01.உனக்காக நான் இருப்பேன்

0
384

செல்லம்ஸ் எல்லாருக்கும் ஒரு வணக்கம்…

நம்ம சைட்ல இன்னைல இருந்து ஸ்டார்ட் ஆகுற குறுநாவல் போட்டிக்கு நான் இன்னும் முழுசா ப்ரிபர் ஆகலை…

ஆனாலும்… முதல் நாள் ரொம்ப முக்கியம் இல்லையா?
அதுக்காக ஒரு குட்டி… இல்ல இல்ல…. ரொம்ப குட்டி எபி😍😍😍

அப்புறம் போட்டியில் கலந்துக்குற எல்லாருக்கும் என்னோட விஷஸ்…

சென்னையின் அந்த பிரம்மாண்ட குளிர் சாதன ரெஸ்டாரண்டில் கையை பிசைந்த வண்ணம் அமர்ந்து இருந்தாள் மதுமதி.

அவளின் அருகில் இருந்தவன், அவளின் தோள் தொட்டு சமாதானம் செய்ய முயற்சித்தான் கதிர்.

ஆனால் அவனுக்கும் வரப்போகும் புயலால் கொஞ்சம் பீதியே.

அங்கு அவர்களை சந்திக்க வரும் அவனின் சகோதரிகள் பற்றிய பயம் தான் இருவருக்கும்.

கதிரின் சகோதரிகள் வரும் முன் ஒரு சின்ன முன்னோட்டம்.
கதிர் வீட்டின் கடைக்குட்டி.

அதனாலேயே மூத்த இரு அக்காக்கள் இருவரோடு சேர்ந்து மூன்று அன்னையின் பாசத்தை அனுபவிப்பவன்.

செல்ல பிள்ளை கேட்டு இல்லை என்று அந்த வீட்டில் சொன்னதே இல்லை.

அப்படி இருக்க, அவன் கொஞ்ச நாட்களுக்கு முன் தன் சகோதரிகளிடம்,
“ அக்கா, நான் ஒரு பெண்ணை விரும்புறேன்” என்று வந்து நின்றான்.

மூத்த அக்காள் நளினி கொஞ்சம் அதிர்ந்தாலும் அவனிடம் எதிர்ப்பை காட்டவில்லை.

“ தம்பி அவ்ளோ பெரிய மனுஷனா ஆயிட்டியா நீ?”

பெரியவள் கன்னத்தில் கை வைக்க சிறியவள் மாலினி கேட்டாள்.
“ பொண்ணு யாருடா?”

“ ஆமா யார் அந்த பொண்ணு? உன்னையே கவுத்து இருக்காளே?”

அக்காவின் கேள்விக்கு அவன் வெட்க வில்லை.

மாறாக மாலினியை பார்த்தவன் தலை குனிந்தான்.
அவன் செய்கை மாலினிக்கு சந்தேகத்தை கிளப்ப மீண்டும் கேட்டாள்.

“ யாருடா பொண்ணு? இவ்வளோ பம்முற… என்ன வில்லங்கம்?”
அப்போது தான் நளினியும் கவனிக்க அவளும் அவனை கூர்ந்து பார்த்தாள்.

“ பொண்ணு நல்ல குடும்பத்து பொண்ணு தானேடா?”
நளினியின் கேள்விக்கு ,

“ அய்யோ நல்ல பொண்ணு தான்க்கா. அவ அப்பா கணேஷ்.. அம்மா லட்சுமி… ஒரு அக்கா…” இவன் கூறினான்.

“ பின்னே ஏன் தயங்குற? அப்பாவும் அம்மாவும் ஒத்துப்பாங்கனா? அதுலாம் நான் பாத்துக்கறேன்” மாலினி கூறினாள் இருந்தும் அவன் தலை கவிழ்ந்த படியே இருக்க,

“ என்னை பத்தி யோசிக்குறியா கதிர்? நம்ம சொந்த பந்தம் என் கல்யாணம் முன்னாடியே உனக்கு நடந்தா எதும் சொல்லும்னு பயப்புடுறியா?” மாலினி கேட்க தம்பியின் அமைதியை கண்டு நளினியும்

“ அது தான் உன் கவலையா கதிர்? நம்ம சொந்தங்களுக்கு ஏற்கனவே மாலினி பொட்டுல அடிச்சாப்ல பதில் சொல்லிட்டா… இந்த விஷயத்துல நாம என்ன சொன்னாலும் அவ கேட்க போறது இல்லை.
உனக்கே தெரியும் அவ குணம். அதனால உன் கவலையை விடு.
கூடவே இவளுக்கு கல்யாணம் ஆகி அப்புறம் உனக்கு கல்யாணம் பண்ணனும் அப்படினா நீ கடைசி வரை கிழவனா தான் இருப்ப” என்று இருவர் மேலும் தன் கோபத்தை காட்டினாள் நளினி.

இது தான் நளினியின் குணம்

எல்லோரிடமும் அமைதி என்று பேர் எடுத்ததாலோ என்னவோ கோவம் கூட இது போன்றே அமைதியாக இருக்கும்.

ஆனால் மாலினி இவளுக்கு முற்றிலும் மாறுபட்டவள்.

முழுதாக ஒரு மணி நேரம் அவளால் குரலை உயர்த்தாமல் இருக்க முடியாது.

ஆனால் எப்போதும் அவளை அறிந்து வைத்து இருப்பவர்களுக்கு புரியும் அவள் எப்படி பட்டவள் என்பது?

“ அதுவா உன் பிரச்சனை கதிர்?” அவனையே கூற கேட்டாள்.

‘இல்லை’ என்பது போல் அவன் தலையசைக்க…

“அப்புறம் என்ன?”

“வந்து…”

மனதிற்குள் ஓராயிரம் ஓலம்… இருந்தும் வரவழைத்த தைரியத்துடன் கூறினான்.

“ மதுவோட அக்கா உன் கூட படிச்சவங்க” மாலினியை பார்த்து கூறினான்.

நளினி சிரிப்புடன்,
“அப்போ ரொம்ப வசதியா போச்சு…” கண்ணடிக்க…

மாலினி அப்போதும் அவனை பார்த்தாள் கூர்மையாக.
“ யாரு அது கதிர்?”

“ அது…. ர்… ர… ராகவி”

யார் அந்த ராகவி அடுத்த பதிவுல பார்க்கலாம்

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here