விழி மொழியாள்.. 10

0
463

விழி மொழியாள்… பகுதி 10


அங்கே…….

பப்பில்…போதையில் நடனம் ஆடி கொண்டிருந்தான் மித்திரன். இடையோட அணைத்து இதழ் உரசியபடி மாதுவோட குலாவிட்டு இருந்தான். ஒரு கையில் மது; ஒரு கையில் மாது.

சார்….

என்னயா…….

உங்கள யாரோ பாக்க வந்து இருக்காங்க சார்.

யார் யா வந்து இருகாங்க. இப்ப யாரையும் பாக்க முடியாது.

ஒரு பொண்ணு வந்துருக்கு சார். உங்கள பாக்காம போக மாட்டேனு சொல்லுது.

பொண்ணா? ஜஸ்ட் வெயிட். வரேன்…..

சொல்லிட்டு வெளிய வந்து யார்னு கேட்டான்…

அதோ … அங்க பாருங்க சார் நிக்குதுனு சொல்லிட்டு போய்ட்டான் பேரர்.

யாரா இருக்கும்.. ஸ்கியூஸ் மீ…

அவள் திரும்பனதும்…

நீயா….. நீ எதுக்கு இங்க வந்த…..?

மித்திரன்…..

ஹே…. யார பேர் சொல்லி கூப்பிடற மைண்ட் இட்… என் ஸ்டேட்டஸ் என்ன நீயெல்லாம் என்கிட்ட நின்னு பேசுற கோவமா பேசினான்

பரவாயில்லை என்ன நியாபகம் வச்சிருக்கீங்க.

வாட்… உன்னையா…. ஹாஹா குட் ஜோக்.

நா நியாபகம் வச்சிருக்க நீ ஒன்னும் என் பொண்டாட்டி இல்லை. உன்ன மாதிரி நிறைய பேரு எனக்கு. என்ன விசியம் சொல்லு டைம் இல்லை .

அவள் அழுத்திட்டே சொன்னாள் என்ன ஏமாத்திட்ட மித்திரன். கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லி என்ன நம்ப வச்சு ஏமாத்தி என் வாழ்க்கையை அழிச்சிட்ட. அழுதாள் ….. என்
வாழ்க்கையே போயிடுச்சி.

ஆமா நீ ரொம்ப ஓவரா சீன் போட்ட கற்பு அது இதுனு இந்த மித்துரன உதாசீன படுத்தின இதுதான் நடக்கும் அண்டர்ஸ்டாண்ட்……..

உன்ன மாதிரி ஆயிரம் பேர் எனக்கு. இன்னிக்கு கலா நாளைக்கு மாலா. இதான் என் பாலிசி. உன்ன மாதிரியே எல்லாரும்.. வந்து புலம்பறவலாம்
நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது.

ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ரேட். உன் ரேட்டிங் என்னனு சொல்லு தரேன். வாங்கிட்டு போய்கிட்டேயிரு.

பிரியா அவன் பேசுவதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தாள்.

நான் அப்படி பட்ட பொண்ணு இல்ல என்ன நீ காதலிக்கறதா நம்ப வச்சு ஏமாத்திட்ட. எனக்கு பணம் வேணா என்ன கல்யாணம் பண்ணிக்க என்று அழுதபடி கூறினாள்.

அவனுக்கு எரிச்சலா வந்துச்சி நல்லா மைண்ட் ஸ்பாயில் பண்ணிட்டானே அந்த பேரர்.
போய் கவனிச்சிக்கிறேன் இப்படி தான் யார் வந்தாலும் வந்து கூப்பிடுவானா டாமிட்…. கோவம் பட்டான்

இங்க இத பத்தி பேச வேண்டாம் நீ என்ன ஃபார்ம் ஹவுஸ்ல வந்து பாரு நல்லபடியா பேசிக்கலாம் என சொல்லி அவளை ஒரு வழியாக அனுப்பி வைத்தான்.

தம்பி நீங்க விசாரிச்ச மித்திரன் சார் இவர் தான் என்று கூறினான் செக்யூரிட்டி.

இவ்வளவு கேடு கெட்டவன் கிட்ட போயா அண்ணா வேல பாக்குது… அப்போ அவர்க்கு எல்லாம் தெரிஞ்சிஇருக்கும்…. தெரிஞ்சி தான் இந்த காரியத்துல இறங்கி இருக்கார்…. ,
குடும்ப மொத்ததையும் இப்படி அவன் கிட்ட மாட்டி விடுறாரே .. என்று மன குழப்பத்துடன் சுரேஷ் நண்பனுடன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான்.

டேய் சுரேஷ் உங்க அண்ணன் பண்றது சரியில்லைனு எனக்கு தோனுது டா என்று கூறினான் சோமு….. அவர்க்கு மித்திரன் பத்தி எதுவும் தெரியாது போல அதான் இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்காரு.

உங்க வீட்ல வயசு பொண்ணு வேற இருக்கு. கயல் எனக்கும் தங்கை மாதிரி தான் டா. நல்லா யோசிச்சு முடிவு எடுக்க சொல்லு டா.

வீட்டுக்கு போன உடனே உங்க அம்மா கிட்ட இத பத்தி பேசு டா .

சோமு உனக்கே இவ்வளவு அக்கறை இருக்கும் போது எனக்கு இருக்காதா டா .

வீட்டுக்கு போன உடனே அம்மா கிட்ட பேசி முதல் வேலையா இந்த முடிவு எல்லாத்தையும் நிறுத்தனும். இங்கயே இருக்கலாம் ஊருக்கு போக வேணாம்னு
சொல்லபோறேன்…

இப்படியே பேசியபடி வீட்டிற்கு வந்தனர். வண்டியை வாசலில் நிறுத்தி விட்டு அம்மா அம்மா….. என்று கூப்பிடபடி ஒரு தீர்க்கமான முடிவோடு உள்ளே சென்றான் சுரேஷ்.

                    ...... வளரும்.!
Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here