கணேஷ் … திலகத்துக்கு கால் பண்ணு டா .. ஊருக்கு போய்ட்டு கால் பண்ணுறேன்னு சொன்னாளே…. அங்க இருந்து ஒரு தகவலும் வரலையே.
அம்மா.. அவங்க தான சொல்லிட்டு போனாங்க .. அவங்களே பண்ணுவாங்க மா … நாமளே எதுக்கு கால் பண்ணனும்…
டேய்ய் நாம பொண்ணு வீட்டு காரங்க டா நாம தான் என்ன ஏதுன்னு கேக்கணும் …
நீ கால் போட்டு கொடு நான் பேசிக்குறேன்.
ஹ்ம்… சரி மா ..
ரிங் போய்க்கொண்டே இருந்தது யாரும் எடுக்கல…
என்னடா…?
அம்மா ரிங் போகுது யாரும் எடுக்கல..
ஓ.. சரி ஒன்னு பண்ணுவோம் நாம நேராவே கிளம்பி போவோம்… வா கிளம்பு என்னமோ மனசு ஒரு மாதிரியவே இருக்கு…
அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்லை உங்களுக்கே உடம்பு சரில்லை மா வேணாம் மா…
டேய்ய்… போகும் போதே அபசகுணமா போகாதேனு சொல்லுற … அப்படி சொல்லக்கூடாது… நீ வரியா.. இல்ல நானே கிளம்பி போகவா… இதே சுரேஷா இருந்தா உடனே கூட்டிட்டு போயிருப்பான் அவனுக்கு செமஸ்டர் எக்ஸாம் நடக்குது அதான் உன்ன கூப்பிடுறேன் டா.
கோதை கோவத்தோடு பேசவும்,
கணேஷ் … கொஞ்சம் தன்மையா பேசினான்… அம்மா கோவம் படாதீங்க … இப்போ என்ன அவங்கள போய் பாக்கணும் அவளோ தான போலாம் கிளம்புங்க…
கணேஷும் கோதையும் … சரவணன் வீட்டுக்கு கிளம்பினர்..
சரவணன்… கத்த கத்த போன் ஆப் பண்ணிட்டு கயல்விழியிடம் … உன் அம்மா கிட்ட போய் நான் மித்திரன தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லணும் … புரிதா…
கயல் மிரண்டு போய் இருந்தாள்.
என்ன முழிக்குற.. நான் என்ன சொன்னாலும் செய்யுறேன்னு சொல்லிருக்க … நியாபகம் இருக்கட்டும்…
கயல் அமைதியாய் நிற்கவும்…
என்ன அமைதியா இருக்க சொல்லுவியா மாட்டியா..
மனச கல்லாக்கிகொண்டு .. ஹ்ம்ம் சொல்லுறேன் கண் கலங்கினாள்… சரவணனை நினைத்து… என்ன மன்னிச்சிடுங்க சரவணன் எனக்கு இத விட்டா வேற வழி தெரியல… கதறி அழுதாள்.
அவள் கதறி அழுதும் கொஞ்சமும் மனசு இறங்காமல் கல்லு போல அழறதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.
நீ என்ன அழுதாலும் என் முடிவை மாத்திக்க மாட்டேன்னு இறுமாப்புடன் நின்று கொண்டிருந்தான்…
போ …. போய் உன் அம்மா கிட்ட பேசு..நீ எப்படி பேசுவியோ தெரியாது, அவங்களே என்கிட்ட வந்து கயல உனக்கு கட்டி கொடுக்க சம்மதம்னு சொல்லனும்.
அவங்க அப்படி சொல்லணும்னா நீ பேசுற விதம் அப்படி இருக்கனும்… இதுல எதுனா பிளான் பண்ணி என்ன ஏமாத்த நினைச்சாக்க உன் தோழியின் நிலைமை மோசமாகிடும்….. அதை மட்டும் நல்லா நினைவுல வச்சுக்க… சரியா….
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் இது எல்லாம் உன்னோட முடிவா தான் தெரியணும்… நான் மிரட்டி உன்ன சொல்ல வைக்கிறதா உன் சின்ன அண்ணன் நினைக்க கூடாது புரியுதா.
உன்னோட சொந்த முடிவுனு எல்லாரும் நம்புற மாதிரி தத்ரூபமா இருக்கணும்.
நான் சொல்லுற மாதிரி நீ நடந்தா தான் உன் உயிர் தோழி பத்திரமா போவா… மூடின கதவை திறந்தவன் … நான் சொன்னது நியாபகம் இருக்கட்டும்….ஒகே வா..
தலையை மட்டும் ஆட்டினாள்… உணர்வே இல்லாமல் அறையை விட்டு வெளியே வந்தாள்..
கயல்விழி அம்மாவை தேடி போக…
அவங்களே எதிரே வந்து கொண்டிருந்தார்..
கயல் உன்ன தான் பாக்க வந்தேன் நானும் கணேஷ் அண்ணனும் சரவணன் வீட்டுக்கு போய்ட்டு வறோம் சின்ன அண்ணா வந்துடுவான்… சரியா பத்திரமா இரு …. சொல்லிட்டு போக தான் வந்தேன்…
கயல்விழி… அம்மா உங்க கிட்ட முக்கியமான விசியம் பேசணும் மா..
ஹ்ம்ம் .. எதுவா இருந்தாலும் நான் போய்ட்டு வந்து கேக்குறேன் ….
கயல்
அம்மா னு பேச வர அவளை பேசவிடாமல் கோதை திரும்பி கணேஷா சீக்கிரமா வா டா டைம் ஆகிட்டே இருக்கு….
தோ மா வண்டேன்….
கணேஷ் கயல் முகத்தை கவனித்தான்… ஏன் ஒரு மாதிரி இருக்கிறாள்… அழுது இருக்காள்.. ஏன்.. எதுக்கு அழுதா?? யோசனை பண்ணிடிட்டு இருக்க…
தோளில் தட்டினாள்.. என்னடா நானே டைம் ஆகிடுச்சு னு அவசர படுறேன் . .. நீ என்னடா னா என்னமோ யோசிச்சிட்டு இருக்க… வா கிளம்பலாம்….கயலிடம் சொல்லிவிட்டு இருவரும் கிளம்பினர்…கயல்விழியால் பேச முடியாமல் போனது.. வரட்டும் எப்படியும் பேசிதானே ஆகணும்.. கண்கலங்கினாள்… சரவணனை நினைத்தும் சந்தியா உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன்டி என் உயிர் கொடுத்தாவது அந்த மித்ரன் கிட்ட இருந்து உன்ன காப்பாத்துவேன்… மனதில் உறுதியோட சொல்லிக்கொண்டாள்..கோதையும் கணேஷம் .. சரவணன் வீட்டுக்குள் நுழையும் முன் திலகம் கோவத்தோட அங்கேயே நில்லுங்க … உள்ளே வராதீங்க …. சொல்ல ..
கோதையும் கணேஷ்ஷும் அதிர்ந்தனர்… கணேஷ் ஆண்ட்டி… எங்கள பார்த்தா வராதீங்க னு சொல்லுறீங்க கணேஷ்க்கும் கோவத்தோட கேட்க..
கணேஷ்… அதட்டினாள்.. கோதை.
நமக்கு ஏன் மனசு உறுதுச்சினு இங்க வந்ததும் புரிந்துகொண்டாள் … தன்மையோடவே பேசினாள் திலகம் என்ன ஆச்சு ஏன்மா இப்படி பேசுற உன் வீடு தேடி வந்தவங்கள இப்படி தான் பேசுவியா திலகா..
ஹ்ம்… உங்க வீட்டுக்கு நாங்க எப்போ வந்துதோமோ அப்ப பிடிச்சது எங்களுக்கு சனியன் … நல்லா வேலை சும்மா பாத்து பேசிட்டு போனதுக்கே எங்களுக்கு இந்த நிலைமை… இன்னும் பொண்ண கட்டிட்டு வந்து இருந்தா… இருக்க இடம் கூட மிஞ்சாது போலையே… கோவத்தில் என்ன பேசுறோம்னு தெரியாமல் தேள் போல வார்த்தைகளை கொட்டிக்கொண்டிருந்தாள்… திலகம்.
கணேஷை கோவம் படாதேன்னு அதட்டிய கோதைக்கே கோவம் வந்து விட்டது.. அவளை குறை சொல்லிருந்ருந்தா கூட பொறுத்து போயிருப்பாள்… தன் மகளை குறை சொல்லவும் கோதையால் பொறுக்கமுடியாமல்.. நானா உன்ன என் வீட்டுக்கு பொண்ணு கேட்டு வா னு கூப்பிட்டேன் நீயா தான டி உன் புள்ளைய கூட்டிட்டு திடுதிப்புனு வந்து நின்னா.. என்னமோ அப்படி கா இப்படிகா னு பேசினியே..இப்போ என் பொண்ணையே குறை சொல்லுற …. உனக்கு எவளோ திமிரு இருக்கனும் … இப்பவே என் பொண்ண பத்தி தப்பா பேசுறியே … நீ கேட்டேன்னு என் பொண்ண உன் வீட்டுக்கு அனுப்பி இருந்தா அவளை பேசியேகொன்னுடுவா போலயே … நல்லா வேல இப்பவே தெரிஞ்சுது உன் போசனம்… ச்சே
அதான் தெரிஞ்சிச்சி ல கிளம்புங்க.. இன்னும் எதுக்கு இங்க நிக்குறீங்க போங்க வெளியே கத்தவும்…
போறேன் டி இதுக்கு அப்பறம் இங்க நிக்க எங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு கணேஷ் வா டா போகலாம்.. சொல்லிட்டு திரும்பியவள் …
ஹ்ம்ம் போங்க போங்க… ச்சி சரியான தரித்திரம் பிடிச்சவ… இவளை போய் தேடி புடிச்சான் பாரு அவனை சொல்லணும்…
ஹேய்…. கோதை கோவத்தில் அடிக்க கை ஓங்கிட்டாள்… இதுக்கு மேலஎன் பொண்ண பத்தி தப்பா ஒரு வார்த்தை பேசுனா உன் வாயை இழுத்து வச்சி தைச்சிடுவேன் ஜாக்கிரதை…. என் பொண்ண பத்தி பேச உனக்கு அருகதைஇல்லை.. அவ ரசியானவ டி மகாராணி போல வாழ வேண்டியவள்என் பொண்ணு.. நீ கேட்டியேன்னு அதெல்லாம் தூக்கி போட்டுட்டு நீ தான் வேணும் னு முடிவு பண்ணேன் ல எங்களுக்கு இது வேணும் தான்.. இதுவும் ஒரு விதத்துல நல்லது தான் உன் சுயரூபம் தெரிஞ்சிதே…. ச்சி உன் முஞ்சில முழிக்கிறதே பாவம்… வா டா கணேஷ் போகலாம்… கோதை கிளம்பவும் கணேஷ்க்கு திலகம் ஆண்டி பேசினதுக்கு கோவம் வந்தாலும் … அய்யா இந்த கல்யாணம் இனிமேல் நடக்கவே போறதில்லைனு தெளிவா தெரிந்ததும்… சந்தோஷத்தில் துள்ளி குதித்தான் (மனசுக்குள்ளதாங்க )..
ஹ்ம்ம் போலாம் மா அவன் பங்குக்கும் திலகத்தை முறைத்து பார்த்துகொண்டே கிளம்பினான்… இந்த விசயத்தை முதல்ல பாஸ் கிட்ட சொல்லணும் கை வேற பரபரனு இருக்க.. கோதை இருக்கவும் கண்ட்ரோல் பண்ணிக்கொண்டான்…