சரவணன் வீட்டிற்கு வந்ததுல இருந்து யாரிடமும் சரியாக பேசாமல் இருக்கமான முகத்தோடுவே இருந்தான்.
அம்மா கயல்விழி கிட்ட மன்னிப்பு கேப்பாங்களா?இத , எப்படி அம்மா கிட்ட சொல்றது என யோசனையோட இருக்க..வும்
சரவணா.டேய் .சரவணா…என திலகம் கூப்பிடுவது கூட அவன் காதில் விழாமல் ஆழ்ந்த சிந்தனையில் முழுகி இருந்தான்.
கயல் தனக்கு கிடைக்காமல் போய் விடுவாளோ என் லவ்வுக்கு மட்டும் புதுசா புதுசா எதுனா பிரச்சனை வந்து தொலைக்குது… மனதளவில் உடைந்து போனான் … ச்சே…
என்னடா சரவணா கூப்பிட்டு கிட்டே இருக்கேன் காதுல வாங்காம ஏதோ யோசனையில இருக்க.
ஒன்னுமில்லை மா என்ன மா சொல்லுங்க.
டேய் சரவணா நான் கோதைஅக்காவ ரொம்ப தப்பா பேசிட்டேன் என்ன பாக்க வந்தவங்களை மோசமா பேசி அனுப்பிடேன் டா. கயலையும் ராசி இல்லாதவனு சொல்லிட்டேன்….
சந்தியாவ காணோங்கற ஆதங்கத்துல என்ன பேசுறோம்னு தெரியாம புத்தி தடுமாறி பேசிட்டேன் .
கோதைஅக்கா மனசு எவ்ளோ கஷ்டபட்டு இருக்கும். இங்க இருந்து போகும் போதே மனசு உடஞ்சு போயிருப்பாங்க…
மனசே கேக்கல டா இப்படி தப்பா பேசிட்டோமேனு, கோதைஅக்கா கிட்டேயும் என் மருமக கயல் கிட்டேயும் மன்னிப்பு கேட்டா தான் என் மனசு ஆரும்.
திலகம் பேச பேச அம்மாவாசையாக இருந்த சரவணன் முகம் பௌர்ணமியாக மாறியது.
இறக்கையின்றி வானத்தில் பறப்பது போல உணர்ந்தான்.
பாராங்கல் போன்று இருந்த இதயம் இளவம்பஞ்சாக ஆனது.
அம்மா.. அம்மா.. என்ன சொன்னீங்க மா நீங்க தான் இப்படி பேசுறீங்களா கொஞ்சம் இருங்க கிள்ளி பாத்துக்கிறேன் .. ஷ் ஆஆ… வலிக்குது உண்மை தான்… என சந்தோசத்தில் அம்மாவை பிடித்து கொண்டு குதித்தான்.
அப்படியே நிச்சயம் பண்ணி கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடலாம் சரவணா…
அய்யா… என் செல்ல அம்மா திலகம் கன்னத்தில் முத்தமிட்டான்.
அங்கே…
கோதை குடும்பத்தினர் மித்திரனின் பங்களாவை காலி செய்து விட்டுபழைய படி தன் ஊருக்கே குடியேறி விட்டனர்.
சரவணன் சுரேஷ் க்குமட்டும் கால் பண்ணி விசயத்தைசொன்னான்… வீட்டில அனைவரும் கிளம்பி வந்துட்டாங்க மச்சான்.. நீ எதுவும் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத மச்சான்…
ஹ்ம்ம் ஓகே மச்சான்…
காலிங்பெல் சத்தம் கேட்டு கதவை திறந்த கோதை திலகத்தை பார்த்தவுடன் விறு விறுனு கோபமாக உள்ளே சென்று விட….
எதுவும் தெரியாதவன் போல்
யாருமா என கேட்டு கொண்டே வந்த சுரேஷ் சரவணன் குடும்பத்தோடு வந்திருப்பதை பார்த்து மகிழ்ச்சியோடு வாங்க வாங்க ஏன் வெளியவே நிக்கறீங்க உள்ள வாங்க என கூப்பிட்டான்.
கோதை முகத்தை திருப்பி கொண்டு நிற்க…
நான் ஏதோ புத்தி பிசகி போய் பேசிட்டேன் என்ன மன்னிச்சிடு அக்கா என திலகம் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்க,
பரவாயில்லை திலகம் கயல நீ ராசியில்லாதவனு சொல்லிட்ட அதான் எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.
நான் பேசினது தப்பு தான் மனசுல எதுவும் வச்சுக்காதிங்க அக்கா.. உங்க தங்கையா இருந்தா மன்னிப்பீங்க தானே…
ஹ்ம்ம் திலகா…
என் மருமக எங்க காணோம் அவ கிட்டயும் மன்னிப்பு கேட்டா தான் என் மனசாரும்.
பேச்சு சத்தம் கேட்டு கயல் அறையில் இருந்து வெளியே வர,
திலகம் கயல்விழியை கட்டி பிடித்து கொண்டு மருமகளே இந்த அத்தைய மன்னிச்சிடு மா என மன்னிப்பு கேட்டாள்..
ஐயோ அத்தை நீங்க போய் என்கிட்ட மன்னிப்புலாம் கேட்டுகிட்டு… கையை இறுக்கமாய் பிடித்துகொண்டாள்..
கயல் விழிக்கு சந்தோசத்தில் கை கால் புரியவில்லை. அவள் முகத்தில் ஓராயிரம் நிலவின் ஒளி வீசியது.
பரவாயில்லை அத்தை நீங்க தான பேசுனீங்க.
கயல் விழியின் பார்வையும் சரவணன் பார்வையும் ஓர் நொடி சந்தித்து மீண்டது…
நான் இந்த கல்யாணத்துக்கு
சம்மதிக்கனும்னா
ஒரு கண்டிஷன் ஒன்னு இருக்கு அதுக்கு கோதைஅக்கா ஒத்துகிட்டா தான் இந்த கல்யாணம் நடக்கும்..
என திலகம் கூற, அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.
திடீர்னு என்னம்மா இப்படி பேசுற சரவணன் கலக்கத்துடன் கேட்டான்.
கோதைக்கா என் பொண்ணு சந்தியாவுக்கும் உங்க மகன்
சுரேஷ்க்கும் கல்யாணம் பண்ண சம்மதமா உங்களுக்கு என திலகம் கேட்க…
கதிரேசன் ஹாஹாஹா நான் கூட என்னமோ ஏதோனு பயந்து போய்ட்டேண்டி திலகம்…
என்ன மா கோதை என் பொண்ணா உன் வீட்டுக்கு மருமகளா ஆக்கிக்க சம்மதமா.. கதிரேசன் கேட்க….
கோதை … கணேஷ் முகத்தை பார்த்துட்டு அண்ணா அது வந்து மூத்தவன் இருக்கும் போது ….. இளையவனுக்கு எப்படி அண்ணா தயக்கத்தோடு சொல்லியவள் சந்தியாவின் முகத்தை பார்க்க…
அம்மா.. உங்க கிட்ட ஒரு விசியம் சொல்லணும்..அதை அப்றம் சொல்லுறேன் நீங்க சம்மதம்மட்டும் சொல்லுங்க…
கணேஷ்…. நா என்ன சொல்லவரேனு…
அம்மா…..தடுத்து கோதையை பேசவிடாமல் கதிரேசனிடம் அங்கிள் எங்களுக்கு முழு சம்மதம்…. அங்கிள் நீங்க ஆகவேண்டிய வேலைகள் மட்டும் பாருங்க… என சொல்லவும்..
சந்தியா வெட்கப்பட்டு தலை குனிந்து கொண்டு காலால் கோலம் போட..
சுரேஷீன் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
அதை கவனித்த கோதை ரெண்டு பேருக்கும் இன்னிக்கே நிச்சயம்
பண்ணிடலாம் என கூற
வீடே சந்தோசத்தில் திளைத்தது.
அன்றே நல்ல நாள் என்பதால் இரண்டு ஜோடிக்கும் நிச்சயம் செய்து தட்டை மாற்றி கொண்டனர்.
சாயந்திரம் குடும்ப ஜோசியரை கூட்டிக்கிட்டு வந்தான் கணேஷ்.
அவர் நல்ல நாள் பார்த்து கல்யாணத்துக்கு தேதி குறித்து கொடுத்தார்.
இரண்டு ஜோடிக்கும் ஜாதக பொருத்தம் அமோகமா இருக்கு.
நான் குறிச்சு கொடுத்த தேதியிலயே இரண்டு ஜோடிக்கும் கல்யாணம் பண்ணிடலாம் என கூறினார்.
கல்யாண மண்டபத்தில் மணமேடையில் இரண்டு மனைகள் போடப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
சரவணன்- கயல்விழி இடது புறம் முனையிலும்,
சுரேஷ்-சந்தியா வலதுபுறம் முனையிலும் அமர்ந்து இருந்தனர்.
கணேஷ் பைஜாமா ஜிப்பா அணிந்து கொண்டு நின்றிருந்தான்.
அவன் பக்கத்தில் கணேஷின் மனைவி
லூர்துமேரி. கிருஸ்துவ பெண்.
கணேஷ் மூத்தவன் அவனுக்கு கல்யாணம் பண்ணாம எப்படி தம்பிக்கு பண்றது என கோதை கூறிய பொழுது,
தனக்கு இரண்டு வருடங்கள் முன்பே லூர்து மேரி என்ற கிருஸ்துவ பெண்ணுடன் திருமணம் நடந்து விட்டது என கூறி..
அதை கேட்டு அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
கணேஷ் கோதையிடம் மன்னிப்பு கேட்க
அவனே கல்யாணம் பண்ணிடான்னு கோபம் இருந்தாலும்…மருமகளை பார்த்ததும்
கோதை மன்னித்து ஏற்றுக் கொண்டாள். கணேஷ் லூர்து மேரியை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டான்.
கல்யாணத்துக்கு அனைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்து இருந்தனர்.
கெட்டி மேளம்… கெட்டி மேளம்…
இரண்டு ஜோடிகளும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
புதுமண ஜோடிகளோடு இரண்டு குடும்பத்தாரும் ஒன்றாக புகைப்படம் எடுக்க சேர்ந்து நின்று கொண்டு இருக்க,
போட்டோகிராபர் எல்லாரும் சிரிங்க.. ஸ்மைல் ப்ளீஸ் என்று சொல்ல
அனைவரும் மகிழ்ச்சியாக சிரிக்க
கிளிக்.. கிளிக்.. கிளிக்…
……….. விழிகள் கலந்தது!
சொர்க்கவாசல் திறந்தது!சுபம்……