3.என்னவள் நீதானே

0
778

அத்தியாயம்-3

எல்லாரும் டெண்டர் எடுக்கும் இடத்திற்கு வந்திருந்தாங்க,’இதுல சில முக்கிய புள்ளிகளும் அடக்கம் சரியான நேரத்தில் சிவாவும்,ஆதவ்வுடன் அவனது பி.எம்.டபிள்யூ காரில் இருந்து இறங்கினான் தனக்கே உரிய ராஜ தோரணையுடன். அங்கிருந்தவர்களில் இரண்டு ஜோடி கண்களை தவிர மற்ற கண்கள் அவனையே பாத்துட்டு இருந்தாங்க. தன்னை பார்த்த அத்தனை கண்களையும் புன்னகையோடு எதிர்கொண்டு தனக்கான இருக்கையில் வந்து அமர்ந்தான்.

அங்க இருந்தவங்க எல்லாருக்கும் சிவாவை பத்தி தெரியும், இருந்தாலும், இந்த டெண்டர் யாருக்கு கிடைக்குமோனு யோசிச்சுட்டு இருந்தாங்க,ஏன்னா இதுல ருத்ரா கன்ஸ்டிரக்சன்ஸ்ம் இருந்தாங்க.ரெண்டு பேருமே தொழில்ல பெரிய முதலைங்க, இதுல அந்த வரதராஜன் ரொம்ப வருசமா பிசினஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு அவர் அனுபவத்துக்கு இது கொஞ்சம் ஈஸியான விசியம் தான் அதே சமயத்துல இப்போ பிசினஸ்ல சிவாவை அடிச்சுக்க யாரும் இல்லனு யோசிச்சுட்டு இருந்தாங்க, அவங்க யோசனைக்கு பதில் சொல்லும் விதமா சில அரசு அதிகாரிங்க வந்தாங்க டெண்டர் அனௌன்ஸ் பண்றதுக்காக.

அங்க வந்த ஆபிஸர்ல இருந்து ஒரு சீனியர் ஆபிஸர் வந்து பேச ஆரம்பிச்சாரு,” எல்லாருக்கும் வணக்கம், இந்த ப்ராஜெக்ட் கவர்ன்மெண்ட்க்கு எவ்ளோ முக்கியம்னு உங்க எல்லாருக்குமே தெரியும் அதனால இந்த டெண்டர் கிடைக்க போறவங்க ரொம்ப கவனமா இத முடிக்கணும் குறிச்ச நேரத்துல அது தான் கவர்ன்மெண்ட்க்கு ரொம்ப முக்கியம், இதுல 500 குடும்பம் தங்க போகுது அவங்க எல்லாம் குடுத்த டேட்ல Slum ல இருந்து இங்க வரணும் அதனால இதை கண்டிப்பா சீக்கிரம் முடிங்க”அப்டினு சொல்லிட்டு அனௌன்ஸ்மெண்ட்க்கு ரெடி ஆனாரு,” இதுல கோட் பண்ணிருந்த எல்லாருமே நல்லா பண்ணிருந்தாங்க ஆனா எல்லாரையும் விட நல்ல பிரைஸ் கோட் பண்ண நம்ம S.J.Constructions க்கு தான் இந்த டெண்டர் கிடைச்சுருக்குனு” அனௌன்ஸ் பண்ணாரு.

சிவா வெற்றி களிப்புடன் எழுந்து மேடைக்கு போயி எல்லா பார்மலிட்டிசும் முடிச்சுட்டு கீழ இறங்கி வந்துட்டு இருந்தான்.

அவனருகில் வந்த ஆதவ் சிவாவை அனைத்து, “நீ நினைச்ச மாதிரியே ஜெயிச்சுட்ட கங்கிராட்ஸ்டானு” சொன்னான்.

சிவா,” தேங்க்ஸ் மச்சி” னு சொல்லிட்டு, சரி வாடா போலாம்னு ரெண்டு பேரும் அவங்க கார் கிட்ட வந்தாங்க.

அப்போ ருத்ராவும் அவங்க அப்பா வரதராஜனும் சிவா முன்னாடி வந்து முறைச்சு பாத்துட்டு இருந்தாங்க.

ருத்ரா,” என்ன சிவா எங்களை ஜெயிச்சிட்டோம்னு சந்தோசமா இருக்கயா நீ இத எப்படி ஜெயிச்சனு எனக்கு தெரியும் சோ நீ ரொம்ப ஆடாத, அதுக்கும் மேல எங்களோட செல்வாக்க வச்சு நீ இந்த ப்ரொஜெக்ட்ட டைம்க்கு முடிக்க முடியாம எங்களால பண்ண முடியும் தெரியும்ல”

சிவா,” என்ன மிஸ்.ருத்ரா உங்கள பாத்து பயப்படறதுக்கு நான் ஒன்னும் சின்ன பையன் இல்ல, அதனால இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் என் கிட்ட வேணாம் என்ன எப்பயும் நீ எனக்கு பண்றத தான் என் ஸ்டைல்ல இந்த தடவ உனக்கு நான் குடுத்துருக்கேன்”

ஆதவ்,” என்ன மிஸ்.ருத்ரா இப்போ உனக்கு சிவாவை பத்தி நல்லா புரிஞ்சுருக்கும்னு நினைக்கறேன், இவ்ளோ நாள் புலி பதுங்குனது சரியான நேரத்துல பாயறதுக்கு தான்னு “

வரதராஜன்,” என்ன தம்பிங்களா ஜெயிச்சுட்டோம்னு திமிறுல பேசறீங்களா”

சிவா ” இல்ல சார் நேர்மையா ஜெயிச்சுருக்கோம்ங்கிற தன்னம்பிக்கைல பேசறோம், இவ்ளோ நாள் நீங்க பண்ண எல்லாத்துக்கும் அமைதியா இருந்தனால எங்களை கோழைனு நினைச்சிட்டீங்களா? நாங்க திருப்பி அடிச்சா தாங்க மாட்டிங்க, இன்னைல இருந்து என் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் இந்த ப்ரொஜெக்ட்ட சொன்ன நேரத்துல முடிச்சு காட்டல நான் சிவா இல்லனு” சவால் விட்டுட்டு கார்ல ஏறி கெளம்பிட்டான்.

ருத்ராவும் அவங்க அப்பாவும் வெறியோட அவன் போறத பாத்துட்டு இருந்தாங்க பழி தீர்க்கும் எண்ணத்தோடு,

பார்வதி, “ஆரா கிளம்பிட்டயா சீக்கிரம் வாடா”

ஆரா,”இதோ வந்துட்டு இருக்கேன்மானு சொல்லிட்டு,லெஹெங்காவில் எளிமையான ஒப்பனையுடன் அழகோவியமாய் கீழ இறங்கி வந்துட்டு இருந்தா”

ராஜா,” பாரு குட்டிமா இன்னிக்கு அவ்ளோ அழகா இருக்கால, என் கண்ணே பட்டுடும் போல இருக்கு”

பாரு,” எப்பவும் அவ அழகு தாங்க போற இடத்துல யாரும் இவளை பொண்ணு கேட்டு வராம இருந்தா சரிதான், சரி கிளம்பலாம் வாங்க டைம் ஆகுது “

மூணு பேரும் கிளம்பி பங்க்சன் நடக்கற இடத்துக்கு வந்துட்டு அவங்களோட இடத்துல உக்காந்து இருந்தாங்க

அங்க இருந்தவங்கள சில வயசு பசங்க ஆராவ வச்ச கண்ணு வாங்காம பாத்துட்டு இருந்தாங்க, அவ யாரையும் கண்டுக்காம அமந்திருந்தாள்.(அவ அமைதியா இருக்கிறதே பெரிய விசயமாச்சே).

அதே ஹால்ல வேற டேபிள்ல சிவாவோட குடும்பம் உட்கார்ந்திருந்தாங்க, சிவா மட்டும் முக்கியமான வேல இருக்கறதுனால,” நீங்க முன்னாடி போங்க நான் வந்து ஜாயின் பண்ணிக்கறேன்” ஆதவ் உங்க கூட இருப்பான்னு சொல்லிட்டான்”.

அதுக்கு அடுத்த டேபிளில் ஆதவ், அவனோட அப்பா ராமசந்திரன் அம்மா கோமதி தம்பி இனியன் எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க, ரெண்டு குடும்பமும் முன்னாடியே தெரியும்ங்கிறதுனால எல்லாரும் பேசிட்டு இருந்தாங்க.

ஜானுவும்,இனியனும் நல்ல நண்பர்கள் ரெண்டு பெரும் ஒரே காலேஜ் வேற அதனால அவங்க ரெண்டு பேரும் எப்பயும் போல ஒருத்தர ஒருத்தர் வாரிக்கிட்டு சண்டை போட்டுட்டு இருந்தாங்க, அதப்பாத்துட்டு இருந்த ஆதவ்,”ஏன் இப்டி ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க கொஞ்ச நேரம் கூட அமைதியா இருக்க மாட்டிங்களா”னு கேட்டான்.

ஜானு, “இப்போ நாங்க அமைதியா இருந்தாஎன்ன நோபல் பரிசா குடுக்க போறாங்கன்னு”, அவனுக்கு மட்டும் கேக்கும் குரலில் சொல்லி ஆதவ்வின் முறைப்பை பரிசாக பெற்றுக்கொண்டு அமைதியாக அமர்ந்தாள்.

அந்த நேரம் போர் அடிக்குதுனு வெளிய வந்த ஆரா, அவ ப்ரண்ட் அக்ஸாகிட்டே ப்ளூடூத் ஹெட்செட்ல பேசிக்கிட்டே வேடிக்க பாத்துட்டு நடந்து வந்துட்டு இருந்தா(அவ வரத பாத்த போன் பேசிட்டு வர மாதிரியே தெரியாது ஏன்னா அவ பிரீ ஹேர் விட்டுருந்தனால அவளோட ஹேர் ஹெடிஸ்ட்ட மறைச்சுடுச்சு),

அந்த நேரம் அங்க வந்துட்டு இருந்த சிவா மேல மோதி விழுந்தா,அவளை தாங்கி புடிச்சான் சிவா.

ஆரா,அவன் தாங்கி பிடித்த நொடி நிமிர்ந்து அவன் முகம் பார்த்து அவன் கம்பீர தோரணையில் ஸ்தம்பிச்சு நின்றாள் அவன் திட்டுவது கூட தெரியாமல்”.

சிவா கோப முகத்தோட அவளை பாத்து, “பாத்தா படிச்ச பொண்ணு மாதிரி இருக்க இப்படியா கண்ணு முன்னு தெரியாம வந்து ஒரு பையன் மேல விழுவ, ச்ச கொஞ்சம் கூட சென்ஸே இல்ல நான்சென்ஸ்ன்னு திட்டிட்டு இருந்தான்.

அப்போ தான் சுயநினைவுக்கு வந்த ஆரா, வாயை வச்சுட்டுகிட்டு சும்மா இல்லாம “ஹலோ மிஸ்டர் இங்க யாரும் ஒன்னும் உங்க மேல வேணும்னே விழல முதல்ல தெரியாம உங்க மேல விழுந்ததுக்கு மன்னிப்பு கேட்கலாம்னு தான் நினச்சேன், ஆனா இப்போ அது வேணாம்னு தோணுது”

சிவா(கோப பார்வையுடன் ),” ஹே என்ன வேணும்னு விழுந்ததும் இல்லாம திமிரா வேற பேசறாயா”

ஆரா,”ஆமா உங்களுக்கு அவ்ளோ ஒன்னும் சீன் இல்ல வேணும்னே வந்து உங்க மேல வந்து விழறதுக்கு மனசுக்குள்ள என்ன ஹீரோன்னு நினைப்பா (பாவி பயபுள்ள அவன் தான் ஹீரோ னு தெரியாம வாய விட்றுச்சே)”

சிவா அவளை மொறச்சு பார்த்துட்டு இருந்தான்…………..

சிவாவின் கோபம் மற்றும் ஆராவின் குறும்பு காதலாக மாறுமா?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here