விழி மொழியாள்! பகுதி-30
கயல்விழி … திக் பிரமை பிடித்த மாதிரி நிற்கவும்…
மித்ரன்… கயல் னு ஏதோ சொல்ல வர…
அங்கேயே நில்லு பக்கத்துல வராத… கோவத்தோட கத்தினாள்.. ச்சீ நீயெல்லாம் ஒரு பெரிய மனுஷனாடா..
கயல்… நான் என்ன சொல்லுறேன்னு முதல்ல கேளு…. ப்ளீஸ் அப்பறம் வேணா என்மேல கோவம் படு …மித்ரன் கெஞ்சினான் கயல்விழியிடம்.. யாரிடமும் கெஞ்ஜாதவன் அப்படி பட்ட மித்ரன்னே கயல்விழியிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்.. எல்லாம் காதல் படுத்தும் பாடு… காதல்தான் எந்த அந்தஸ்த்தும் பார்க்காதே .. மித்ரனின் ஸ்டேட்டஸ் எல்லாம் தூக்கி போட்டுட்டு கயல்விழியிடம் ஒரு யாசகனை போல் கெஞ்சிகொண்டிருந்தான் ..
அவனின் கெஞ்செல்கள் எல்லாம் அலட்சிய படுத்தினாள்…
அவள் நினைப்பு முழுதும் மித்ரன் பேசினது ஒவ்வொன்னும் நியாபக படுத்தி பார்த்தாள்..
சந்தியாவை இவன் தான் கடத்தி வச்சிருக்கிறான்… என்னமோ கடை னு சொன்னானே என்ன கடை.. ஹ்ம் யோசித்தவள் ஓ…சரவணன் அப்பா கடை தான வச்சிருக்காரு.. அதைத்தானே அழிச்சிட்டேன்னு சொல்லிட்டு இருந்தான்.. அப்பறம் அவர் இருக்காரா இல்லையா னு கேட்டானே… இருக்காரா இல்லையா னு இவன் கேக்குறான் னா .. அப்போ அங்க அவர்க்கு என்னமோ ஆகி இருக்கு.. யாரையோ விட சொன்னானே அவங்கள விட்டா சந்தியாவை விட்றேன்னு சொன்னானே… ஒவ்வொன்னும் நினைக்கநெனைக்க முகம் ஜிவு ஜிவு னு கோவத்தில் சிவந்தது..
அவளின் முக மாற்றத்தையே பார்த்து இருந்தவன் … ஹ்ம் இவளிடம் இனி பணிஞ்சி போன எடுபடாது… மித்ரா
உன் வேலைய காட்டினாதான்
இவ என் கண்ட்ரோல்க்கு வருவா…
அவ முகத்தை பார்த்தா
என்னமோ யோசிக்கிறமாதிரி இருக்கே..
ஹ்ம்ம் யோசிக்கட்டும் என்ன தான் சொல்ல போறான்னு…. பாக்கலாம்..கூலா அவளையே பார்த்து கொண்டிருந்தான்..
எவ்ளோ திமிரு இருந்தா எல்லாம் தப்பும் பண்ணிட்டு எப்படி கூலா பார்த்துட்டு இருக்கான் பாரு முறைக்கவும்…
என்னடா.. இது எதுனா பேசி சண்ட போடுவானு பாத்தா முறைச்சிட்டு நிக்குறா…
ஹ்ம்ஹும்… மித்ரா இது வேளைக்கு ஆகாது நீ ஆரம்பிச்சு வையிடா அவளே… எப்படி முடிச்சு வைப்பா…பாரு..
நிதானமாய் எழுந்தான் கயல்விழியே பார்த்தபடி அவளிடம் நெருங்கினான்..
அவனின் பார்வையில் வித்தியாசத்தை கண்டவள்
கயல் நீ இங்க நிக்காத ஆபத்து உடனே போய்டுஅவள் உள் உணர்வு எச்சரிக்க சட்டெனெ வெளியே போக எத்தனித்தாள்..
கண் இமைக்கும் நேரத்தில்
அவளை லாவகமாய் உள்ளே இழுத்துகொண்டு கதவை தாழ் போட்டான்..
மித்ரன் கதவை அடைத்ததும்.. கயலலின் முகம் பயத்தில் வெளிறி போனது ..பலம் கொண்டு அடித்து திமிறினாள்…என்னை விட்றா பொறுக்கி எவளோ நல்லவன்னு நம்புனேன் இப்படி கேவலமா நடந்துக்கிறியே வெக்கமா இல்லை விட்ட்றா… அவனை அடித்து கடித்து திமிறி கொண்டிருந்தாள்…
மித்ரனின் கையணைப்பில் அடங்க மறுத்தவள்… திமிற…
சூ… அவள் வாயில் கைவைத்து நீ அமைதியா இருந்தா உன்ன எதுவும் பண்ண மாட்டேன் …. எதுனா பண்ணி திமிற நினைச்சனு வை . உன்ன இந்த இடத்துலயே அடைஞ்சிடுவேன் பரவாயில்ல னா சொல்லு நல்லா திமிரு.. கத்து… எனக்கு நோ ப்ரோப்லேம்… மித்ரன் ரெண்டு பக்கமும் அணைவாய் கை வைத்து அவளிடம் பேசி கொண்டிருக்க…
கயல் அமைதியானாள்.
குட்.. இருந்தாலும் உன்ன இவளோ நெருக்கத்துல பார்த்துட்டு சும்மா இருக்க முடிலயே கயலுமா… அவனின் பார்வை கயல் உதட்டில் படிந்தது.. உன்ன.. அப்படியே ம்ம்ம்.ம்ம்ம்… அவன் அசந்த நேரம்.. பலம் கொண்டு அவனை பிடிச்சி தள்ளினாள்..சீ.. என்ன தொட்ட அவளோ தான் .. கோவத்தில் கத்தினாள்…
ஹாஹா… எதுக்கு டென்ஷன்… இப்போ உன்ன எதுவும் செய்ய மாட்டேன் எல்லாம் கல்யாணம்துக்கு அப்பறம் பாத்துக்கிறேன் டி கண்ணடிச்சி சொல்லவும்…
சீ.. அருவெறுப்பை முகத்தில் காட்டினாள்..
ஹேய்ய்… …. அவளின் உதாசீனம் மித்ரன்க்குள் வெறிஏற்றியது…
அவள் கழுத்தில் கைவைத்து இறுக்கி சுவத்தோடவே நிற்க வைத்தான்…
நானும் போன போகுது சின்ன பொண்ணாச்சே னு பார்த்தா ரொம்ப ஓவரா போற நீ .. கழுத்தை இறுக்கவும்..
கயல்க்கு மூச்சு முட்டியது… அவள் மூச்சு விட சிரமபடவும் கைய எடுத்துவிட்டான்..
ஹேய்… இங்க பார் நான் பண்ண அத்தனையும் உனக்காக தான் பண்ணேன்.. ஏன்னா எனக்கு உன்ன பிடிக்கும் நா… எத்தனையோ பொண்ணுகளை பார்த்து இருக்கேன் டி அவளுங்க எல்லாம் என் படுக்கையோடு சரி..
கல்யாணம் பண்ணி குடும்ப நடத்தனும் தோணினது உன்ன பார்த்த பிறகு தான் ….
நீ வேணும் டி எனக்கு எனக்கு மட்டும் தான் … நீ கிடைக்க நா எந்த எக் ஸ்ட்ரிம் லெவல்கும் போக தயார்… அண்டர்ஸ்டாண்ட்…கை நீட்டி எச்சரிக்கவும்..
அவனின் கோவத்தில் மிரண்டு போனாள்…. பயத்தில் உடல் நடுங்கியது..
அந்நேரம் மித்ரன்க்கு கால் வரவும் … யார் னு பார்த்தான்..
சரவணன் னு டிஸ்பிலே தெரியவும் … யார் பண்ணுறாங்க னு தெரிதா… பார் … உன் காதலன் தான் பண்ணுறான்..அவன் தங்கச்சி எங்க இருக்கான்னு சொல்லணுமாம் என்கிட்ட கெஞ்சிட்டு இருக்கான் உன் காதலன்… ஹாஹா…
கயல்விழி விழி கண்கலங்கினாள்… ப்ளீஸ் பாவம் அவளை ஒன்னும் பண்ணிடாதீங்க … கதறினாள்..
அப்படியா …. அவளை ஒன்னும் பண்ண கூடாத… ஓ…அவள் உன் தோழிஆச்சே இத மறந்துட்டேனே…
அப்போ நா சொல்லுற மாதிரி நீ நடந்துகிட்டா உன் உயிர் தோழிக்கு எந்த ஆபத்தும் இல்லாம எப்படி போனாலோ அப்படியே திரும்பி வருவா என்ன நான் சொல்லுறத செய்யிறியா…
மித்ரன்… இப்படி சொல்லுவானு எதிர் பாக்காததால் அதிர்ந்து போனாள்…
என்ன..யோசிச்சுடு இருக்க .பாரு உன் காதலன் தான் கால் பண்ணிட்டே இருக்கான் … சீக்கிரமா உன் முடிவு சொல்லு..
என்னால தான இவளோ கஷடமும் சரவணன் குடும்பம் படறாங்க .. மனதை கல்லாக்கிகொண்டு… ஹ்ம்ம்… நீங்க என்ன சொன்னாலும் செய்யுறேன்… சந்தியாவை விட்டுடுங்க… உங்களால சரவணன் குடும்பத்துக்கு எந்த ஆபத்தும் இனி ஏற்படாது னு நீங்க சத்தியம் பண்ணுங்க..
ஓ.. எஸ்.. பண்ணுறேன் எனக்கு வேண்டியது நீ மட்டும் தான் அவன்லாம் எனக்கு பொருட்டே இல்ல…
ஹ்ம்ம்….
இதை எல்லாம் சரவணன் கேட்டு கொண்டிருந்தான் .. கயல் ஹலோ கயல் வேணா நீ எதுவும் தப்பான முடிவு எடுக்காத கயல் கதறினான் நான் இருக்கேன் நா எப்படியாவது சந்தியாவை காப்பாத்திடுவேன் கயல்… நீ எந்த முடிவும் எடுக்காத கயல் கத்திகொண்டே இருக்கவும்..
போன் ஆன் பண்ணிடே தான் கயல்விழியிடம் பேசிக்கொண்டிருந்தான் மித்ரன்.. கயல் பேசுவதை சரவணன் கேட்கனும் நினைத்தான்.. சரவணனும் கேட்டுட்டு கதறவும்… அதில் குரூர திருப்தி அடைந்தான்.
சரவணன் குரல் கயல் விழிக்கு கேட்காமல் போனது விதியின் விளையாட்டு.
…… விழியில் உஷ்ணம்!