விழி மொழியாள்.. பகுதி.. 7

0
603

விழி மொழியாள்! பகுதி-7

வீட்டில் சரவணனை தவிர வேற யாரும் இல்லை என்பது தெரியாமல் கயல்விழி சந்தியாவை பார்க்க சென்றாள்.

ஆண்ட்டி….சந்தியா கூப்பிட்டுக்கொண்டே உள்ளே செல்கிறாள்.

வா கயல் சந்தியா அப்பா கூட கடை வரை போயிருக்கா இப்ப வந்துடுவா.

ஏனோ அவனை நிமிர்ந்து பார்க்க வெக்க பட்டு கொண்டு நின்றிருந்தாள் கயல்.

அங்கே சட்டை அணியாமல் வெற்று மார்போடு நின்று கொண்டிருந்தான் சரவணன்.

ஓஹோ அப்படியா சரி நான் வந்துட்டுப் போனேன்னு சொல்லிடுங்க என நிமிர்ந்து முகத்தை பார்க்காமல் கூறினாள்.
.
ஹ்ம்ம்..சரி.

கயல் என்று மென்மையாக அழைத்தான்.

கயல்விழிக்கு தோழி இல்லாமல் வீட்டிற்குள் வந்து விட்டோமே அவளை பார்க்க முடியவில்லையே என்ற கவலையில் இருந்ததால் சரவணன் குரலின் வேறுபாட்டை கவனிக்கவில்லை.

மறுபடியும் கயல் என்று அழைத்தான்.

அப்போதுதான் அவன் குரலின் வித்தியாசம் தெரியவும் எதுவும் பேசாமல் விழி உயர்த்தி பார்த்தாள்.

அவள் பார்வை அவனை ஒரு விநாடி என்னமோ செய்தது. சட்டென்று சுதாரித்து கொண்டு,

நான் உன்னை மனசார காதலிக்கிறேன் கயல். உன்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசைபடுறேன் என்று கூறினான்.

கயல் இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

இப்போ இதெல்லாம் பேசுற வயசு உனக்கு இல்லனு தெரியும் இருந்தாலும் என் மனசுல என்ன இருக்குனு உன்கிட்ட சொல்லிடனும்னு தோணுச்சு அதான் சொல்லிட்டேன்.

உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் கயல். நீ சந்தியா கூட செய்யும் சின்ன சின்ன குறும்புகள் எல்லாம் ரசிப்பேன். நீ பேசுறது சிரிக்கிறது எல்லாம் எனக்கு பிடிக்கும்.
உன் வீட்டை பத்தி அம்மா கிட்ட சந்தியா சொல்லும் போது ரொம்ப கஸ்டமா இருக்கும் உன்ன போய் யாராவது பிடிக்கலனு சொல்ல முடியுமானு தோணும்.

உன் அண்ணா மேல கோவமா வந்துச்சு.
போடா உனக்கு பிடிக்கலைனா என்ன எனக்கு என் கயல்ல பிடிக்கும்னு கத்தனும் போல இருக்கும்.

நா சொல்லுறது உனக்கு புரியுதா கயல் நா உன்ன ரொம்ப நேசிக்கிறேன் நீ இல்லாத வாழ்க்கை எனக்கு இல்லை.

நீ இப்பவே சொல்லணும்னு அவசியம் இல்லை நல்லா யோசிச்சு சொல்லு.
நான் காத்து இருப்பேன் எவ்வளவு நாள் வேணா உனக்காக. தன் மனதில் இருந்த அனைத்தையும் கொட்டி விட்டான் சரவணன்.

சரவணன் கயல்விழியின் விழியோடு விழி கலந்து தன் நேசத்தை வெளிப்படுத்தினான்.

அவன் பார்வையை நேருக்கு நேர் எதிர் கொள்ள முடியாமல் கயல்விழி தடுமாறி கொண்டிருந்தாள். நாணத்தால் அவள் கால்கள் கோலம் போட்டது.

அவளிடம் ஒரு மாற்றம் கண்டதும், சரவணன் கயல்விழியிடம் நெருங்கினான்.

கயலுக்கு நடுக்கம் ஏற்பட்டது. நெஞ்சு படபடத்தது. இது போன்ற உணர்வு புதிதாக தோன்றியது. அவள் விலகி செல்லவில்லை. அவளுக்கு அந்த அருகாமை பிடித்து இருந்தது.

அவனின் அருகாமையில் சுவாசம் தடுமாறினாள். அவளின் இதய துடிப்பு எகிறியது. லப் டப் லப் டப் சத்தம் பலமாக கேட்டது. .. …‌‌பார்வை வீசும்.FB_IMG_1550576435196|690x297

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here