நேரம் 9 மணி
இதுதான் லாஸ்ட் பிளான் இனிமேல்
இதுமாதிரி பண்ணக்கூடாது ஜோஸ் கேட்குதா.
கேட்குது சொல்லுடா.
டேபிலின் நடுநாயகமாக நின்று கொண்டு
இருந்தான் அன்வர்.
சுற்றிலும் மேலும் நால்வர் சத்தமின்றி
பார்த்து கொண்டு இருந்தனர்.
மார்க்கர் பேனாவை கொண்டு பேப்பரில்
பிளான் வரைந்து கொண்டு இருந்தான்.
போன தடவை விட்ட மாதிரி இந்த தடவை
நடக்க கூடாது. பிளான் பக்காவா இருக்கு.
இது முடிஞ்சுது அவங்க அவங்க ஊருக்கு
போயிடலாம். ஒ.கே வா.
ஒ.கே அன்வர்.
முக்கியமான விஷயம் அவங்க கிட்ட எந்த
மாதிரி ஆயிதம் இருக்குமின்னு தெரியாது.
சோ.நாம ரொம்ப ஜாக்கிரதையா
இருக்கனும். நம்ம சேப்டிக்கு நீங்கள் வழக்கமா கொண்டு வர்றதை(பிஷ்டல்)
எடுத்துட்டு வந்துடு .சரியா ரெண்டு
மணிக்கு பார்க்கலாம்.
2 மணி
வர்றவங்க எல்லோரும் புது ஆளுங்கதான்.
இதுதான் அவங்களுக்கு முதல் தடவை.
சோ நாம தைரியமாக மூவ் பண்ணலாம்.
நமக்கு கிடைச்ச தகவல் சரியானது தானே
ஜோஷ்
ஆமாம் அன்வர். சரியா 3.30 மணிக்கு
செக் போஸ்ட்டை தான்டிடும்.அன்வர்.
இந்த முறை ஏமாறகூடாது.
செக் போஸ்ட் தாண்டி 5 கிலோமீட்டர்
தூரத்தில் நிக்கலாம்.
வா ஸ்பாட்டுக்கு போயிடலாம். அவங்க
எல்லோரும் ரெடிதான.
ம் ரெடி.
எல்லோரும் நல்லா கேட்டுகங்க.நான்
வண்டி வந்ததும் நிப்பாட்டறேன்.
ஐந்தே நிமிசத்தில அந்த இடத்தில் இருந்து நகர்ந்துடனும்.
நேரம் 3மணி
ஹலோ அன்வர் வண்டி செக் போஸ்ட்டை
தாண்டி விட்டது.
ரெடியா இரு .
அன்வரின் பார்வையில் ரோட்டின் மீதே
இருந்தது.
அன்வர் டேய் அன்வர்
என்னடா
உனக்கு யார் தகவல் தந்தது.
அது எதுக்கு உனக்கு பணம் பாதாளம்
வரை பாயும் தெரியுமா .
நேரம் 3.20
மாருதி ஆல்டோ சிகப்பு நிற வண்டி
வேகமாக வந்து கொண்டு இருந்தது.
கண இமைக்கும் நேரத்தில் காரியம்
நடந்தேறியது.
அடுத்த 5வது நிமிடம் வண்டியில் இருந்த
நால்வரும் கீழே விழுந்து மயங்கி இருந்தனர். வண்டி அன்வரின் கையில்
வேகமெடுத்தது.
அடுத்த நாள்
பிரபல பத்திரிகையின் கடைசி பக்கம் செய்தியில் கேரளா செல்லும் வழியில்
வண்டியில் சென்ற நான்கு பேரை அடித்து
கார் கடத்தல்.
அடிக்கடி இது போன்ற சம்பவங்கள்
இந்த சாலையில் நடைமுறையில் பெறுகிறது.
ஹவாலா பணம் பரிவர்தனை இந்த சாலை வழியாகவே நடைபெறுகிறது. இது போன்ற சம்பவங்களால் சாதாரண
மனிதர்களும் பாதிப்பு அடைகின்றனர்.
காவல் துறையில் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல்
தடுக்க தீவீர கண்காணிப்பில்
ஈடுபட்டுள்ளது.