவின் பெரியப்பா கூறிய வரனை இவர்களுக்கு பிடித்து அந்த திருமணத்திற்கான பிள்ளையார் சுழியாக அன்றைய பேச்சு இருப்பதை உணர்ந்து திடுக்கிட்டாள் …… திடுக்கிட்டாள் என்று சொல்வதைவிட ஸ்தம்பித்தாள் என்றே சொல்ல வேண்டும் …….

துரிதமாக செயல்பட தொடங்கினாள் ..நேராக தந்தையிடம் சென்றவள் ……அவளது காதலை பற்றியும் அவரிடம் கூறினாள்……

அதுக்கு அப்புறம் என்னங்க நடக்கபோகுது …எப்போவும்போல பெத்தவங்க சொல்லுற அதே டயலாக் தான் ….

உனக்கு எங்க 2 பேரு உயிர் முக்கியமா இல்ல அவன் முக்கியமானு முடிவு பண்ணிக்கோ ….. இதற்கும் அவள் நீங்க எந்த அளவுக்கு முக்கியமோ அதை விட ஒரு படி அவன் முக்கியம் என்று கூற ….. அதை எதிர்பார்க்காத அவளது தந்தை அவள் மீது அனலேந்திய வார்த்தைகளை உதிர்க்க தொடங்கினார் …

இதனை எதிர்கொள்ளாமல் அவள் தவித்து நிற்க ..அதையே சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவளது எண்ணிலிருந்து அவன் வேண்டாமென குறுஞ்செய்திகள் பறக்க தொடங்கின ….. இவற்றை அறியாத சுதிர் என்ன செய்வான் ……. மற்றவர்களை போல் தான் அல்ல என்பதை இப்பொழுதும் கச்சிதகமாக நிரூபித்திருந்தான்..

சரி ஓகே சின்னு ….பத்திரமா இரு …எல்லாரும் என்னைவிட்டு போறமாதிரி இருக்கு …நாலுநாளைக்கு முன்னாடி அப்பா என்னய விட்டுட்டு போய்ட்டாரு இப்போ நீயும் போற …. என்றதோடு நிறுத்திக்கொண்டான் அவன் …

அதுக்குமேல நம்ம ஹீரோயின் நார்மல் ஆஹ் தான் இருந்தாங்க அந்த நாள் வர வரைக்கும் …… அன்று ஏனோ சின்னுவின் மனம் கனத்தது ….. அவளையும் மீறி அடுப்பில் வைத்திருந்த எண்ணையில் தண்ணீர் துளிகள் தெறித்து அவளது முகமெங்கும் எண்ணெய்க்குமிழ்கள் அதன் வேலையை செம்மையாய் செய்திருந்தன ..

அதன்பின்பு அவளை மீட்டு சிகிச்சை அளித்தனர் …… அதன் பின்பே அவள் மனிதரின் உண்மையான முகங்களை சந்திக்க நேர்ந்தது …… அவளது இந்த கோலத்தினால் அவள் மனம் சலனமுற்றிருக்க அரை சதம் இருந்த எடை ஓர் மாதத்தில் அவளது எழுபதை எட்டியிருந்தது …… அதன் பின்பே அவள் மனிதர்களின் நிறங்களை உணர தொடங்கினாள் …… அந்த ஓர் மாத இடைவெளியில் மனம் ரணப்பட்டு இருக்க ..மேலும் அவளது மனதை காயப்படுத்தும் விதமாக அனைத்து நிகழ்வுகளும் அரங்கேறின ….. அவளது தாயே அவளது உடலைப்பற்றி பேச ஆரம்பிக்க அப்பொழுதே அவள் மனமுறிந்து போனாள் …..

நாட்கள் வெகுவேகமாக ஓட அவளுக்கென்றே கடவுள் அடுத்த அடியை இறக்கினார் ….. அதுவே அவளது தேர்வில் அவள் கண்ட தோல்வி …இதில் திளைத்திருந்தவளை பிழைக்க செய்வது அவன் வார்த்தைகளால் மட்டுமே முடியும் என்பதை அவள் உணர ஆரம்பித்தாள் ….. அவனோடு வாழ்வதைப்போல கற்பனையில் தொடங்கியவள் அவனோடு இருப்பதாகவே எண்ண தொடங்கி வாழ பழகியிருந்தாள் …முதல் விஷயமாக அவளது முகத்தை சரி செய்வதை அவள் நிறுத்தியிருந்தாள் …. அதன் பின்பு அவள் படிப்பிலும் அவளது சுதிரின்மீது மட்டுமே தனது எண்ணத்தை செலுத்தினாள் /…… 4000 ருபாய் சம்பளத்தில் வேளைக்கு சேர்ந்தாள் …. அவளது உணவை ஒரு நேரம் மட்டும் உட்கொள்ள தொடங்கினாள் …. காரணம் அவளது வாழ்க்கையை அவளே தீர்மானிக்க தான் தகுதியுள்ளவளாக இருக்க எண்ணினாள் …நாட்கள் நகர்ந்தது ….. அரை சதத்திற்கு வர வேண்டுமென எண்ணிய அவளது எண்ணம் அவளுக்கு நாற்பதை பரிசாக அளித்தது … அவளது தேர்வின்மீது காட்டிய ஆர்வத்தினால் …… அவள் அந்த தேர்வை முதன்மையில் எட்டியிருந்தாள் ….

ஆறு மாதங்கள் கடந்திருந்த நிலையில் … அவளது கனவை தேடி செல்லவே இந்த பயணம் …. ஆம் சுதிரை தேடியே இந்த பயணம் …அஸ்ஸாமிலிருப்பதாக அவனது நண்பன் கூறியதை அடுத்து அவனை காண ஒவ்வொரு இடத்திலும் தேடினாள் ….. ஆனால் கடவுள் அவளுக்கு அந்த முயற்சியில் அவனை காணும் வரத்தை அவளுக்கு அளிக்கவில்லை போலும் …. அவளது அந்த முயற்சி தோல்வியை தழுவ ….. வீடு திரும்பியவள் …. வேறு வாய்ப்பின்றி வீட்டில் அவளுக்கு பார்த்த வரன்களை பற்றி எதுவும் பேசாதிருந்தாள் ,…. தனிமை அவளை வாட்ட …… செய்வதறியாது வாடி நின்றாள் கோதை அவள் ….வந்த வரன்கள் அனைத்தும் அவளது முகத்தின் வடுக்களை குறைகூறி தட்டிக்கழிக்க …அவளது மனதின் வடுக்கள் மென்மேலும் ரணமாக தொடங்கின …..

3 வருடங்களுக்கு பிறகு ,

தன்னவளை காண வந்தான் அவன் …..அதுவும் நம்ம ஹீரோ இப்போ ஒரு நல்ல பொசிஷன் ல இருந்தாரு ….ஆமாங்க …நம்ம ஹீரோக்கு வேலை இல்லைன்னுதான் சின்னு வீட்டுல அவளை கல்யாணம் பண்ணிக்க விடல ….. அவளை கண்ட நொடி ..யாரும் எதிர்பார்க்காத சொற்கள் அவன் உதட்டின்வழி இவள் நெஞ்சில் இறங்கின ..

அவன் கேட்ட வார்த்தையில் அவள் கலங்கி வேகமாக ஓடிவந்து அவனை அணைத்துக்கொண்டாள் ….. இவர்களது இந்த நிலையை பார்த்த அவளது தாய்க்கு ஒரு கணம் மனம் ஸ்தம்பித்து நின்றது …. சேகரும் தனது தவறை உணர்ந்தார் ….

மூன்று மாதங்களுக்கு பிறகு ,

சுதிர் வெட்ஸ் சின்மயி என்ற பெயர்பலகையுடன் நின்றது அந்த திருமண மண்டபம் …வாங்க உள்ளேபோய் பாக்கலாம் ..ஆம் சுதிரும் சின்னுவும் திருமண கோலத்தில் …. சின்மயி இப்பொழுதும் அந்த எண்ணெய் தெறித்த வடுக்களோடு சுருங்கிய தோலுடன் தான் இருந்தாள் …. ஆனால் சுதிரின் மனைவியாய் …

அவன் வந்த பின்பு அவன் என்ன சொன்னான்னு தானே யோசிக்கிறீங்க ..மறக்கல சொல்லிடுறேன் ….. வந்த சுதிர் அவளை பார்த்து முட்டைக்கண்ணி இப்போவது என்னை கல்யானம் பண்ணிப்பியா மாட்டியா ??? அவனது வார்த்தைகளை சின்னுவாள் நம்பமுடியவில்லை என்பதை காட்டிலும் ….. சின்னுவிற்கு அவனது மார்பில் சாய்ந்து கண்ணீர் வடித்ததே நிம்மதியை தந்தது..

அதுக்கு அப்புறம் என்னங்க … டும் டும் டும் தான் …. அவன் அவளது கழுத்தில் மங்கள நாண் அணிவிக்க ….. அவர்கள் மனதில் சுமந்த வரிகள் இருவருக்கு மட்டும் கேட்டது ……….

”மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே

மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே

மழை நீராய் சிதறி போகின்றோம் அன்பே

பிரிவென்பது நெஞ்சிலே பாரமில்லை

மழையென்பது நீருக்கு மரணமில்லை

மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்

இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்………….. ”

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here