காமனின் காதல் 2

0
917

கடைசி பருவ தேர்வுகள் நடக்கின்றன நண்பர்களோடு அரட்டை என்று இருந்தவள் இப்போது புத்தகத்தோடு தெரிகிறாள்… அவள் நண்பர்களும் இதே நிலையில் தான் இருக்க, தேர்வுகள் முடிவுக்கு வந்தது… அனைவரும் சேர்ந்து கல்லூரியில் ஒரு கூட்டு புகைப்படம் எடுத்து கொண்டு உணவகத்துக்கு சென்று உணவருந்தி விட்டு அங்கு ஒரு கூட்டு புகைப்படம் கடற்கரைக்கு சென்று ஆட்டம் போட்டு அங்கு ஒரு கூட்டு புகைப்படம் என புகைப்படங்கள் எடுத்து தள்ள பட்டது…

whatsapp குழுவில் தினமும் வருத்தங்கள் சொட்டியது… 3 மாதங்கள் கடந்த போது, “hi” யாராவது செய்தி அனுப்ப அரை மணி நேரம் அரட்டை நீண்டது ஒரு வருடம் கடந்திருந்தது, எப்போதாவது meme கள் மட்டுமே பகிர பட்டது…

அபி சிவகாமியிடம் “ஏன் மா இது தான் வாழ்க்கை ல?! நட்பு சொந்தம் எதுவும் கடைசி வரை கூட வராதுல? ஹ்ம் என்ன வாழ்க்கை டா இது?!”
“இது தான் மா எதார்த்தம்… எல்லாத்தையும் பழகிக்கோ வேலைக்கு போவ அங்கேயும் நட்பு கிடைக்கும் அந்த வேலைய விட்டுட்டு போய்ட்டா அந்த நட்பும் காணா போய்டும். ஆனா உன்கிட்ட தான் இன்னுமும் கொஞ்சம் பேர் நல்லா பேசிட்டுருக்காங்களே அப்புறம் ஏன் கவல படுற? அது மாதிரி நட்பும் கிடைக்கும் ஆனா அதுவும் எப்போ போகும்னு தெரியாது. அதிகமா பற்று வைக்காத…”

“எல்லாம் சரி தான்… நா ஏன் வேற இடத்துல போய் வேலைக்கு சேரனும் என் அப்பா பெரிய நிறுவனம் வச்சி நடத்துறப்போ?”

“எடுத்ததும் பொறுப்புகள் கைக்கு வந்தா நிர்வாகம் எப்படி பண்றதுன்னு தெரியாது மா… அப்பா கத்துக் குடுப்பாங்க ஆனா அது மண்டைல ஏறாது… உங்க அப்பா இவ்ளோ வருஷம் கஷ்ட பட்டு சம்பாரிச்ச பேர நீ காப்பாத்தணும்னா தகுந்த அனுபவம் வேணும் உனக்கு… எதாவது வேலைல போய் சேரு உனக்கு எப்போ நிர்வாக திறன் வருதோ அப்போ அப்பா கிட்ட உன்ன அலுவலகம் கூட்டிட்டு போக சொல்றேன் சரியா?”

“ம்” என்று வேகமாக தலையை ஆட்டியவள் ஆதரவாக அன்னையின் மடியில் படுத்துக் கொண்டாள்…

“சரி வா சாப்பிட்டு போய் தூங்கு …”

4 மாதங்கள் கடந்திருந்தது… தினமும் செய்தித்தாள் android செயலிகள் என வேலையை தேடி அதற்கு விண்ணப்பித்து கொண்டிருந்தாள்… ஆறாவது மாதம் முடிவில் ஒரு நேர் காணலுக்கு அழைப்பு வந்தது அது எந்திர கட்டுமான நிறுவனம்,

“படிப்பை முடிச்சி ஒன்றரை வருஷம் ஆகுது ஏன் இவ்ளோ நாள் வேலைக்கு போகல?” ‘உங்களப்பத்தி சொல்லுங்க’ன்னு கேப்பாங்கன்னு நினைச்சா ஆனா இந்த கேள்வி…

“எங்க வீட்டுல வேலைக்கு போக வேணாம்னு சொல்லிருந்தாங்க mr நாதன் எனக்குன்னு வாழ்க்கைல ஒரு குறிக்கோள் இருக்கு அத சொல்லி புரிய வச்சி அனுமதி வாங்க இவ்ளோ நாள் ஆச்சு”

“உங்களுக்கு அனுபவம் இல்ல இருந்தாலும் உங்களால நல்லா செயல் பட முடியும்னு நம்பிக்கை இருக்கா?”

“இருக்கு mr நாதன் அதுனால தான் இந்த நேர்காணல்க்கு வந்துருக்கேன்”

“ம் நேரான பதில்… எனக்கு சரி நீங்க என்ன சொல்றிங்க மோகன் உங்க குழு ல தான் இவங்கள உக்கார வைக்கலாம்னு நினைக்கிறேன்…”

“எனக்கும் சரி தான் நாதன்… எல்லா shift உங்களுக்கு சரி தான அபிநய சுந்தரி?”

“இரவு பணி மட்டும் முடியாது mr மோகன்.”

“சரி நாங்க உறுதி செய்துட்டு உங்களுக்கு தெரிய படுத்துறோம்… நீங்க போகலாம்.”

நன்றி சொல்லி விட்டு கிளம்பினாள். 15 நாட்களில் அழைப்பு வந்தது…

இறுதியாக அதே நிறுவனத்தில் காமக்காரன் குழுவில் பணியமர்ந்தாள்…

(தொடரும்…)

குறிப்பு: அடுத்த ud கொஞ்சம் அதிகமா போடுறேன் தோழமைகளே…

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here