அதாகபட்டது மக்களே..
என்ற ஊட்காருக்கு கேல்சியம் சேரனும் னு சொன்னாங்க னு இந்த மாசம் 1ஆம் தேதிலேந்து பசும் பால் வாங்குறேன்.
அந்த பால்கார அண்ணா ரொம்ப சின்சியர். பால் அம்பூட்டு நல்லா இருக்கும். காய்ச்சினா வீடே மணக்குது. அப்டி ஏடு கட்டுது. அத காய்ச்சி ஒரு டம்பளர் அவருக்கு குடுத்துட்டு மிச்சத்த தயிரா ஒரகுத்தி வச்சி மேல உள்ள ஏட எடுத்து சேத்து வச்சிட்டே வந்தேன்.
அத இன்னிக்கி என்ன கேக்காமலே வெண்ணை கடயிறேன்னு என் மாமியாரம்மா எடுத்து வச்சிகிட்டாங்க (ரைட்டு, இன்னித்தி கோட்டாக்கு ஓபி அடிக்க மேட்டர் கெடச்சிருச்சு)…
காலைல 10 மணிக்கு பல தரபட்ட தளவாடங்கள எடுத்துகிட்டு உக்காந்து கடய ஆரம்பிச்சாக.
கடஞ்சாங்க, கடஞ்சாங்க, கடஞ்சாங்க… சாயந்திரம் 5 மணி வர கடஞ்சாங்க…..
( பாற்கடல கடஞ்சி அமுதம் எடுத்தவங்க கூட இவ்ளோ நேரம் கடஞ்சிருக்க மாட்டாய்ங்க..??? தாயி…. நீ நடத்து)
இனிமே தான் முக்கியமான மேட்டர். அஞ்சு மணிக்கு மேல அவங்க நகரவலம் அதாங்க ஊர சுத்துற நேரம் வந்துட்டதால கடயிறது நிறுத்திட்டு எடுத்து வச்சிடடாங்க….
அத நான் எடுத்து கடய ஆரம்பிச்சேன். சரியா 20 நிமிஷம் கடஞ்சதும் பொல பொல னு வெண்ண தெரல ஆரம்பிச்சிருச்சு.
இது ஒரு பெரிய மேட்டர் னு எதுக்கு இப்டி கத சொல்லிட்டு இருக்கனு தானே கேக்றிங்க.. வரேன் வரேன்..
இந்த சம்பவத்துல எனக்கு காண்டு கூண்டு கட்டி குடும்பம் நடத்துன மேட்டர் ஒன்னு சொல்லியே ஆகனும்..
காலைலேந்து கடயிறேன்னு பேர் பண்ணிட்டு நான் கடய எடுத்ததும் என் மாமியார் வந்து வேணாம் னு சொன்னாங்க. அவங்க வேணாம் னு சொன்னது கூட எனக்கு பிரச்சன இல்ல. ஆனா அதுக்கு ஒரு காரணம் சொன்னாங்க பாருங்க மக்களே…
” அடி, அந்த பால்காரன் பால நல்லபாலா காட்ட மஞ்சபொடி கலந்துருக்கான் அதான் பால் மஞ்சலா இருக்கு. இதுல வெண்ணலாம் வராது ” னு சொன்னாங்களே பாக்கனும்…
திருப்பதில லட்டுக்கு பதிலா ஜாங்கிரி போட சொல்லி சந்திரபாபு நாயுடுவே சட்டம் போட்ருக்காரு னு ஒரு காமெடி வருமே அது தான் நியாபகத்துக்கு வந்துச்சு…??
ஆனா பாருங்க, நான் கடஞ்ச போது இளவெயில் நிறத்துல, கொழ கொழ னு பிசுக்கோட ஒரு வஸ்து தெரண்டு வந்துச்சு. அத நீங்களே பாருங்க..
வரவே வராது னு சொன்ன தயிர்ல ஒரு நார்த்தங்காய் அளவுக்கு உருண்டு தெரண்டு
வந்தது வெண்ணையா?? இல்லயா???