அத்தியாயம் 2
எதை நோக்கி இந்த பயணம் ???
எதை நோக்கி என் வாழ்க்கை???
எதை நோக்கி நான் செல்கிறேன்???
எதை மறைப்பதற்கு இந்த வேஷம்?
எதற்காக இங்கு வந்தேன் ???
எதிலிருந்து தப்பிக்க இந்த ஓட்டம்??
தனக்கு தானே கேட்டுக்கொண்டால் இசை
கிழனூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய கிராமம்…
டெல்டா மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டையில் கிழனூர் மக்கள் அனைவரும் விவசாயத்தை முக்கியமான தொழிலாக கருதுகின்றனர்… எங்கு பார்த்தாலும் வயல்கள் தொப்புகள் என்று மிக அழகாக திகழும் அந்த ஊரில் மிக பெரிய வீட்டின் முன் அந்த வண்டி நின்றது ..
ராஜாத்தி இந்த அப்பத்தாவ பாக்க வந்துடியா என்று ஓடிவந்து கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டார் கமலம்
அடியே மலரு ஆரத்தி தட்ட எடுத்துட்டு வாடி சீக்கிரம்…
தோ வந்துட்டேன் ஆத்தா என்று ஆரத்தி தட்டுடன் வந்தாள் தேன் மலர் …. கிராமத்து கருப்பு அழகி 15 வயது பெண் அந்த வீட்டில் வேலை செய்த மணிமேகலையின் மகள்..
மாமா அக்கா எம்புட்டு அழகா இருக்காங்க அப்படியே சமந்தா மாரி இருக்காங்க… டக்குனு அவள் கண்ணத்தில்
உரசி பார்த்தால் … ஆத்தாடி நீங்க முகத்தில் எதுவும் பூசலயா எப்படி அக்கா இம்புட்டு கலரா இருக்கீங்க வெகுளியாக கேட்டாள் மலர்
அவளின் குழந்தைத்தனமான பேச்சை ரசித்து பார்த்தால் இசை … இனியனும் ஒரு நொடி இசையை ரசித்தான்
வெள்ளையா இருகவங்க மனசு எப்பவுமே கருப்பாவும் அழுக்காக்கவும் இருக்கும் நம்பாத ….மலரு என்று இசையை புண்படுத்த கூறினான் இனியன் …
வலதுகால எடுத்து வைத்து அந்த வீட்டிற்குள் நுழைத்தாள் இசை.
மிகவும் எளிமையான வீடு … பெரிய ஹால் அதில் ஒரு சோபா செட் ஒனிடா டிவி … அதை சுற்றி 4 ரூம்கள் வலது பக்கம் சமையல் அறை பின் புறத்தில் தோட்டம் என்று மிகவும் அழகாக இருந்தது அந்த வீடு…
இனியனின் தம்பிகளை அறிமுக படுத்தினார் கமலம்.. இவன் தான் உன் புருஷனோட முத தம்பி கவிநேயன் bsc படிச்சிட்டு உன்புருஷனுக்கு ஒத்தாசையா நம்ப தொழில பாக்குறான்.. இவன் மகிழன் இந்த வண்டிய ஆட்டோ அதை பத்தி படிக்குறான் … ஆச்சி அது ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்… ஏதோ போடா .. இவன் அகிலன் கம்ப்யூட்டர் பத்தி படிக்குறான் இவுங்க இரண்டு பேரும் இரட்டையர்கள்…. இவன் தான் இந்த வீட்டோட கடைக்குட்டி செந்தமிழன் பத்தாவது படிக்குறான் என்று சொன்னார்
இசைக்கு தமிழை மிகவும் பிடித்து ஹாய் தமிழ் என்றாள். அவன் எந்த பதிலும் கூறாமல் நின்று கொண்டு இருந்தான் அவன் கண்களை பார்த்தால் அதில் வெறுப்பு மட்டுமே தெரிந்தது…
என் மேல் அவனுக்கு என்ன கோபம் …என்று யோசித்தாள்
களைப்பா இருக்கா தாயி மோர் ஏதாவது குடிக்கிறியா
இல்ல வேண்டாம் பாட்டி
பாட்டினு சொல்லத்த கண்ணு அப்பத்தா னு கூப்பிடு
ஓகே அப்பத்தா
இங்க பாரு ஆச்சி உன் பேத்திய கொஞ்சினது போதும் இனிமே இந்த வீட்டுல அம்புட்டு வேலையும் அவ தான் பாக்கணும் புரிஞ்சுதா
டேய் வந்த முத நாளே ஏன்டா அவள பயமுறுத்துற ஆனால் இசை நேராக நிமிர்ந்து அவனை பார்த்தால்… எதற்கும் அஞ்சாதவள் இசை ..இவளாவது பயப்படுரதாவது திமிரு என்று சத்தமாக முணுமுணுத்து தன் அறைக்கு சென்றான் இனியன்
நீ வாடா வந்து விளக்கு ஏத்து வா என்று சாமியரைக்கு அழைத்த சென்றார்… சாமி படத்தில் விளக்கு ஏற்றி கும்பிட்டால் இசை
நா இங்க இருக்குறது யாருக்கும் தெரியக்கூடாது கடவுளே.. அவன் என்ன கண்டுபிடிக்க கூடாது.. நா அவன்கிட்ட மாடிக்கக்கூடாது நீ தான் எல்லாரையும் காப்பாத்தனும் என்று மனமார வேண்டிக்கொண்டால் இசை
ராஜாத்தி கொஞ்சம் ஓய்வு எடுமா அதோ இருக்கு பாரு இனியன் ரூம் அங்கப்போய் தூங்கு
அப்பத்தா என் சூட்கேஸ் எங்க இருக்கு
அது இனியன் ரூம்ல தான் இருக்குமா போடா போய் நல்லபடியா தூங்கு பயப்படாத எல்லாம் சரியாகும் என்று சொல்லிவிட்டு அடுபடி நோக்கி சென்றார் கமலம்
இனியன் ரூம்குள் சென்றாள் .. அவன் அங்கு இருந்ததை கூட கவனிக்காமல் அவளுடைய சூட்கேசில் உள்ள நம்பர் லாக்கை திறந்தாள் அவளுடைய போணை எடுத்து கொண்டு தோட்டத்தை நோக்கி ஓடினாள் …
இனி என்ன செய்வது நான்கு மணி நேரத்தில் என் வாழ்க்கை பாதை மாற்றி விட்டதே . திருமணம் என் வாழ்க்கைக்கு சாத்தியமா. நான் கல்யாணம் செய்து கொண்டது அவனுக்கு தெரிந்தால் என் நிலமை என்ன ஆகும்.. இதுவரை யாருக்கும் பயப்படாத நான் ஏன் அவனை பார்த்து இப்படி பயப்படுகிறேன்.. இனி பயப்பட கூடாது என்று நினைத்தால் . தன் மொபைலை தூக்கி கிணறுகள் எறிந்தாள்..
இவள் செய்த அனைத்தையும் இருவர் பார்த்தனர் .. ஒருவன் இனியன் மற்ற ஒருவர் யார் என்பது போகப்போக தெரியும் உங்களுக்கு …
இசை அக்கா எங்க இருக்கீங்க என்று கத்தி கூப்பிட்டால் மலர் .. தோ வரேன் மலர்
அக்கா இங்கன என்ன பண்றிங்க உங்கள பாக்க எல்லாரும் வந்துருக்கங்க உள்ள வாங்க
இனியனின் கல்யாணம் விஷயம் கேள்வி பட்டு இவளை பார்க்க அந்த ஊரே திரண்டு வந்தது .. எல்லாரும் இவர்களை வாழ்த்தினர் .. ஆனால் இருவர் மட்டும் கோபத்தில் சண்டை போடுவதற்காக வந்தனர்…
கயல்விழி இனியனின் அத்தை மரகதத்தின் மகள் .. மாநிறம்மாக இருந்தாலும் அழகி.. சிறு வயதிலேயே இனியனை விரும்பியவள் ..இன்று அவன் வேறு ஒருத்திக்கு சொந்தமானவன் என்பதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை
அத்தான் எப்படி அத்தான் இவள போய் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க.. இவ உங்க குடும்பத்தை பிரித்துடுவா அத்தான்.. அவுங்க அப்பன் புத்தி இவளுக்கும் இருக்கும் இவள ஒடனே வீட்டைவிட்டு தொறதுங்க அத்தான்
ஏய் கயல் சும்மா இரு கத்தினான் கவி
கவியின் கண்களை பார்த்தாள் இசை ( ஓ ரூட் அப்படி போகுதோ… டோன்ட் வொர்ரி கவி உன் ரூட் கிளியர் நௌவ்)
கவி அத்தான் எங்களுக்குள்ள நீங்க வராதிங்க
சொல்லுங்க அத்தான் நா இருக்கும்போது நீங்க யாரோ ஒரு சீறுகிய கல்யாணம் பண்ணிட்டு வந்தா என்ன அர்த்தம்.
அடியே அவ ஒன்னும் யாரோ இல்லடி என் பேத்தி . அவனோட தாய்மாமன் பொண்ணு என்றார் கமலம்
நீ சும்மா இரு பாட்டி யாரு இன்னைக்கு வந்தவ உனக்கு பேத்தி யா எங்க போனா இவளோ நாளா
ஏய் எந்திரி டி முதல போ இந்த வீட்டைவிட்டு .. இசை அசையாமல் அவளையே பார்த்தாள்
எந்திரினு சொல்றேன்ல என்று இசை கையை பிடித்தது இழுத்தாள்
அவள் கையை உதறிவிட்டு கொஞ்சம் கூட கோவப்படாமல் நிதானமாக இங்க பாருங்க மிஸ் கயல் நா ஒன்னும் உங்க அத்தானை என்னை கல்யாணம் செஞ்சிக்க சொல்ல அவர்தான் என் சம்மதம் கூட இல்லாமல் எனக்கு தாலி கட்டினார் சோ எதுவாக இருந்தாலும் என்று சொல்லி அவனை நோக்கி கையை காட்டினால் .
அங்கு இருந்த அனைவருக்கும் அச்சிரியம் இதுவே மற்ற பெண்களாக இருந்தால் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி ஊரையே கூட்டி விடுவார்கள் ஆனால் இசை மிகவும் நிதானமாக இருந்தால் .. அவள் முகத்தில் சிறு வருத்தம் கூட இல்லை.. கூல்லாக இருந்தால்..
இனியனுக்கும் ஆச்சிரியமாக இருந்தது ஐந்து வருடங்கள் முன் அப்படி கோபமாக பேசினது இவள் தானா என்று யோசித்தான்
பாருங்க அத்தான் அவ சொல்றத கேட்டீங்கள நீங்க அவ பின்னாடி தொங்குன மாரி பேசுறா . அவளை இந்த வீட்டைவிட்டு அனுப்புங்க அத்தான்.. நீங்க எனக்கு மட்டும் தான் அத்தான் என்னால உங்கள யாருக்கும் விட்டு கொடுக்க முடியாது என்று கத்தி அழ தொடங்கினாள்
அவனுக்கே கயலின் செயல் விசித்திரமாக இருந்தது.. அவள் எந்த உரிமையில் இப்படி பேசுகிறாள் என்று அவனுக்கு புரியவில்லை…. கயல் அடிக்கடி அவன் வீட்டிக்கு வருவாள் தான் ஆனால் இது வரைக்கும் அவனுடன் பேசினது இல்லை திடீரென ஏன் அவள் இப்படி நடந்து கொள்கிறாள் என்று சங்கட மாக திரும்பி இசையை பார்த்தான்
இசையும் அவனை தான் பார்த்தால் அவளால் அவனின் மனநிலை புரிந்து கொள்ள முடிந்தது
கயல் அழத மா நான் சொல்றத கேளு
13 வருஷமா இவளுக்காக காத்து இருக்கேன்னு இந்த ஊருக்கே தெரியும் . உனக்கும் தெரியும்தானே.. என்று கேட்டான்
ஆம் என்பதுபோல தலை அசைத்தாள்
இப்ப சொல்லு நீ தெரிஞ்சே ஆசைப்பட்டத்துக்கு நா என்ன பண்ண முடியும்
என்னது 13 வருஷமா இவன் பழி வாங்க காத்திருக்கிறான் . ஏன் எதற்கு . மனோ அப்பாவின் மேல் இவனுக்கு ஏன் இவளோ கோபம் என்று யோசித்தால் இசை
அத்தான் நான் கிளம்புறேன். நீங்க பழி வாங்குவதற்காக அவளை கல்யாணம் பணிக்கிட்டீங்க னு எனக்கு தெரியும் ஆனால் அவ உங்க எல்லாரையும் பிரிச்சிடுவா என்று சொல்லிவிட்டு அவள் வீட்டை நோக்கி ஓடினாள் கயல்
அவளின் கடைசி வரிகள் இனியனின் மனதில் ஆழமாக பதிந்தது .. திரும்பி இசையை கோபமாக முறைத்தான்
இதுக்கெல்லாம் அசரும் ரகம் இல்லை நம் இசை அவளும் அவனை பார்த்தால் அவளின் விழி வீச்சை தாங்க முடியாமல் வேறு பக்கம் திரும்பி கொண்டான்
ஆச்சி எல்லார்க்கும் சாப்பாடு எடுத்து வை அண்ணா வா சாப்பிடலாம் அண்ணி வாங்க டேய் மகி , அகி , தமிழ் உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா வாங்க டா என்று கூப்பிட்டான் கவி
தரையில் பந்தி பாய் அதில் அனைவரும் அமர நான் எங்கு அமர்வது என்ற யோசனையில் நின்று கொண்டிருந்தாள் இசை
ராசாத்தி என் நின்னுட்டு இருக்க போ போய் இனியன் பக்கத்துல உட்காரு
அவள் அவனை பார்த்தால்
ஆச்சி உன்கிட்ட என்ன சொன்னேன் இவ ஒன்னு மகாராணி இல்ல நீ இவளுக்கு வடிச்சி கொட்டுறதுக்கு .. முதல எல்லார்க்கும் பரிமாற சொல்லு ..
அவன் கூறியது போல அனைவர்க்கும் ஆசையாக பரிமாறினாள் இசை … இதெல்லாம் இசைக்கு புதுசு அவள் வீட்டில் பத்து பேர் இவளுக்கு பரிமாறுவார்கள் … இவள் பரிமாற அங்கு யாரும் இல்லை ..
அவள் இங்கு வந்ததில் இருந்து கவி மட்டும் தான் உரிமையாக இவளுடன் பேசினான் . அதனால் இவளும் அவனுடன் உரிமையாக பழக தொடங்கினாள்
கவி உங்களுக்கு என்ன வேண்டும் ரசம் உத்தவா இல்லை மோர் உத்தவா
ரசம் ஊத்துங்க அண்ணி அப்புறம் மோர் வாங்கிக்குறேன்
அகி , மகி உங்களுக்கு என்ன வேண்டும் என்று அவர்களின் எண்ணம் புரிந்து அவர்களிடம் பேச தொடங்கினாள்
ஒரு நிமிடம் இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு
மகி அதான் கேக்குராங்கள நீ சொல்றது
அகி. ஏன் நீ சொல்றது என்று கல்லூரி பட டயலொக் மாற்றி மாற்றி பேச
அனைவரும் சிரிக்க .. இனியன் கூட சிரிக்க ஆனால் தமிழ் மட்டும் இதில் கலந்து கொள்ள வில்லை என்பதை கவனித்தால் இசை
உனக்கு என்ன வேண்டும் தமிழ் மோரா ரசமா
தமிழ் இரண்டிற்கும் தலையாட்ட .
இரண்டுமே ஊத்தவா என்று கேட்க
ஐயோ வேணாம் ரசம் போடுங்க என்று மொட்டையாக பதில் அளித்தான் தமிழ்
அன்று அவள் பேசியதும் இன்று அவள் நடந்து கொள்வதற்கும் நிறைய வித்தியாச தெரிகிறது என்று அவளை பார்த்தான் இனியன் பார்ப்பதை கவனித்த இசை
கவி உங்க அண்ணனுக்கு என்ன வேணும்னு கேளு
ஏன் மேடம் என்கிட்ட கேட்க மாட்டாலோ
என்று இனியன் நினைக்க அதை கேட்டான் கவி .
அண்ணி அத நீங்களே அண்ணா கிட்ட கேட்கலாமே
நா எப்படி கேக்கமுடியும் கவி .. அவரு இந்த வீட்டு எஜமான் நா வேலைக்காரி நா பொய் அவர்கிட்ட பேசமுடியுமா என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு நக்கலாக கூற …
ஒன்னும் வேண்டாம் கவி என்று கோபமாக எழுந்தான் இனியன்
அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் சாப்பிட அமர்ந்தாள் .. சாதத்தில் தண்ணீர் ஊற்றி சாப்பிட்டால். இதை தூரத்தில் இருந்து கவனித்தான் இனியன் .. நா பேசுனது அதிகபடியோ என்று தோன்றியது அதனால் இவள் சாப்பிடலையோ என்று யோசித்தான்
ஆனால் அவள் சாப்பிடாதற்க்கு காரணம் வேறு அது அவள் மட்டுமே அறிவால்
ரொம்ப நாள் பிறகு நா இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அதற்கு காரணம் இந்த குடும்பம். இவர்களின் ஒருத்தியாக வாழ ஆசை பட்டாள் இசை
அவள் ஆசை நிறைவேறுமா ???
நிறைவேற அவன் விட்டு விடுவானா
பார்ப்போம்