2. கிணற்று தவளை

0
157

நிர்பயா அவர்களின் சண்டையை காண பிடிக்காமல் வெளியே வந்தவள் தன் தோழிக்கு கால் செய்து இந்த பிரச்னையை பற்றி சொன்னாள். அவள் தோழி இதற்கு முதல் தீர்வு கோர்ட் மூலம் ஸ்டே வாங்குவது.அதற்கு முதலில் ஒரு திறமையான வக்கீல் தேவை என்றும் தன் அப்பாவிடம் கேட்டு சொல்கிறேன் என்று கால்லை கட் செய்து விட்டாள்.சிறிது நிமிடம் கழித்து கால் செய்து ஒரு எண்னை குடுத்தாள்.அது அந்த மாவட்டத்தில் இருக்கும் திறமையான வக்கிலீன் எண்.அவர் எடுத்து நடத்தும் பாதி கேஸ்கள் சமூகத்திற்கு நல்லது செய்வதாக இருக்கும். அதில் அவர் வெற்றியும் கண்டுள்ளார். தோல்வியே தெரியாதவர். பக்கத்து டவுனில் தான் உள்ளார். பெயர் நித்யன், இந்த எண்ணிற்கு கால் செய்து அப்பாயின்மென்ட் வாங்கிட்டு போய்ட்டு வா என்று சொன்னாள் அவள் தோழி.

நம்பரை வந்ததும் சேவ் செய்து கொண்டாள். நேராக கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றாள், அங்கே இன்னும் நிரஞ்சனா கெஞ்சி கொண்டு இருந்தாள்.

நிரஞ்சனா, ” எல்லாரும் ஒரு தடவை யோசிச்சி பாருங்க. இந்த கம்பெனி இங்க வந்தா நம்ம ஏரில இருக்க தண்ணியெல்லாம் குறைந்து போய்டும். அதுலையே கழிவு நீர் கலக்க கூட வாய்ப்பிருக்கு ஏன்னா அந்த இடத்துல கழிவு நீர் வெளியேற வேற வழி இல்ல. அதானால என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே நிர்பயா அவளை இழுத்து கொண்டு வெளியே சென்றாள்.

அவர்கள் செல்வதை பார்த்தவர்கள் கூட்டத்தை அவமதித்ததாக கர்ணனுக்கு அபராதம் விதித்தனர். ஏற்கனவே கோபத்தில் இருந்தவர் இப்பொழுது அபராதம் விதித்தும் மேலும் கோபமா னார். இத்தனை நாட்கள் இந்த ஊர் கூட்டத்தில் தலை நிமிர்ந்து தலைவர்களில் ஒருவராக நின்றவர் இன்று தன் மகள்களால் தலை குனிவை சந்திக்க நேர்ந்தது. நேராக வீட்டிற்கு சென்றவர் மகள்களை தேட அவர்கள் இருந்தால் தானே.

கர்ணன், “சியாமளா, நிரஞ்சனாவும் நிர்பயாவும் எங்க? என்று ஆவேசமாக கத்தினார்.

சியாமளா,” பதறியபடி, ஏங்க கூட்டத்துல என்ன சொன்னாங்க, புள்ளைங்க வீட்ல இல்லங்க பக்கத்து டவுனுக்கு போயிட்டு வரேன்னு சொன்னாங்க என்றார்.

கர்ணன், “என்ன நடந்துச்சா என் மானமே போச்சி, பொம்பள புள்ளங்கன்னு செல்லம் குடுத்து வளர்த்தது தப்பா போச்சி. கூட்டத்துல என்ன பேச்சி பேசுனாங்க தெரியுமா? என்று அங்கு நடந்ததை விவரித்தார்.

இதை கேட்ட சியாமளா அய்யோ என் குடும்பத்தோட மானமே போச்சே, அதுங்க இரண்டும் வரட்டும், இதுங்க இரண்டுதுக்கும் புத்தி ஏன் இப்பிடி போச்சி? உச்சி வெயில்லையும் நடு சாமத்துலையும் இந்த செல்போன தூக்கிட்டு அலையுதுங்க சொன்னா கேட்டா தானே. அந்த போன தூக்கி போட்டு ஓடைச்சா சரியா போய்ட்டும் எனறு தன் பாட்டுக்கு புலம்ப ஆரம்பித்தார்( எல்லா மம்மீஸும் ஒரே மாதிரி தான் போல, தும்மல் வந்தா கூட இந்த செல்போன் தான் காரணம்னு சொல்லுவாங்க போல?)

இங்கே அவர்களுக்கு சகஸ்ரநாமம் வாசித்து கொண்டிருக்க அவர்கள் நித்யனை பார்க்க சென்று கொண்டிருந்தனர்.

நிரஞ்சனாவை வெளியே இழுத்து கொண்டு விசியத்தை சொன்னாள் நிர்பயா. அவளுக்கும் இவர்களிடம் பேசி பயனில்லை என்று சரி வா என்று அவரிடம் அப்பாயின்மென்ட் வாங்கினர். அவர்களின் அதிர்ஷ்டமோ என்னவோ உடனே கிடைத்தது. நேராக வக்கீலை பார்க்கச் சென்றவர்கள் அந்த இடத்தை பார்த்து அப்படியே அசந்து போய் நின்றார்கள் இது வீடு தானா என்பது போல் இருந்தது.அவரிடம் அவ்விடம் வீடு ஆபிஸும் ஒரே இடத்தில் இருப்பதால் வீட்டிற்கே வர சொன்னார்கள் பெரிய அரண்மனை போல் காட்சி அளித்தை பார்த்ததும், இவர்களுக்கு ஏனோ பயம் வர ஆரம்பித்தது இவ்வளவு பெரிய வீட்டில் இருப்பவர்கள் பீஸ் எவ்வளவு எதிர்பார்ப்பார்கள் அதை தங்களால் கொடுக்க இயலுமா? என்பது தான் ஊருக்காக செய்தாலும் இவற்றுக்கான பணத்திற்கு தன் தந்தையிடம் தான் கேட்க வேண்டும் என்பது நிர்பயாவின் பயம். ஏற்கனவே கோபத்தில் இருப்பவர்கள் இதை சொன்னால் கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது கண்டிப்பாக தெரியும். தன் சேமிப்பில் இவர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு இருக்குமா? என்பது சந்தேகம்தான் திரும்பி அக்காவை பார்த்தாள், அவளும் ஏதோ யோசனையில் இருப்பது தெரிந்தது. தோள் மேல் கை வைத்ததும் சுயநினைவுக்கு வந்தவள் என்ன நிர்பயா என்றாள்.

நிரஞ்சனா,”சொல்லு நிர்பயா என்ன விஷயம் நம்ம ஏன் இங்கேயே நிக்கணும் அப்பாயின்மென்ட் வாங்கி ஆச்சில்ல வா உள்ள போய் பார்ப்போம்.

நிர்பயா,”நான் எதை யோசிக்கிறேன் என்றது உனக்கு புரியல அக்கா இந்த இடத்தை பார்த்தால் பெரிய இடமா இருக்கு என்னதான் சமூக சிந்தனையுள்ள வக்கீலாக இருந்தாலும் அவருக்கு பீஸ் கொடுக்கனும் இல்லையா அத நம்மளால கொடுக்க முடியுமா கண்டிப்பா நம்ம அப்பாங்க கொடுக்க மாட்டாங்க அதை பற்றிதான் யோசிச்சிட்டு இருக்கேன்.

நிரஞ்சனா,”இங்க பாரு நிர்பயா தேவை இல்லாம நீ யோசனை பண்ற துணிந்து ஒரு காரியத்தை நீ தான் பண்ண ஆரம்பிச்ச எனக்கு கூட பயம் இருந்தது ஆனால் இந்த கம்பெனி வருது நம்ம ஊருக்கு நல்லது இல்லை. உனக்கு சப்போர்டா நான் இருக்கேன் பயப்படாம வா இந்த பயம் உன் முகத்துக்கு சரியா இல்ல கேவலமா இருக்கு என்று சிரித்தாள்.

நிர்பயா,”அவள் சொன்னதின் அர்த்தம் புரியவே, சரிக்கா வா போய் பார்ப்போம் அந்த தாத்தாவ.

நிரஞ்சனா,”தாத்தாவா உனக்கு எப்படி டி தெரியும் அவர் வயசானவர்னு?

நிர்பயா,”ஆமா,இதெல்லாம் யாராவது சொல்லுவாங்களா இதுவரைக்கும் பெரிய கேஸ் எல்லாம் எடுத்து சக்சஸ்ஃபுல்லா முடிச்சு இருக்காருன்னு சொன்னாங்க, அப்ப சின்ன பிள்ளையாவா இருப்பாங்க பெரிய பெரிய வக்கீல் எல்லாம் வயசானவங்களை தான் இருப்பாங்கனு எனக்கு தோணுது.

சரி வா போய் பார்த்துருவோம் என்று அவ்வீட்டின் பெரிய கேட்டின் அருகே சென்றார்கள். உள்ளே செல்ல காவலாளியிடம் அனுமதி வாங்கி நடக்க ஆரம்பித்தார்கள் கேட்டுக்கும் வீட்டின் வாசலுக்கும் அரை கிலோ மீட்டர் தூரம் இருந்தது இரண்டு பக்கமும் வண்ண வண்ண மலர்ச் செடிகள் பார்ப்போரின் கவனத்தை ஈர்த்தது ,கூடவே பயன் தரும் மரங்களாக மா ,பலா ,வாழை, என்று அதுவும் செழிப்பாக வளர்ந்திருந்தது. சில இடங்களில் காய்கறிகளையும் வளர்த்துக்கொண்டிருந்தார்கள் இதை பார்த்தவர்களுக்கு தங்கள் ஊரின் பிரச்சினையை இவர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள் என்று நம்பினார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவர்கள் வீட்டின் வாசலை அடைந்திருந்தார்கள். உள்ளே சென்றவர்களை, ரிசப்ஷனிஸ்ட் வரவேற்றார் அவர்கள் வந்ததற்கான காரணத்தையும் கேட்டு அறிந்து கொண்டார். சில நிமிடங்கள் அமருமாறு கேட்டுக்கொண்டு போன் மூலம் இவர்கள் வந்ததை தெரிவித்தார்.

சில நிமிடங்கள் கழித்து மிடுக்கான தோற்றத்துடன் 30 வயது இளைஞன் இறங்கி வந்தான் அவனைப் பார்த்த நிர்பயா வக்கீலின் வாரிசு என்று நினைத்தாள் நேராக அவர்களிடம் வந்தவன் எதிரே போடப்பட்டிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாய் அமர்ந்தான்.

நிர்பயா மைண்ட் வாய்ஸ்,”இவன் எதுக்கு இங்க வந்து உட்கார்ந்து இருக்கான் வக்கீல் தானே பார்க்க வந்தோம். இவனை யார் இந்த கூப்பிட்டா? பார்க்கிற பார்வையே சரியில்லையே என்று அவனைத் திட்டிக் கொண்டிருந்தவள் அவனின் வார்த்தையில் சுயநினைவிற்கு வந்தாள்.

நித்யன்,”ஹலோ மிஸ் நீங்க என்ன விசயமா வந்தீங்கனு நான் தெரிஞ்சுக்கலாமா?

நிரஞ்சனா சொல்ல வாய் எடுக்கும் முன் நிர்பயா சார் நான் உங்கள பாக்க வரல வக்கீல் சார் பார்க்க வந்திருக்கும் சோ ப்ளீஸ் அவரைக் கொஞ்சம் வர சொல்றீங்களா என்றாள்.

நித்யன்,”சிரித்து கொண்டு, ஐ அம் நித்யன் நீங்க பார்க்க வந்தது என்ன தான் என்றதும் நிர்பயாவுக்கும் நிரஞ்சனாவுக்கும் மயக்கம் வராத குறைதான்.பின்ன தாத்தா வயசுல இருப்பாருன்னு நினைச்சி வந்தா இப்ப கம்பீரமாய் கட்டுக்கடங்காத காளையாய் எதிரே இருப்பவனை பார்த்தால் வேறு என்ன ஆகும்? மேலும் நித்யனே தொடர்ந்தான், கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க எனக்கு வேற அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு என்று அவர்களை துரிதப்படுத்தினான்.

அவனின் பேச்சில் சுதாரித்தவர்கள் ஐ அம் நிரஞ்சனா நிதின் அண்ட் திஸ் இஸ் மை கசின் நிர்பயா என்று தங்களை பற்றியும் ஊருக்குள் வரப்போகும் கூல்டிரிங்ஸ் கம்பெனி பற்றியும் எடுத்துச் சொன்னார்கள்.அனைத்தையும் கேட்டவன் இதற்கான பேப்பர்ஸ் ஏதாவது இருக்கா? ஐ மீன் உங்க ஊர்ல இருக்கிறவங்க இந்த கம்பெனி வரர்த்துக்கு ஏதாவது எழுதிக் கொடுத்து இருக்காங்களா?

நிரஞ்சனா,” ஊர் கூட்டத்துல பேசி முடிவெடுத்து பின்னர் வரேன்னு சொல்லிட்டு போயிருக்காங்கனு நினைக்கிறேன்.

நித்யன்,” மிசஸ் நிதின், இந்த நினைக்கிறேன், காயவைக்கிறேன்னு சொல்லாதீங்க. ஒரு பொது பிரச்சனைய தீர்கனும்னா அதற்கான ஆதாரங்கள் நம்ம கிட்ட தெளிவா இருக்கனும். நாள பின்ன இதப்பத்தி கேட்டா கூட நீங்க டிடைல்ஸ பிங்கர் பாய்ட்ல வச்சி இருக்கணும். சோ நாளைக்கு நான் அங்க வரேன், இதப்பத்தி தெரிஞ்சிக்க என்றான் காட்டமாக.

நிரஞ்சனா, ” சாரி சர் இத தடுக்க நினைச்சோமே தவிர ஆதாரங்கள் வேணும்னு யோசிக்கல. உங்களுக்கு எந்த மாதிரியான டிடைல்ஸ் வேணும்னு சொல்லுங்க வீ வில் ஹெல்ப் யூ.

நித்யன்,”தட்ஸ் பைன், யூ போத் மே லீவ் நல்,வில் மீட் டுமாரோ என்று எழுந்து சென்று விட்டான்.

நிர்பயா,” சலித்துக் கொண்டு, ச்சே இவருக்கு சிரிக்கவே தெரியாதா? முகத்தை என்னவோ இஞ்சி தின்ன குரங்காட்டம் வச்சிக்கிட்டு இருக்காரு. பெரிய லாயர் நான் தலையில என்ன கொம்பா முளைச்சிருக்கு? என்னவோ மிரட்டறா மாதிரியே பேசுறாரு. நம்ப என்ன இதுக்கு முன்னாடி கோர்ட் கேஸுன்னு அலைஞ்சிக்கிட்டு இருந்தோம். ஆதாரம் வேணும்கறது தெரியும் ஆனால் வரும்போதே அதை கேட்பார் என்று நாம என்ன ஜோசியமா பார்த்தோம் அதகூட எங்கயாவது பொறுமையா சொன்னாரா என்னவோ ஆர்டர் பண்றாரு. இவரு எப்பவுமே இப்படித்தான் இருப்பாரோ பாவம் தான் அவங்க பொண்டாட்டி என்று பேசிக்கொண்டே இருந்தவள் நித்யனின் குரலில் அடங்கினாள்.

நித்யன்,” எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல மிஸ்.நிர்பயா. ஐ ஆம் சிங்கில் என்று சிரித்தான்.

அவன் சிரிப்பதைப் பார்த்தவள் ப்பா இவன் கூட சிரிச்சா அழகா தான் இருக்கான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் நிர்பயா.

நிர்பயா,”கொஞ்சம் அப்பப்ப இந்த மாதிரி சிரிங்க, உங்களுக்கும் உங்களை பார்க்க வரவங்களுக்கும் நல்லது என்றாள்.

நிரஞ்சனா,”சாரி சார் இவ இப்படித்தான் வாய்த்துடுக்கா கொஞ்சம் பேசுவா தப்பா நினைச்சுக்காதீங்க.

நித்யன்,” நோ மிஸஸ் நிதின், இந்த மாதிரி நேருக்கு நேரு பேசுறவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் சோ நோ ப்ராப்ளம் ஐ ஹேவ் அன் அப்பாயின்மென்ட் கேட்ச் யூ லேட்டர்.பாய் அண்ட் பாய் நிர்பயா என்று சிரித்து விட்டு சென்றான்.

வீட்டுக்கு சென்றவர்களுக்கு வரவேற்பு எப்படி இருந்திருக்கும் என்று நான் சொல்லவேண்டிய அவசியமில்லை.

மறுநாள் பயத்துடனே விடிந்தது அவர்கள் இருவருக்கும். காலையில் ஒரு 10 மணி அளவில் தான் வருவதாகவும் ஊர் தலைவரை பார்க்க வேண்டும் என்றும் கால் செய்து நிரஞ்சனாவிற்கு தெரிவித்து இருந்தான்.

தன் தந்தையிடம் இதை பற்றி சொல்ல வேண்டுமே எப்படி சொல்வது? சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வார்? என்று யோசித்து கொண்டிருக்கும் போதே ஐ ஸ்டாடர்டு என்ற குறுஞ்செய்தி வந்து விழுந்தது தகவல் பெட்டிக்குள். இதை பார்த்தவளுக்கு பயம் தொற்றி கொள்ள நிர்பயாவுக்கு கால் செய்தாள்.

சிறிது நேரத்தில் வீடு வந்து சேர்ந்தால் நிர்பயா. நேராக தன் தந்தையிடமும், பெரியப்பாவிடமும் நிரஞ்சனாவை கூட்டிக்கொண்டு சென்றாள். இரவு எவ்வளவு திட்டியும் தாங்கள் சென்று வந்த இடத்தை பற்றி சொல்லாதவர்கள் இப்பொழுது சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். ரகசியமாக செய்வதற்கு இது ஒன்றும் கள்ளதனம் இல்லையே ஒரு நல்ல விசியத்திற்காக எவ்வளவு வேண்டுமானலும் கஷ்டப்படலாம், அதற்கு கிடைக்கும் வெற்றி ஆலாதியானது என்று சொல்லி வளர்த்தவர்கள் தம் தந்தையர். அதனால் கொஞ்சம் பொறுமையாக வக்கில் விசியத்தை சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்து தான் தைரியமாக அவர்கள் அறையினை அடைந்தார்கள்.

அங்கே சென்ற சிறிது நேரத்தில் கண்ணத்தில் கை வைத்து அதிர்ச்சியில் நின்றிருந்தாள் நிர்பயா.

தொடரும்..frog-in-a-well|480x360

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here