11.என்னவள் நீதானே

0
449

என் வாழ்வில்
புயலாகி விடுவாயோ
என்று எண்ணி
உன்னை விட்டு விலகும்
போதெல்லாம்
நீ தென்றலாக மாறி
என் மனதை
உன் பால் ஈர்க்கின்றாயடி
பெண்ணே……

உனக்கும் எனக்குமான
இந்த யுத்தத்தில்
ஆயுதம் இன்றி
உன் விழியாலே
எனை வெல்கிறாயடி !!!!

ஆராவின் அலறலை கேட்டவன் தன்னையும் மறந்து சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான்..

தூரத்தில் அவள் மயங்கிய நிலையில் விழுந்து கிடக்க பதறியடித்து கொண்டு ஓடியவன், அவளை தூக்கி அடிபட்டு இருக்கானு பாக்க அங்கங்கே சில கீறல்கள் அவ ட்ரஸ்லயும் கொஞ்சம் கிழிசல்கள்..அதுவே அவளின் நிலைய உணர்த்த அவளை எழுப்ப முயன்றான்..

அந்த அரை மயக்க நிலையிலும் கண் விழித்து பாத்தவள் எதிரில் இருப்பது தன்னவன் தான் என்று அறிந்தவுடன் தாயை கண்ட சேய் போல் அவனின் நெஞ்சில் தஞ்சம் அடைந்தாள்…

சிவா அவளை தன் நெஞ்சோடு அனைத்து ஆறுதல் படுத்திவிட்டு, தன் கோர்ட்டை அவளுக்கு அணிவித்தவன் அவளின் முகத்தை நிமிர்த்தி என்ன ஆச்சு என்று விசாரித்தான்.

ஆரா சிவாவின் முகத்தை பாத்து மேலும் விசும்ப… சிவவோ,”இப்படி அழுதுட்டே இருந்தா நான் என்ன தான் நினைக்கிறது… நீ எப்படி இங்க வந்த உனக்கு என்ன ஆச்சு என் மேல நம்பிக்கை இருந்தா சொல்லு இல்லனா வேணாம்”னு குரலில் சிறு சினம் கொண்டு உரைக்க….

தன்னவளை இந்த நிலையில் பாத்த பின்பு அதுக்கு காரணமானவனை சும்மா விட கூடாது என்று மனதில் நினைத்தவன்… அவளிடமே அதுக்கான காரணத்தை கேக்க அவளோஅழுது கொண்டே இருக்க,அவளிடம் இருந்து பதிலை வாங்குவதற்காகவே குரலில் சினம் கொண்டு பேசிருந்தான்….

இந்த நிலையில் பார்த்த பின்பு தன்னவன் எப்படி நினைப்பானோ என்று எண்ணியே அவள் அழுது கொண்டிருக்க, அவனோ கோப முகம் காட்டவும் அவனிடம் நடந்ததை விவரிக்க தொடங்கியிருந்தாள்….

ஆரா,”நாங்க டான்ஸ் முடிச்சுட்டு வந்துட்டு எல்லாரும் கேன்டீன் போலாம்னு கிளம்பும் போது எங்க காலேஜ்மேட் கண்ணன் வந்து எல்லாருக்கும் ஜூஸ் கொடுத்தான்….. நானும் வாங்கி கொஞ்சம் குடிச்சேன் அப்பறம் அதுல ஏதோ கலந்துருக்கற மாதிரி தோணுச்சு… அந்த நிலமைல என் பிரண்ட்ஸ் கிட்ட கூட ஏதும் சொல்லாம இரு வரேன்னு சொல்லிட்டு நான் வாஷ் ரூம் போலாம்னு வந்தேனா அதுக்குள்ள கண்ணன் வந்து என் கைய புடிச்சு இழுதிட்டு போனான் அவன் கிட்ட இருந்து தப்பிக்கறதுக்குள்ள எனக்கு மயக்கம் வர மாதிரி ஆயிடுச்சு என்ன ஆனாலும் பரவால்ல ஆனா அவன் கிட்ட மாட்டிக்க கூடாதுன்னு ஓட ட்ரை பண்ணேன்….. அப்போ தான் அவன் ட்ரஸ் புடிச்சு இழுத்துட்டான்,அதையும் தாண்டி விழுந்தடிச்சு ஓடி வந்ததுல தான் கால் தடுக்கி கீழ விழுந்துட்டேன்… எங்க இருந்து எப்படி ஓடி வந்தேனே தெரியல”னு சொல்லிட்டு… ஆரா சிவாவை பாக்க….

அவனோ முகம் சிவக்க கோபக்கணலில் இருந்தான்…. அவளின் பார்வையில் உள்ள பதட்டத்தை உணர்ந்தவன் அவளிடம் கோபம் காட்டாமல்,”சரி வா போலாம்”னு அவளை அழைத்து தோளோடு அணைத்து தன்னுடன் அழைத்து சென்றான்….

அவளை அழைத்து செல்லும் போதே அவளிடம் கண்ணனுக்கும் அவளுக்குமான பிரச்சனையை கேட்டறிந்திருந்தான்….

அவளுக்கோ அவனின் அணைப்பில் வருவது சுகமாய் இருந்தாலும் தன்னுடன் அவன் சேர்ந்து வருவதை யாராவது பார்த்தால் அவனுக்கு பிரச்னையாகி விடுமோ என்று பயத்துடன் அவனை பார்த்துக்கொண்டே வந்தாள்…..

இதற்கிடையில் ஆதவ்வும் ஜானுவும் ஒண்ணா வரும் போது, அவள் அவனை முறைத்துக்கொண்டே வர பொறுமையிழந்த ஆதவ் அவளிடம்,”ஏய் எதுக்கு இப்போ மொராச்சுட்டு வர”..

ஜானு ஏதும் பேசாமல் அமைதியாவே வர உன்ன கூப்பிட்டு வரதுக்கு நான் என் தம்பி கூடயே வந்துருப்பேன்னு ஆதவ் சொல்ல….

ஜானு அவனை கோபமாக பாத்துட்டு,
“ஆமா எப்பவும் என் கூட இருக்க கூடாதுனு தானே நினைக்கிறீங்கனு” விரக்தியாய் சொன்னாள்…

ஜானுவின் மனதை அறிந்த ஆதவ்வோ அய்யோ சும்மா இருந்தவள டென்ஷன் வேற பண்ணிட்டனே சும்மாவே சாமி ஆடுவா இனிமே கேட்கவா வேணும்னு மனதிற்குள் புலம்பி கொண்டிருக்க….

அந்த நேரத்தில் சிவாவும் ஆராவை கைத்தாங்கலாக அழைத்து வர, அதை கண்ட ஜானு மற்றும் ஆதவ் உடனே ஓடி சென்று அவளை பிடிக்க…. ஜானு ஆராவை அழைத்து கொண்டு வந்து அமர்ந்தாள்….

ஜானு சிவாவை பாத்து,”என்ன ஆச்சு னா
ஆராவை நீ எங்க பாத்த”னு கேக்க…

ஆதவ்வும்,”ஆமாண்டா என்னடா ஆச்சு சொல்லு”னு சொல்ல….

சிவாவும் நடந்ததை எல்லாம் சொன்னான்…

ஆதவ் ஆராவிடம் சென்று,”பயப்படாதடா ஒன்னும் இல்ல அண்ணன் இருக்கேன்ல நான் பாத்துக்கிறேன்,ஜானுவும் உன் கூட தான் இருப்பா.. நாங்களே உன்ன வீட்ல விட்டுறோம்”னு சொன்னான்….

அவளோ தன்னுடைய நிலையை நினைத்து யோசிக்க…

சிவா ஆராவிடம்,” நீ ஜானு கூட
போயி ட்ரஸ் மாத்திட்டு வீட்டுக்கு போ… ஜானு இனியன் உன் கூட வருவாங்க… அப்பறம் உன் பிரண்ட்ஸ்க்கு கால் பண்ணி அவசரமா வீட்டுக்கு வந்துட்டேன்னு சொல்லிரு” னு சொல்லிட்டு…
ஆதவ்வை பாத்தான்…

சிவாவின் பார்வை அறிந்த ஆதவ் இனியனுக்கு கால் பண்ணி நடந்ததை கூற… அப்போ தான் அவனும் அவனுடய பெர்பார்மன்ஸ் முடிச்சுட்டு
அவங்கள தேடிட்டு இருந்தான்,ஆதவ் கால் பண்ணவும் இனியனும் கேன்டீன் வர…..

ஆதவ்வும் சிவாவும் இனியனிடம் அந்த கண்ணன் போட்டோ மற்றும் டீடைல் வேணும் இன்னும் 5 நிமிஷத்துல நீ வாங்கி குடுன்னு சொல்ல அவனும் தன் நண்பர்களுக்கு அழைத்து அவனை பத்தின தகவலை வாங்கி கொடுத்திருந்தான்….

இனியன், ஜானு மற்றும் ஆராவை கூப்பிட்டு போயிட்டான்… ஆராவும் சிவா சொன்ன மாதிரியே அக்ஸாக்கு கால் பண்ணி அவசரமா வீட்டுக்கு வந்துட்டேன் மீதி நாளைக்கு காலேஜ் வந்து சொல்றேன்னு சொல்லிட்டு போன் வச்சுட்டா..

அவர்களை அனுப்பிவிட்டு சிவா ஆதவிடம்,
“மச்சான் அவனை சும்மா விட கூடாது டா”…

ஆதவ்,”அவனுக்கு அரசியல் பேக்ரௌண்ட் இருக்குடா”

சிவா,” தெரியும் டா… ஆரா சொன்னா அதுனால தான் அவளுக்கு பிரச்னை வர கூடாதுனு அவளை அனுப்பி விட்டேன் டா”

ஆதவ்,”அவனை என்னடா பண்ண போறோம்…”

சிவா,”ஒரு நக்கலான சிரிப்புடன்…. பெருசா ஒன்னும் இல்ல.. ஆனா நம்ம பண்ண போறதுல அவன் ஆராவ மட்டும் இல்ல எந்த பெண்ணையும் இனி தப்பா பாக்க கூடாது… அவ்ளோ தான்…”

ஆதவ்,”சரிடா… கம்பெனில இருந்து கார் வந்திருச்சு அப்டியே நம்ம தர்மாவும் வந்துட்டான்…”

இந்த மாதிரியான சில மறைமுக காரியங்களுக்காகவே தர்மாவை உடன் வைத்திருந்தனர்……. பல வகையான எதிரிகளை பாத்தவன் ஆயிற்றே….

தர்மாவை அழைத்த சிவா, கண்ணனை பற்றி எல்லா தகவலும் குடுத்துட்டு, நீ அவனை கூப்பிட்டு வா… நாங்க கார்ல வெய்ட் பண்றோம்னு கெளம்பிட்டான்….

உள்ளே சென்ற தர்மா அவனை தேட விதியின் வசத்தால் அவனை அதிகம் தேட வைக்காமல் தர்மாவின் விழியில் அகப்பட்டான் கண்ணன்…

தர்மா அவனிடம் அரசியல் பின்புலம் உள்ளவன் போல் காட்டிக்கொண்டே பேச தொடங்கினான்…
கண்ணனும் தன் தந்தைக்கு தெரிந்தவர் என்று பேசிக்கொண்டே வர…ஆள் அரவம் இல்லாத இடத்துக்கு வந்தவுடன் தர்மா ஓங்கி ஒரு குத்து முகத்தில் விட்டான்… வாங்கிய அடியில் மயங்கி விழுந்தான் கண்ணன்…

கண்ணன் என்ன ஆவான்???

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here