2.நெயிர்ச்சியின் முழுவல் நீ

2
1324

காலை 6 மணிக்கு அலாரம் சத்தத்தில் கண் விழித்தவள்.. எழுந்து தன் காலை கடன்களை முடித்துவிட்டு .. ஹாஸ்டலில் இருக்கும் மொட்டை மாடிக்கு சென்று அந்த இளங்காலையை ரசிக்க ஆரம்பித்தவளுக்கு  குளிர் உடலை ஊடுருவியது… 

தமிழ்நாட்டு வெயிலுக்கு பழக்க பட்டவளுக்கு அந்த குளிர் உடலுக்கு ஏற்புடையதாக இல்லை..  சிறிது நேரம் அமர்ந்து விட்டு குளிக்க சென்றால்..  குளித்து உடை மாற்றி சாப்பிட்டுவிட்டு மதிய வேளைக்கு தேவையான உணவுகளை பேக் செய்துகொண்டு முதல் நாள் வேலைக்கு சென்றால்… 

அங்கே அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றவள்.. முதல் நாள் வேலை நல்லபடியாக தொடற வேண்டும் என்ற வேண்டுதலுடன் மெட்ரோ ரயில் நிலையம் நோக்கி தன் நடையை செலுத்தினால்.. ஹைத்ராபாத் ஹைடேக் சிட்டியில் வேலை.. இவள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து அங்கே செல்ல மெட்ரோ ரயில் எரியவளின் மனதிற்குள் சிறு பயம்.. என்னதான் 3 வருட அனுபவம் இருந்தாலும் புது ஊர்.. புது மனிதர்கள்.. தெரிந்தவர் என்று யாரும் இல்லை.. 

இப்படி பல சிந்தனைகளில் இருந்தவளிடம் மனசாட்சி கேள்வி கேட்டது.. ‘ இதுவரை யார் உன்னுடன் இருந்தது ?? ‘ அவளின் உதட்டில் சிறு ஏளன புன்னகை ..  அதன்பிறகு அவள் முகத்தில் எந்த வித கலக்கமும் இல்லை.. அவள் இறங்கும் இடத்திற்கான அறிவிப்பு வர இறங்கியவள் .. அவள் ஆபீஸ்க்கு சென்று தான் வந்ததை தெரிவித்தாள்.. 

புதிதாக சேருவதற்கான அனைத்து பார்மாலிடீசையும் முடித்துவிட்டு அவளையும் அவளுடன் புதிதாக அன்று சேர்ந்த மற்ற 9 பேரையும் ஆபீசில் அறிமுக படுத்த ஹச்.ஆர் அழைத்து சென்றார்.. 
பொதுவான அறிமுகம் நடக்க .. பின்பு அன்று மதியம் வரை அவர்களுக்கு அந்த ஆபீஸின் ரூல்ஸ் மற்றும் வேலை செய்யும் முறை பற்றி விளக்கினார்.. அதையடுத்து அவர் அவர் வேலை செய்யும் குழுக்களை பற்றி சிறு விளக்கம் கொடுத்தவர். மதிய உணவு முடித்த பிறகு அவர் அவர் குழுவில் அறிமுகப்படுத்துவதாக கூறினார்.. 

புதிதாக சேர்ந்தவர்களுடன் அங்கு இருக்கும் கேன்டீன் சென்றவள் அங்கே அவர்களுடன் அமர்ந்து அவள் கொண்டு வந்து இருந்த உணவை உண்ண ஆரம்பித்தாள்..  

“நீங்க எந்த டீம்?? ” என்று அவள் பக்கத்தில் அமர்ந்த இருந்த ஒரு பெண் கேட்க . அதற்கு இவள்  “நான் ரீசர்ச் டீம் .. ” என்று பதில் அளித்தாள்.. 

நீங்க வேற ஏதாவது டீம் கேட்டு வாங்கி இருக்கலாம் இல்ல??

ஏங்க ?? எனக்கு அது ரொம்ப பிடிச்ச டிபார்ட்மெண்ட்.. அதான் அது வேணும்னு கேட்டு வாங்குனேன்.. 

இல்ல இங்கே என்னோட சீனியர் வேலை செய்யறாங்க.. அவங்க கிட்ட ஆபீஸ் பத்தி விசாரித்த அப்போ எந்த டீம் வேணா போலாம்.. ஆனா அந்த ரீசர்ச்  டீம் மட்டும் வேண்டாம்ன்னு சொன்னாங்க … அதான் உங்ககிட்ட சொல்றேன்.. வேற டீம் வேணும்னு இப்போவே கேட்டு மாதிக்கோங்க… 

ஏன் அந்த டீம்ல அப்படி என்ன பிரோப்ளேம் ?? 

அந்த டீம் ஹெட் செம சேடிஸ்ட்டாம்.. பொண்ணுங்களை மதிக்கவே மாட்டானாம்.. 
அதான் வேற டீம் போய்டுங்க.. 

“ஒஹ்ஹ்.. சரிப்பா .. தான்க்ஸ் பார் யுவர் இன்போர்மேஷன்.. ” என்று கூறி இவள் மெலிதான புன்னைகையை சிந்தினால்.. 

அதன்பின் எந்த விதமான பேச்சு வார்த்தைகளும் இன்றி மதிய உணவை உண்டுவிட்டு அவர் அவருக்கு உரிய டிபார்ட்மெண்ட் சென்றனர்.. 

இவளுடைய டிபார்ட்மெண்ட் சென்ற பொழுது இவளுடன் ஹச்.ஆர் சேர்ந்து கொண்டார்.. 

உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.. இந்த டீம் ஹெட் கொஞ்சம் ஒரு மாதிரி .. டக்குனு கோவம் வந்துடும்.. பாத்து இருந்துக்கோங்க.. 

ஹச்.ஆர் இவ்வாறு கூறியவுடன் இவள் மனதிற்குள் ‘ என்னடா ஆள் ஆளுக்கு இவ்ளோ பில்ட்அப் கொடுக்கறாங்க.. அவ்ளோ பெரிய ஆள் யாருன்னு பார்த்தே ஆகணுமே.. ‘ நினைத்தவள் அவருடன் அங்கே சென்றால்.. 

“ஹாய் கைஸ்… இவங்க உங்க டீம்ல புதுசா சேர்ந்து இருக்காங்க.. நீங்களே உங்களை அறிமுகப்படுத்திக்கோங்க.. ” என்று வெண்ணிலாவை  பார்த்து  கூறினார்..

“ஹாய் ஆல்.. ஐம் வெண்ணிலா.. 3 வருஷம் இந்த பீல்ட்டில் அனுபவம் இருக்கு.. உங்ககூட எல்லாம் சேர்ந்து வர்க் பண்ண போறதுல ஈகரா இருக்கேன்… ” என்று கூறி சிரித்தாள்.. அங்கே இருந்தவர்களும் இவளிடம் அறிமுக படுத்திக்கொண்டனர்..

“எங்கே ஜெகன் ??” என்று ஹச்.ஆர் கேட்க.

“அவர் லஞ்ச் முடிச்சு இன்னும் வரல.. ” என்று ஹரிஷிடம் இருந்து பதில் வந்தது.. 

“ஓஹ்ஹ.. அப்போ அவர் வந்தா இவங்களை இண்ட்ரோ கொடுத்துடுங்க.. ” என்று ஹச்.ஆர் கூற ஹரிஷ்க்கு பீதி கிளம்பியது.. 
இவர் சொல்றாருன்னு நம்ம இண்ட்ரோ கொடுத்தா இது உன்னோட வேலையான்னு கேட்பானே ?… இப்போ என்ன பண்றது என்று மனதில் பயந்துகொண்டு இருந்தவனின் கண் எதிரே அவன் பயத்திற்கு காரணம் ஆனவன் வந்தான்.. 
அப்பாடி வந்துட்டான் என்று நிம்மதி பெருமூச்சு வந்தது ஹரிஷிடம் இருந்து.. அதை கவனித்த ஹச்.ஆர் திரும்ப அங்கே ஜெகனை கண்டவர் ” ஹாய் ஜெகன் .. இவங்க உங்க டீம்ல புதுசா ஜாயின் பண்ண வந்து இருக்காங்க.. இனி நீங்க பார்த்துக்கோங்க.. ” என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட..  

ஹரிஷ் …. 

சொல்லுங்க ஜீ.. 

இவங்களுக்கு நம்ம என்ன என்ன பண்றோம்.. நம்ம எப்படி பண்றோம்.. இது எல்லாம் பாக்க சொல்லுங்க.. அவங்களுக்கு ஒரு அளவு புரிஞ்சத்துக்கு அப்புறம் ப்ரொஜெக்ட்குள்ள இன்வால்வ் பண்ணலாம்.. 

ஓகே ஜீ..  நான் சொல்லிடறேன்.. 

இவளிடம் திரும்பியவன் ” அவர் உங்களை கைட் பண்ணுவாறு .. புரியலன்னா கேளுங்க.. ” என்று கூறிவிட்டு அவன் சென்று அவன் இருக்கையில் அமர்ந்து காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு வேலையை தொடற ஆரம்பித்தான்.. 

ஹரிஷ் அவர் அருகில் காலியாக இருந்த இடத்தில் இவளை அமர சொல்ல.. ஒரு நொடி தயங்கியவள் அங்கே அமர்ந்து கொண்டாள்.. அவள் தயக்கத்திற்கு காரணம் இவளின் அந்த பக்கத்தில் ஜெகன் அமர்ந்து இருந்தான்.. ஹரிஷ் ஜெகன் அருகில் அமறாமல் ஒரு இருக்கை தள்ளி அமர்ந்து இருந்தான்.. இப்பொழுது அந்த இருக்கையை தான் வெண்ணிலாவிற்கு அளித்து இருந்தான்…. 

அவள் அமர்ந்தவுடன் அவளுக்கு அவர்கள் ப்ரொஜெக்ட்டை பற்றி சிறிது விளக்கிவிட்டு அவளை மேலும் பார்க்க சொல்லியவன்.. ஏதேனும் சந்தேகம் இருந்தால் தயங்காமல் கேட்க சொன்னான்.. 

அதை பார்க்க ஆரம்பித்தவள்.. அதில் மூழ்கி போய்விட.. நேரம் போனது தெரியவில்லை.. 
அவள் டெஸ்க்கில் யாரோ தட்டுவதை உணர்ந்தவள்..  திரும்பி பார்க்க.. ஜெகன் தான் அவளது டெஸ்க்கை தட்டிக்கொண்டு இருந்தான்.. 

இவள் அவனை பார்க்க.. ” இப்போ பிரேக் டைம் பா.. எல்லாரும் போய் இருக்காங்க.. நீங்களும் போய்ட்டு வாங்க.. ” என்று அவன் கூற..  அப்பொழுதான்  திரும்பி பார்த்தவள் ஹரிஷ் அங்கே இல்லாததை கண்டாள்.. ஹரிஷ் மட்டுமில்லாமல் அவள் உள்ளே நுழையும் பொழுது இருந்த யாரும் அங்கே இல்லை.. 

மீண்டும் இவனிடம் திரும்பியவள் ” நீங்க போகலையா ?? ” என்று கேள்வி கேட்க.. 

இல்ல.. கேன்டீன் எங்கேனு தெரியும்ல ?? 

ம்ம் தெரியும் சார்.. மதியம் அங்கே தான் லஞ்ச் சாப்பிட்டேன்.. 

அவன் சிறு தலையசைப்புடன் திரும்பி கொள்ள.. இவள் மெதுவாக அங்கே இருந்து அகன்றால்… 

மீண்டும் வரும்பொழுது ஹரிஷுடன் வந்து சேர்ந்தால்.. பின்பு அவர் அவர் அவர்களுடைய வேலையை செய்ய.. நேரம் மாலை 6 மணியை நெருங்கியது.. அவர்கள் டீம்மில் மொத்தம் 5 பேர் வெண்ணிலாவையும் சேர்த்து.. அதில் வெண்ணிலா மட்டுமே பெண்.. மீதி இருந்த அனைவரும் ஆண்களாக இருந்தனர்.. 
அவளுக்கு சங்கடமாக இருக்குமோ என்று நினைத்து சிறிது நேரத்திற்கு ஒரு முறை பேச்சு கொடுத்தனர்..  ஜெகனை தவிற.. 
அதிலேயே அவளுக்கு அவர்கள் மீது நல்ல அபிப்பிராயம் வந்தது.. 

மணி 6.10 ஆகி இருக்க.. ஹரிஷ் இவளிடம்  ” வெண்ணிலா எவ்ளோ பார்த்து இருக்கீங்க?? ” என்று கேட்க..இவள் பார்த்தவரை சொன்னால்..  ” ஓகே மா..” என்று கூறியவன் அவன் அன்று செய்த பணிகளை ஜெகனிடம் ஒரு ரிப்போர்ட் ஆக கூறிவிட்டு கிளம்ப ரெடியானவன் மீண்டும் வெண்ணிலாவிடம் ” நீங்க எப்படி போக போறீங்க ??” 

“மெட்ரோ ட்ரெயின்ல தான் ப்ரோ.. ” என்று கூறினால்.. டைம் ஆச்சு கிளம்பளையா ?? அவன் அவ்வாறு கேட்டவுடன் இவள் திரும்பி ஜெகனை பார்க்க .. அதை கவனித்த ஜெகன் அவள் பக்கமாக திரும்பி ” உங்க வர்க் முடிஞ்சா நீங்க  சொல்லிட்டு கிளம்பலாம்.. நான் சொல்லணும் எல்லாம் இல்லை.. ” என்று கூற.. 

இல்ல சார்.. ஹரிஷ் சார் கொடுத்ததுல இன்னும் கொஞ்சம் இருக்கு.. முடிக்கல.. 

ஒஹ்ஹ்.. பரவாயில்லை நாளைக்கு வந்து பாருங்க.. 

இல்ல நான் இருந்து முடிச்சிட்டு போறேன்… 

வெண்ணிலா அவ்வாறு கூறியவுடன் அவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்துவிட்டு அவன் வேலையை தொடர ஆரம்பித்தான்.. 
பின்பு ஹரிஷ் கிளம்பிவிட அவன் பின் அடுத்து அடுத்து மற்ற இருவரும் கிளம்ப.. அங்கே எஞ்சியது வெண்ணிலாவும் ஜெகனும் மட்டும் தான்.. 

வெண்ணிலாவிற்கு ஒரு இடத்தில் சந்தேகம் வர .. ஜெகனிடம் கேட்கலாமா வேண்டாமா என்று மனத்திற்குள்லேயே பட்டிமன்றம் நடத்தினால்.. இறுதியில் கேட்டு விடுவது என்ற முடிவுடன் திரும்ப ஜெகன் அவனது நாற்காலியில் தலை சாய்த்து படுத்து இருப்பதை கண்டவள் அவனை எப்படி எழுப்புவது என்று அறியாமல் மீண்டும் தன் கவனத்தை அவளுடைய வேளையில் செலுத்தினால்.. 

மணி 7ஐ தொட இனியும் தாமதித்தால் ஹாஸ்டல் செல்ல வெகு நேரம் ஆகிவிடும் என்பதை உணர்ந்தவள் ஜெகனிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என அவனை பார்க்க.. அவன் அப்பொழுதும் கண்களை மூடி அவனது நாற்காலியில் சாய்ந்து கொண்டு இருக்க.. சொல்லாமல் கிளம்ப முடியாது ஆகையால் இப்பொழுது எழுப்பியே ஆக வேண்டும் என்று நினைத்தவள்.. ” சார்… சார்… ” என்று இரண்டு முறை அழைக்க அவனிடம் எந்த சத்தமும் இல்லை.. 

“ஜெகன் சார் … ” என்று மீண்டும் சத்தமாக இவள் அழைக்க.. அதில் கண் விலித்தவனின் கண்கள் சிகப்பு நிறமாக இருக்க.. கண் சிறிது கலங்கி இருப்பதை போன்று இருந்தது வெண்ணிலாவிற்கு.. 

அவள் அழைத்தவுடன் விழித்தவன் மணியை பார்த்துவிட்டு.. ” இன்னும் கிளம்பளையா?? ” என்று சற்று கடினமாக கேட்பதை போன்று இருக்க.. இவள் முகம் உடனே சுருங்கியது.. 

சற்று பயந்தவள் தமிழில் ” அது.. முடிச்சுட்டேன்.. ” என்று கூறிக்கொண்டே வந்தவள் அப்பொழுதான் தான் தமிழில் பேசுகிறோம் என்று உணர்ந்து தன் நாக்கை கடித்துகொண்டால்.. ஏனென்றால் அவள் ஆபீசில் நுழைந்து முதல் அங்கே நடந்த அத்தனை உரையாடல்களும் ஆங்கிலத்தில் தான் நடந்தது..  இப்பொழுது வாய் தவறி தமிழ் வந்துவிட இவள் நாக்கை கடித்துவிட்டு..  மீண்டும் பேச ஆரம்பிப்பதற்குள்.. ” அப்போ கிளம்புங்க. ” என்று ஜெகனும் தமிழில் கூறி இருந்தான்.. 
இவள் கண்கள் ஆச்ரியத்தில் விரிந்தது.. 
“சார் நீங்களும் தமிழா?? ” என்று இவள் கேட்க..

சிறு தலையசைப்பு மட்டுமே அவனிடம் இருந்து பதிலாக கிடைத்தது..   

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

2 COMMENTS

  1. ஜெகன் இவ்ளோ ஃபார்மலா….நம்ப முடியலயே….பழைய ஜெகனே வாரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here