விழி மொழியாள்! பகுதி-6.
அப்பொழுது தான் கயல்
+12 அடியெடுத்து
வைத்துக் கொண்டு இருந்த நேரம் நோட்ஸ் வாங்க சந்தியா வீட்டுக்கு
சென்றிருந்தாள்.
சந்தியா….. அழைத்து கொண்டே உள்ளே சென்றாள் .கயல்விழி…
வா மா கயல் கூப்பிட்டாள் திலகம் . சந்தியா எங்கே ஆண்டி.
அவள் அவங்க அப்பா கூட கடை வரைக்கும் போயிருக்கா மா. வந்துடுவா…
உள்ளே வாமா உக்காரு காபி போட்டு எடுத்துட்டு வரேன்.
அய்யோ ஆண்ட்டி அதெல்லாம் வேணாம். நீங்க வாங்க வந்து உக்காருங்க.
அட வீட்டுக்கு வந்த புள்ளைக்கு எதுவும் குடுக்காம இருக்கமுடியுமா நீ சும்மா இரு நான் போய் எடுத்து வரேன்.
ஆண்ட்டி …..
உள்ளே திலகம் போய்விட,
ஆண்ட்டி …. கயலோட குரல் கேட்டதும் உள்ளே இருந்து வெளிய வந்தான் சரவணன்.
சந்தியாவோட அண்ணன்.
சரவணன்க்கு கயல்விழி மேல் ஒரு ஈடுபாடு இருக்கு. அதை கயல்விழி கிட்ட சொல்ல சந்தர்ப்பம் தான் கிடைக்கவில்லை.
கயல் கூட எப்பவும் சந்தியா இருந்து கொண்டே இருந்ததால் அவளிடம் அவன் காதலை வெளிப்படுத்த முடியவில்லை.
ஒவ்வொரு தடவையும் விடுமுறையில் வரும் போது கயல்விழியிடம் சொல்லிடனும்னு நினைப்பான்.
ஆனால் அதற்கான சந்தர்ப்பமே அமையவில்லை.
எப்படியும் இன்னைக்கு சொல்லியே ஆகணும்னு முடிவு பண்ணிட்டான்.
திலகம் உள்ளே போனதும் வெளியே வந்த சரவணன் கயல்விழியிடம் ஒரு பேப்பர் கொடுத்தான்.
கயல்விழி … மென்மையாய் சன்னமான குரலில் அழைத்தான். நெஞ்சு பக் பக் என்று அடித்து கொண்டது. உயர் ரத்த அழுத்தம் 200 மை தாண்டியது.
மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு கயலிடம் கடிதத்தை கொடுத்தான்.
இதை படிச்சிட்டு நல்லாமுடிவா சொல்லு கயல்.
அம்மா வரும் சப்தம் கேட்கவே பட்டென்று உள்ளே சென்று விட்டான்.
அவன் என்ன சொல்ல வந்தான், இந்த பேப்பர்ல என்ன இருக்கு என்று கயல்விழிக்கு விளங்கவில்லை. ஆனால் ஏனோ இனம் புரியாத அச்ச உணர்வு அவளிடம் குடிகொண்டது. குழப்பமாக போப்பரை பார்த்து கொண்டு இருந்தாள்.
திலகம் குடுத்த காபிய கூட சரியாக குடிக்க முடியாமல் வைத்து விட்டு ஆண்ட்டி நா கிளம்பறேன்.
சந்தியா வந்தா நா வந்துட்டு போனேனு சொல்லுங்க ஆண்டி திக்கி திணறி சொல்லி விட்டு ஓட்டமா ஓடி விட்டாள்.
எதுக்கு இந்த பொண்ணு இப்படி ஓடுது திலகம் முகத்தில் கை வைத்து யோசித்து கொண்டிருந்தாள்.
இந்த பொண்ணு வரும் போது நல்லா தானே வந்தா என்னமோ போ இந்த காலத்து புள்ளைங்க கால்ல சக்கரம் கட்டிட்டு தான் இருக்காங்க என்று தனக்குள் கூறி கொண்டாள்.
கயல் வரும் போது சரவணனும் கூட இருப்பான். ஆரம்பத்தில் சந்தியா கூப்பிட்ற மாதிரி கயல்விழியும் சரவணனை அண்ணா என்று தான் அழைப்பாள்.
ஆனால் சரவணன் அண்ணா லாம் கூப்பிடாதனு சொல்லிடுவான்.
ஓஹோ இவர்க்கும் என் அண்ணா சொல்லுறது போல நான் கூப்பிடறது பிடிக்கல போலனு தான் நினைத்தாள். அதனால் சரவணன் கிட்ட அதிகம் பேசாமல் ஒதுங்கி போய்விடுவாள் .
அவள் ஒதுங்கி செல்வது கஷ்டமாக இருந்தாலும் இப்போதைக்கு விட்டு பிடிப்போம் அதான் நல்லதுனு இருந்து விட்டான் சரவணன்.
ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லை.
திலகம் தூரத்து சொந்தம் கல்யாணத்துக்கு சென்று இருந்தாள்.
சந்தியாவின் அப்பா பல் பொருள் அங்காடி வைத்து இருக்கிறார். அன்று சந்தியாவை கடைக்கு அழைத்து கொண்டு போய் விட்டார்.
இது தெரியாமல் கயல்விழி சந்தியாவை பார்க்க சென்றாள். சரவணன் மட்டுமே வீட்டில் இருந்தான்.
ஆண்ட்டி…சந்தியா….. என்று கூப்பிட்டு கொண்டே உள்ளே சென்றாள் கயல்.
-மொழி பேசும்….