இரவெல்லாம் அழுது புலம்பிய படியே தூங்கிய மகி காலையில் சீக்கிரமே கண் விழித்து விட்டாள்…
அவள் கண்விழித்து பார்க்கையில் ஒன்றும் அறியாத பச்சை குழந்தை போல் தூங்கிக் கொண்டிருந்தான் அபய்….
தன்னையும் அறியாமல் குழந்தை போல் தூங்கும் அபயை ரசித்தவள்..தன்னை நிதானதிற்கு கொண்டு வந்து அவன் குடுத்த போர்வையை மடித்து வைத்து விட்டு நேத்து நைட்டு அவன் தட்டி விட்ட பால் சொம்பை
எடுத்து வைத்து விட்டு பால் சிந்திய இடங்களையும் சுத்தம் செய்து முடித்து விட்டு தேவையான துணிமணியை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள்…
குளியல் அறைக்குள் நுழைந்த மகி சவரை திறந்து விட்டு அப்படியே நின்றாள்… அவளின் புண்பட்ட மனதிற்கும் உடல் சோர்வுக்கும் குளிர்ந்த நீர் இதமாகவே இருந்தது அவளுக்கு…. எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாள் என்று தெரியவில்லை அதன் பின்னே சுயநினைவு வந்தவளாய் குளித்து முடித்து உடை மாற்றி விட்டு வெளியே வந்தாள்….
குளித்து முடித்துவிட்டு இளமஞ்சள் நிற சேலையில் தலையில் ஈரம் சொட்ட அழகு பதுமை போல் வந்து நின்றாள் மகி…அவள் வரவும் அபய் கண் விழிக்கவும் சரியாக இருந்தது….
கண்விழித்த அபய்க்கு தேவதை போல் காட்சி அளித்தாள் மகி… இன்னேரம் அவன் மட்டும் விரும்பி திருமணம் செய்திருந்தால் அவளை அவன் கையணைப்பில் இருந்து விட்டிருக்க மாட்டான்…
அபயோ மனதுக்குள்,”என்னடா
அபய்…ச்ச இவ்வளவு வீக் ஆன ஆளா நீயி… அவளை போயி இப்படி பாத்துட்டு இருக்க இவ இல்ல தேவ லோகத்துல இருக்கற ரம்பை ஊர்வசி யாரு வந்தாலும் உன் விருப்பமில்லாமல் உன் கிட்ட நெருங்க முடியாது என்று தனக்கு தானே கடிவாளம் போட்டு கொண்டிருந்தான்…
மகியும் அபய் கண் விழித்ததை கண்டு கொண்டாள்…அவன் முன்பு அதிக நேரம் இருந்தால் ஏதாவது சொல்லி விடுவானோ என்று பயந்தே சாதாரணமாக பொட்டு குங்குமம் வைத்து கொண்டு ஒரு க்ளிப்பை எடுத்து தன் கூந்தலில் குத்திக்கொண்டு வெளியேறினாள்…
தன் முகத்தில் எந்த கவலையும் காட்டிக்கொள்ளாமல் சிரித்த முகத்துடனே கீழே சென்ற மகியை பார்த்தவுடன் பாட்டிக்கும் முத்து தம்பதியினருக்கும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது…
பாட்டியோ தன் பேரன் வாழ்க்கையை தொடங்கி விட்டான் என்றும், முத்து தம்பதியினருக்கு ஆரம்பத்திலிருந்தே மகியை கட்டாய படுத்துகிறோமோ என்ற எண்ணம் இருந்தது தற்போது தன் மகளை பார்த்தவருக்கு மகளும் விரும்பியே இந்த வாழ்வை தேர்ந்தெடுத்திருக்கிறாள் என்று நிம்மதி அடைந்தனர்… பாவம் அவர்கள் அறியவில்லை அது பெண்மைக்கே உண்டான குணம் என்று….எவ்வளவு தான் பெண்கள் விளையாட்டு தனமாய் இருந்தாலும் கல்யாணம் என்ற உடன் அந்த மஞ்சள் கயிருக்கும் அதை கட்டியவனுக்கும் அவர்கள் அளிக்கும் மரியாதையும்… புகுந்த வீட்டில் எவ்வளவு சிரமப்பட்டாலும் அவர்களை விட்டுக்குடுக்காத குணமும் பெண்களை அன்றி யாருக்கும் அமையாது என்று சொன்னால் மிகையாகாது… இந்த விஷயத்தில் மகி மட்டும் விதி விலக்காக என்ன??
மகியை அழைத்து பூஜை அறையில் விளக்கேற்றி சாமி கும்பிட சொன்னார் பாட்டி…. அவள் கையில் இரண்டு காபி கப்பை குடுத்து இது உனக்கும் அபயக்கும் நீ கொண்டு போயி குடு என்றார்…
அவளும் மறுக்காமல் வாங்கி கொண்டு தனதறைக்குள்.. இல்லை இல்லை அபயின் அறைக்குள் நுழைந்தாள்…
அதற்குள் அவனும் குளித்து முடித்துவிட்டு ஷார்ட்ஸ் மற்றும் டி சர்ட் அணிந்து கொண்டு நின்றிருந்தான்…
தயங்கியபடியே அவனருகில் சென்றவள் இந்தாங்க என்று காபியை நீட்ட அவனோ அவளை முறைத்த வண்ணம் நின்று கொண்டிருந்தான்…
அவன் அடுத்து கத்தி கூப்பாடு போடுவான் என்று அறிந்தவள்… இதை பாட்டி தான் உங்க கிட்ட குடுக்க சொன்னாங்க என்று கூடுதல் தகவலையும் தர அவன் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தான்… அவளும் தனக்கான கப்பை எடுத்துக்கொண்டு பால்கனிக்கு சென்றுவிட்டாள்… காலை நேர சில்லென்ற வீசிய காற்றும் அழகான சூரிய உதயமும் அவ்வளவு ரம்மியமாக இருந்தது அவளுக்கு …. அதை ரசித்துக்கொண்டே காபியை குடித்து முடித்துவிட்டு இருவரது கப்பையும் எடுத்துக்கொண்டு கீழே வந்தாள்…
கீழே இறங்கி வந்தவள் நேராக கிச்சனுக்கு சென்று அந்த குடும்பத்தின் மருமகளாக அனைத்து வேலையும் செய்ய தொடங்கி இருந்தாள்…அதை பார்த்த பாட்டியோ நீ ஏன்மா இதெல்லாம் செய்யற… இதெல்லாம் செய்ய தான் ஆளுங்க இருக்காங்களே என்றார்…
மகியோ இல்ல பாட்டி இது நம்ம வீடு தானே…நான் இந்த வீட்டு மருமக தானே இதெல்லாம் செய்யறதுல எனக்கெந்த பிரச்சனையும் இல்லை.. என்று உரிமையுடன் அவள் கூறிய விதம் பாட்டிக்கு மிகவும் பிடித்திருந்தது…
காலை அவளே அனைவருக்கும் பிரேக்பாஸ்ட் செய்து கொண்டிருந்தாள்..அதே சமயம் கீழே வந்த அபய் பாட்டியிடமும் முத்துவிடமும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தவன் பின்பு நியூஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு வெளியே உள்ள தோட்டத்தில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து பேப்பரை புரட்டிக்கொண்டிருந்தான்….
அபய் பேப்பர் படித்து கொண்டிருக்கும் போது அவன் மொபைல் ரிங் ஆக அதை எடுத்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி… அதிர்ச்சியுடனே இவ இதுக்கி இந்த நேரத்துக்கு கால் பண்ரா ஒரு வேளை இந்த கல்யாண விஷயம் அவளுக்கு தெரிஞ்சிருக்கோமோ என்று அவன் கணித்தது சரியே… அவன் கால் அட்டன்ட் செய்து காதில் வைக்க… மறுமுனையில் கீர்த்தி,”என்ன வேணாம்னு சொல்லிட்டு… என் கூட எல்லாமும் பண்ணிட்டு இப்போ எவளோ ஒரு பஞ்ச பரதேசியை கல்யாணம் பண்ணியிருக்கயாமே இந்த பேரழகிய கட்ட தான் என்ன வேணாம்னு சொன்னயோ என்று கோபமாக கத்தி கொண்டிருந்தாள்..
இதற்கிடையில் பாலாவும் ரெடி ஆகி வர, கிச்சனில் இருந்து மகி அவனுக்கு காபியை எடுத்து கொண்டு வந்து இந்தாங்க அண்ணா என்றாள்… மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கிக்கொண்டு தான்க்ஸ் மா என்று புன்னகைத்துவிட்டு வெளியே வந்தான்… அப்போது தான் அபய் அங்கே கீர்த்தியிடம்,”ஹே… நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் தான் முடிவு பண்ணனும் நீ இல்ல… ரொம்ப பத்தினி மாதிரி பேசாத நீயா தான் என் பின்னாடி வந்த நான் இல்லை புரியுதா…நான் பணக்கார பொண்ண கல்யாணம் பண்ணல தான் ஆனா இப்போ அவ தி கிரேட் பிசினஸ் மேன் அபயோட பொண்டாட்டி… அண்ட் ஃபார் யுவர் கைண்ட் இன்பார்மேஷன் அவ ஒன்னும் உண்ண மாதிரி கிடையாது… ஐ மீன் நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கே புரிஞ்சிருக்கும்… என கத்திக்கொண்டிருந்தான்… இவை அனைத்தையும் இரு ஜோடி காதுகள் கேட்டு கொண்டிருந்தன…..
கீர்த்தியும் சளைக்காமல் நீ எப்படி அவ கூட வாழரணு பாக்றேன் என்று கத்திவிட்டு போனை அணைத்திருந்தாள் அவளின் முகத்திலோ வெறியும் கோபமும் ஒரு சேர கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது… அபயும் உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ என்று போனை அணைத்திருந்தான்…
வெளியே காபியுடன் வந்த பாலாவின் அலைபேசி அலர அதை எடுத்தவன் அதில் தெரிந்த டிடக்டிவ் பேரை பார்த்தவுடன் பிரகாசமானது அவன் முகம்… உடனே கால் அட்டன்ட் செய்து காதில் வைத்தவன் எதிர்புறம் சொன்ன தகவலை கேட்டு ஆனந்தமும் அதிர்ச்சியும் ஒரு சேர கொண்டான்….
அதே சந்தோசத்துடன் அபயிடம் வந்து குட் மார்னிங் மச்சான்… ஏன் காலைலயே கடுப்பா இருக்க அந்த கீர்த்தியா என்றான்.. பின்ன இவ்ளோ நேரம் அவன் பேசுனத இவனும் கேட்டுகிட்டு தானே இருந்தான்… அபயும் ஆமாம் மச்சான் அதே இம்சை
தான் என்றான்…
சரி உன் மூட மாத்த உனக்கொரு சந்தோஷமான விஷயம் சொல்லட்டா என்றான்..அபய்,”ஏன் மச்சான் நீயும் கல்யாணம் பண்ணிக்க போறையா” என்று அவனை வாரினான்..
பாலா,” நீ இப்போ தானே பண்ணியிருக்க… நீ வாழ்ந்து பாத்துட்டு சொல்லு அப்பறம் நான் பண்ணிக்கிறேன்” என்றான்…
அபய்,” சரி,அப்போ உனக்கு சந்நியாசம் தான்” சரி என்ன ஏதோ சொல்ல வந்த மாதிரி கூப்பிட்ட என்ன என்றான்…
பாலாவும் ஆமா மச்சான் டிடக்டிவ் ஏஜென்ஸில இருந்து கால் பண்ணி இருந்தாங்க அந்த MMS அனுப்புனது அந்த கீர்த்தியோட ஆளு தானாமா. அதை வச்சு உன் கிட்ட பணம் பறிக்க தான் பிளான் போட்டு இருக்காங்களமா.. நம்ம ஆளுங்க மிரட்டுனதுல பயந்து போய் உண்மைய ஒத்துகிட்டாங்க என்றான்…
அபய்,”கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இதை சொல்லிருந்தனா அவளை போன்லயே ஒரு வழி பன்னிருப்பேன்… ச்ச மிஸ் ஆயிட்டா என்றான்…
பாலா,” விடுடா அவ கண்டிப்பா திரும்பி வருவா அப்போ பாத்துக்கலாம்..” னு சொல்லிட்டு ரெண்டு பேரும் நியூஸ் கொஞ்சம் அரட்டை அடித்துவிட்டு உள்ளே வந்தார்கள்…
உள்ளே வந்தவர்களுக்கு பிரேக் பாஸ்ட் பரிமாறினாள் மகி அனைவரும் பேசியபடியே பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் பாட்டிக்கோ மகியின் சமையல் மிகவும் பிடித்திருந்தது அபயும் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்…
சமையலில் வித்தியாசத்தை உணர்ந்த அபய் பாட்டியை திரும்பிப்பார்க்க பாட்டியோ சிரித்துக்கொண்டே உன் பொண்டாட்டி தான் பா சமைச்சது என்றார்… அவனும் அனைவரது முன்னிலையிலும் எதுவும் கூறாது சமையல் நல்லா இருக்கு என்று கூறினான்… மகிக்கு இது கனவா நனவா என்று சந்தேகம், இருந்தும் புன்னகையுடனே அனைவருக்கும் பரிமாறி விட்டு தானும் அமர்ந்து சாப்பிட்டாள்….
பாட்டியோ பாலாவை பாத்து, கண்ணா இன்னைக்கு ஈவினிங் ரிசப்ஷன் இருக்கு தெரியுமுல.. எல்லாத்தையும் ரெடி பண்ணு பெரிய இடத்து ஆளுங்க எல்லாம் வராங்க அவங்களுக்கும் அரேஞ்மெண்ட்ஸ் கரெக்டா இருக்கனும்பா என்க… பாலாவும் பாட்டி என்கிட்ட சொல்லிட்டீங்க இல்ல எல்லாத்தயும் நான் பார்த்துக்குறேன் நீங்க கவலைப்படாதீங்க என்றான்…
முத்துவும் அன்புவும் சாப்பிட்டு முடித்துவிட்டு பாட்டியிடம் தாங்கள் ஈவினிங் ரிசப்ஷன் வருவதாக கூறிவிட்டு கிளம்ப ஆயத்தமாயினர்…. பாட்டியும் இப்போ என்ன அவசரம் இன்னும் ரெண்டு மூணு நாள் இருந்துட்டு போலாம் இல்ல என்றார்….
முத்துவோ இல்லமா பொண்ணு கொடுத்த இடத்தில் அவ்வளவு நாள் தங்க முடியாது… அது நல்லா இருக்காது நாங்களும் போயிட்டு எல்லா அரஞ்சுமெண்ட்சும் பார்த்துட்டு ஈவினிங் ரிசப்ஷனுக்கு வந்துர்றோம் என்றார்…
பாட்டியும் சரிப்பா நீ எப்பவுமே ஒரு முடிவு எடுத்துட்டா மாத்திக்க மாட்ட… நான் உன்னை கம்பெல் பண்ணலை ஆனா பொண்ணு கொடுத்திட்டோம்னு தயங்கிட்டே இருக்காத உனக்கு உன் மகளை எப்போல்லாம் பார்க்கணும்னு தோணுதோ அப்போல்லாம் தாராளமாக வந்து போகலாம்.. இதுவும் உனக்கு ஒரு வீடு மாதிரி தான் புரியுதா என்றார்உரிமையுடன்…..
முத்துவும் மகிழ்வுடனே சரிமா என்க அன்புவும் பாட்டியிடம் கூறிக்கொண்டு மகியை பார்க்க… மகி அழுவதற்கு ரெடியாக இருந்தாள் அன்பு அவளை கட்டி அணைத்து விட இருவருக்கும் பிரிவில் தானாக கண்ணீர் வந்தது பெண் பிள்ளையாக பிறந்தாலே இது அனைத்தும் நடந்து தானே ஆக வேண்டும்….
இருவரையும் சமாதானப் படுத்திக் கொண்டு தன் மகனை அழைக்க
பிரபுவும் அக்கா என்று மகியை கட்டிப்பிடித்து அழுதான்… முத்துவே அவர்கள் இருவரையும் சமாதானப் படுத்திக் கொண்டு மகியிடம் விடை பெற்றுகொண்டு வீட்டுக்கு சென்றார்….
அபய்க்கோ இதை பார்த்தால் சினிமா பார்ப்பது போல் இருந்தது…அவன் தான் பாசம் அறியாதவன் ஆயிற்றே