31.என்னவள் நீதானே

0
599

பூவில் தேனை ருசித்த வண்டு பூவை சுற்றியே வலம் வருமாம் அதேபோல் தான் அந்த‌ கள்வனும் பூமேனி மங்கையவளையே வலம் வருகிறான் காதலின் தேன்சுவையை அறிய..

ஆராதனாவையே கண் இமைக்காமல்‌‌ சிவா பார்த்துக்கொண்டிருக்க அவளும் தன் கூர் விழிபார்வையையே அவனுக்கு பதிலாக்கினாள்.

அவளின் விழி வேட்கையை தாங்க முடியாமல் சிவா தான் பெண்ணவளை நோக்கி புருவம் உயர்த்தி என்னென்று வினவ அதற்கும் பதிலாக காதலை கண்களால் நிரப்பி காண்பிக்க அவனோ ஸ்தம்பித்தான்..

முதலில் அதிலிருந்து மீண்ட சிவா,”என்ன அம்மணி இதுக்கு பேர் தான் கண்களால் கைது செய்யறதா???” என்றான் கண்களில் குறும்புமின்ன..

ஆராதனாவிற்கு இப்போது மருந்தின் உதவியுடன் கொஞ்சம் பேச முடிந்தது தொண்டை வலியும் மட்டுபட்டிருந்தது….

அவளும் சிரிப்பிநூடே,
“விழிகளுக்குள் உன்னை
சிறையெடுக்க ஆசைதான்
வாழ்நாள் முழுதும்
எனக்கான ஆயுள்கைதியாய்” என்றாள்.‌

அவளின் கவிதையில் உளம் மகிழ்ந்த சிவா,”என்ன பேபி இந்த நேரத்துல கவிதை எல்லாம் சொல்ற”

ஆரா,” நீங்க இருக்கும் போது எந்த நேரமா இருந்தா என்ன??”

அவள் உள்ளங்கையை பற்றிய சிவா,” இவ்வளவு நாள் எப்படிடா பொறுமையா இருந்த அதுவும் என் மேல இவ்வளவு லவ்வ வச்சுகிட்டு”

ஆரா,” நான் எங்க அமைதியா இருந்தேன்.. நீங்க, நான் உங்க கூட பேச கூடாது,நாம பாத்துக்க கூடாதுனு தான் சொன்னிங்க.. நான் உங்களை பாக்க கூடாதுனு சொல்லலயே.. அதான் உங்களுக்கு தெரியாம உங்களை சைட் அடிச்சுட்டு இருந்தேன்.. அப்பறம் அடிக்கடி ஆதவ் அண்ணாக்கும்,ஜானுக்கும் போன் பண்ணி டார்ச்சர் பண்ணுவேன்” என்றாள்..

சிவா,”எப்படியும் நீ படிச்சு முடிக்கறவரைக்கும் உன்ன விட்டு விலகி இருக்கணும்னு நினைச்சேன் அதுக்குள்ள என்னை உன் கிட்ட வரவச்சுட்டடி கேடி”

ஆரா,”ஹா ஹா நல்ல வேளை நீங்களா வந்தீங்க.. இல்ல இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க போட்ட ரூல்ஸ் எல்லாத்தையும் ப்ரேக் தி ரூல்ஸ் ஆக்கிட்டு உங்க முன்னாடி வந்து நின்னுருப்பேன்”

சிவா,”ஆமாண்டி நீ தான் பெரிய ரவுடி பேபி ஆச்சே கண்டிப்பா செஞ்சிருப்ப.. சரிடா செல்லம் இப்போ தூங்கு ரொம்ப நேரம் ஆச்சு பாரு” என்று அவளை கொஞ்சிவிட்டே வெளியே வந்தான்..

வெளியில் மொபைலை நோண்டிக்கொண்டிருந்த ஆதவ் அருகில் அமர்ந்த சிவா,”மச்சி நீ இன்னும் தூங்கல”

சட்டென்று எழுந்த ஆதவ் சுற்றும் முற்றும் எதையோ தேடிகொண்டிருக்க சிவா அவனை பார்த்து,” என்னத்தடா தேடற” என்றான்..

ஆதவ்,” சிவானு ஒரு கடமை தவறாத கண்ணியவான் இருந்தான் அவன் எங்க போனானு தேடிட்டு இருக்கேன்.. காதல்னாலே தெரிச்சு ஓடுவான் அவனை பாத்த நீ?”

அவன் முன் போய் நின்ற சிவா,” இங்க தான்டா இருக்கேன் பாரு..” என்றான்..

ஆதவ்,” ஆமாண்டா..முழுசா ரோமியோவா மாறி இருக்க சிவாவை பார் என்றான்” சந்திரமுகி ஸ்டைலில்..

இந்த உரையாடலில் இருவரும் மனம் விட்டு சிரிக்க சிவாவின் மீது கை போட்டு அணைத்த ஆதவ்,”இப்படியே நீ எப்பவும் சிரிச்சிட்டே இருக்கணும்டா” என்றான்..

ஆதவ் கையை பிடித்த சிவா,”நீ என் கிட்ட எதாச்சும் மறைக்கிறயா??”

சிவாவின் கேள்வியில் கலகலப்பாக இருந்த ஆதவ் மௌனியானான்..

சிறு இடைவெளிக்கு பிறகு ஆதவ்,” உனக்கென்ன தோணுது சிவா” என அவன் கேள்விக்கான பதிலை அவன் முன்பே வைத்தான்…

சிவா சூழலை இலகுவாக்கும் பொருட்டு,” என் மச்சான் மண்டைக்குள்ள எதோ ஒன்னு அவன் மூளையை அரிச்சிட்டே இருக்குனு மட்டும் தெரியுது ஆனா அது என்னன்னு தெரியலை” என்றான்..

ஆதவ் பெருமூச்சு ஒன்றை விடுத்து,”அந்த விஷயம் என்னனு எனக்கே சரியா தெரியாதப்போ நான் எப்படி உனக்கு சொல்ல முடியும்.. எனக்குள்ள சில குழப்பங்கள் இருக்கு அது தெளிவாகும் போது ஒரு நண்பனா உன் கிட்ட தான் வருவேன்” என தன் பதிலை கூறினான்..

சிவா,” சரி உனக்கு எப்போ தோணுதோ அப்போ சொல்லு..”

பாவம் சிவாவிற்கு தெரிய போவதில்லை அவன் நண்பன் கடைசிவரை எதுவும் சொல்ல மாட்டான் என்று, ஆதவ்வும் அறியாத ஒன்று குழப்பத்திற்கான விடையை கடைசி வரை கண்டறிய முற்படபோவதில்லை என்று..

நேரம் நள்ளிரவை தாண்ட அப்போது வந்த பார்வதி,” அவர் தூங்கறார் தம்பி நீங்க போங்க நான் பாத்துக்கிறேன்”என்று அவர்களை அனுப்பினர்..

இரு ஆடவர்களும் கெஸ்ட் ஹவுஸ் சென்று ஓய்வெடுத்து காலை ரெஃபிரேஷ் செய்து கொண்டு ஹாஸ்பிடல் வந்தடைந்தனர்..

மீண்டும் மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்கேன் மற்றும் சில பரிசோதனைகள் செய்து அவள் நலனை மீண்டும் உறுதிபடுத்தி கொண்டே ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றினான் சிவா..

அவளின் மீதான அவனின் பிரத்யேக கவனிப்பு அவளை பெற்றவர்களை பிரம்மிக்க செய்தது..

இதெல்லாம் முடிந்தபோது மணி 11 ஐ கடந்திருந்தது அதற்குள் சிவாவின் பெற்றோரும் வந்திருந்தனர்..

ஆராதனா சாய்ந்து அமர்ந்திருக்க உள்ளே வந்த லட்சுமி கையில் கொண்டு வந்த திருநீறை அவள் நெற்றியில் பூசிவிட்டு,”அம்மாடி மருமகளே சீக்கிரம் குணமாகி அத்தையை பாத்துக்க ஓடி வந்தரனும் சரியா??” என்றார்…

அவர் அழைப்பு ஆராவின் மின்னல்கீற்றாய் தென்பட அதனுடனே அவள் தன்னவனை நோக்க அவள் விழி வினவிய கேள்விக்கு இவன் புன்னகை பதில் எழுதியது ஆமாம் என்று..

அங்கு ஆராவின் பெற்றோரும் இருக்க மகனை பெற்றவர்கள் மரியாதை நிமித்தமாக அவர்களிடம் சென்று தங்களது மகனின் விருப்பத்தை தெரிவித்தவர்கள் அவர்களின் சம்மதத்தை எதிர்பார்த்து நின்றனர்..

ஆரா அமைதியாக சிவாவையும் அவளது பெற்றோரையும் பதட்டத்துடன் பார்த்து கொண்டிருக்க அவனோ தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் பாக்கெட்டில் கைவிட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்..

சிறிது இடைவெளிக்கு பிறகு ஆராவின் பெற்றோர் தங்களுக்கு இதில் சம்மதம் என்பதையும், மேலும் சிவா இதற்காக‌ அவர்களை‌‌ அனுகியதுட்பட அனைத்தையும் அவன் பெற்றோரிடம் கூறினர்…

சிவாவின் பெற்றோருக்கோ அவனின் இந்த செய்கையில் அவன் தங்களின் மரியாதைக்காக இவையனைத்தும் செய்திருக்கிறான் என்பது விளங்கியது…

ஒருவேளை அவர்கள் பெண் கேட்டு ஆராவின் பெற்றோர் மறுத்திருந்தாள் அது அனைவருக்கும் சங்கடம் என்பதாலேயே சிவா தனித்தனியாக இரு குடும்பத்தையும் அணுகியது..

அப்போது தான் ஆதவ்,” டேய் நல்லவனே உலகத்திலேயே கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டு லவ்வை சொன்ன ஒரே ஆளு நீதான்டா ” என்றான்..

அதற்குள் ஆராவும்,”அண்ணா நீங்க வேற.. இவர் என்னை விரும்பரதையே ஏதோ போனா போகுதுனு கடைசியா என்கிட்ட சொல்லிட்டாரு போல” என்றாள் நக்கலாக..

அதற்குள் ஆராவை நெருங்கிய ஆதவ் ரகசியமாக இப்போ உன் முன்னாடி நிக்கறது பெரிய பிசினஸ்மேன் சிவா இல்லை காதல் மன்னனாக உருமாறியிருக்க சிவா என்றான் சிரியாமல்..

அதற்குள் பெற்றோர்கள் வெளியே சென்றிருக்க இளையவர்கள் தனித்து விடபட்டனர்..

ஆராவிடம் நெருங்கிய சிவா,” என்ன அண்ணனும் தங்கச்சியும் பேசிகிட்டீங்க எனக்கு தெரியாம?? என கேட்டான்..

ஆரா,” ஏன் நீங்க கூட எனக்கு தெரியாம எல்லார்கிட்டயும் பேசுனிங்க நான் எதாச்சும் கேட்டனா என்ன?” என சிலுப்பிகொண்டாள்..

அவளை பார்த்து கண்ணடித்த சிவா,”அட அம்மணிக்கு அதான் கோவமா??சரி நான் வேணாம் அவங்க கிட்ட போயி இதெல்லாம் தனுக்கு வேணாம்ன்னு சொல்லவா??” என்றான்..

ஆரா ஆதவிடம்,”அண்ணா முன்னாடி எல்லாம் உங்க கூட ஒரு சிடுமூஞ்சி இருக்குமே அதை காணோம் போல” என்க..

ஆதவ் சிரித்துகொண்டே தன் பாக்கெட்டை பார்த்துவிட்டு, ” அட அதை ஏண்டா கேக்கற நானும் ரெண்டு நாளா அவனை தான் தேடரேன்” என்றான் ..

அவனது செய்கையை பார்த்த ஆரா மற்றும் சிவா இருவருமே சிரித்துவிட ஆதவ் தான் ஆராவிடம் வந்து எப்பவும் இவன் இதே மாதிரி சந்தோசமா இருக்கனும் அது உன் கையிலை தான் இருக்கு என்றவன் அவர்களுக்கு தனிமையை பரிசளித்து கிளம்பினான்..

அவளின் பெட்டில் அமர்ந்த சிவா அவளை தன் கையணைப்பில் இறுத்தி கண்ணில் மையல் கொண்டு ,”இப்போ ஹேப்பியா கண்ணமா” என்றான்…

அவள் முகம் செம்பூவாய் மலர அவன் நெஞ்சின் மீதே சாய்ந்தவள் இதைவிட வேற என்ன வேணும் என்றாள்…

அந்த இதமான அணைப்பு அத்தனை ஆறுதலாய் இருந்தது இருவருக்குள்ளும்.. அந்த மோன நிலையை கலைக்கவே சிவாவின் போன் அலறியது…

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here