4.என்னவள் நீதானே

0
720

அத்தியாயம் -4

“உன் மீது மோதி நான் விழுந்த போதும்

என்னை தாங்கிய உனது கரங்களிலும்

உன் ஆண்மை நிறைந்த பார்வையிலும்

உணர்கின்றேன் நீ எனக்கானவன் என்று

காதல் மோதலில் துவங்கும் என்பதற்க்கு

நானும் விதிவிலக்கல்ல என்பதற்கு இலக்கணமாய் “

சிவா,” ஹே மொதல்ல பொண்ணா அடக்கமா இருக்க கத்துக்கோ அப்பறம் வந்து ஆர்கியூ பண்ணு” என்று கூறி விட்டு விறு விறு என்று ஹாலில் நுழைந்து தனது குடும்பத்துடன் ஐக்கியமானன்.

ஆரா ,” ச்ச அவன் கண்ணுல அப்டி என்ன தான் இருக்கு அவன் நம்மள திட்றத கூட தெரியாம பாத்துட்டு இருக்கனே ஆரா கண்ட்ரோல் யுவர்செல்ப் தனக்குத்தானே கூறிக்கொன்று அவளும் உள்ளே சென்று அமர்ந்தாள்”

நிகழ்ச்சி தொடங்கியது லயன்ஸ் கிளப் சேர்மேன் வந்து விழாவை தொடங்கினர்,” இந்த வருஷம் சிறந்த தொழிலதிபர்க்கான விருது குடுக்கறதுக்காக நம்ம எல்லாரும் இங்க வந்துருக்கோம், இந்த வருஷம் மட்டும் இல்லாம இனி வர்ற வருஷத்துலயும் இவர் தான் வருவாருனு நினைக்கறேன்”. இந்த வருஷத்தோட சிறந்த தொழிலதிபர் மிஸ்டர் சிவா மோகன்ராஜ் அவர்களை அன்புடன் அழைக்கிறேன் இந்த விருதை வாங்கிக்கிறதுக்காக என்றார்.

சிவா எழுந்தான் விருது வாங்கறதுக்காக ஜானு,” கங்கிராட்ஸ் அண்ணா ” னு சொன்னா

சிவா,” தேங்க்ஸ் டா குட்டி” னு அவளை தோளோடு அணைத்துக்கொண்டான்

ஆதவ்,” சூப்பர் மச்சி”னு ஆரத் தழுவி தனது மகிழ்ச்சையை வெளிப்படுத்தினான்

சிவாவின் பெற்றோர் பெருமை பொங்க அவனை பாக்க, அவனோ அவர்கள் அருகில் சென்று அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு மேடை ஏறினான்.

சிவா விருது வாங்கும் போது அரங்கம் முழுவதும் பலத்த கரகோஷம் அவனோ தன்னடக்கமாய் புன்னகையுடன் விருதை பெற்றுக்கொள்ள இங்கு ஆராவோ,” ஓ இந்த சிடுமூஞ்சி சிங்கத்துக்கு சிரிக்க கூட தெரியுதே பாருடா,என்ன இருந்தாலும் அவன் தோரணை இந்த கரகோஷம் சொல்லுது அவன் எவ்ளோ பெரிய சாதனையாளன் என்று மனதுக்குள் அவனை பற்றி பெருமிதமாய் நினைத்துக்கொண்டிருந்தாள் அவளையே அறியாமல்”

லயன்ஸ் கிளப் சேர்மன் சிவாவை பேச சொல்லி மைக்கை குடுத்தார், சிவாவோ மைக்கை பெற்று கொண்டு பேச தொடங்கினான்,” இந்த விருது என் தனி ஒருவனுக்கானது அல்ல என்னோட சேர்ந்து உழைச்ச அத்தனை பேருக்கும் என்ன ஊக்கப்படுத்தி ஜெயிக்க வச்ச என் குடும்பத்துக்கும் எப்பவும் என் நிழல் போல என் அத்தனை முயற்சிக்கு உறுதுணையாய் இருக்கும் என் உயிர் நண்பனுக்கும் மனமார்ந்த நன்றிகள், “எப்பவும் நான் எல்லாருக்கும் சொல்றது ஒன்னு தான், அது என்னனா வெற்றியை நோக்கி நீ ஓடாத உனக்கான இலக்கை நீயே வகுத்துக்கோ அத நோக்கி ஓடு வெற்றி உன்ன தேடி தான வரும்”. என்னைப்போல் வளர்ந்து வரும் அத்தனை தொழிலதிபர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று உரையை முடித்துக்கொண்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான்.ஆரா அவன் இறங்கி வரும் தோற்றத்தை பார்த்து சொக்கி தான் போனாள் என்று சொல்ல வேண்டும்

ஆரா சுயநினைவுக்கு வந்தவளாய்,” ஏண்டி ஆரா அவன் முன்னாடி சீன் போட்டுட்டு வந்துட்டு இப்போ எதுக்கு அவனை வாய பொளந்து பாத்துட்டு இருக்க இத மட்டும் அவன் பாத்தான் செத்தடி மகளேனு மைண்ட் வாய்ஸ்ல பேசிட்டு இருந்தா”

ராஜா,”ஆரா வாடா சாப்பிட போலாம்னு கூப்பிட்டு வந்துட்டு இருந்தாரு”

அங்க சிவா வந்து அவங்க குடும்பம் மற்றும் ஆதவ் குடும்பத்துக்கிட்ட பேசிட்டு இருந்தான்,

சிவாவின் பெற்றோர்,”வாழ்த்துக்கள் பா உன்ன நினச்சா ரொம்ப பெருமையா இருக்குனு சொல்லிட்டு அவனை உச்சி முகர்ந்தனர்”

ஆதவின் பெற்றோர்,” காங்கிராட்ஸ் பா நீ எல்லாத்துலயும் ஜெயிக்கணும்னு சொல்லிட்டு இருந்தாங்க”

இனியன்( ஆதவ் தம்பி),” பாஸ் கங்கிராட்ஸ் பட் எனிவே கண்டிப்பா ட்ரீட் வச்சே ஆகணும் எங்ககிட்ட இருந்து எஸ்கேப் ஆகமுடியாது பாத்துக்கோங்க”

சிவா சிரிப்புடன்,” சரிடா போகலாம்”.

இனியன்,”எங்க போறதுன்னு நான் சொல்றேன் ஓகே வா”

ஜானு,”அண்ணா அவன் ஓசில போகறதுக்கு பிளான் பண்ணிட்டான் இனி உன்ன விடமாட்டான்”.

இனியன்,”ஜானுவோட தலைல குட்டிட்டு இங்க பாரு குட்டி பிசாசு இது எங்க ரெண்டு பேருக்கும் உள்ள டீலிங் அமைதியா இருந்தா உன்னையும் கூப்ட்டு போவோம்”.

ஜானு,” அப்போ சரி ஓகே டன் என்று விரலை உயர்த்தி காண்பித்தாள்”

ஆதவ்,” என்ன ஜானு எனக்கென்னமோ இது நீங்க ரெண்டு பேரும் போட்ட பிளான் மாதிரி தோணுது “

ஜானு,” அவன பாத்து மொறச்சுக்கிட்டே மனசுக்குள்ள இந்த குரங்கு எதுக்கு தேவை இல்லாம என்ட்ரி ஆயிட்டு இருக்குனு யோசிச்சிட்டே, ஹி ஹி அப்டி எல்லாம் ஒன்னும் இல்லையேன்னு சொன்னா”

சிவா,” டே விடுடா நம்ம எல்லாம் ஒண்ணா வெளிய போலாம் ஒரு சண்டே ஓகே வா?”

எல்லாரும் (ஆதவ்,ஜானு,இனியன்) கோரசா ” ஓகே டன் னு சொன்னாங்க” சிவா ,”சரி இப்போ வாங்க எல்லாரும் சாப்பிட போலாம்னு எல்லாரையும் கூப்பிட்டுட்டு போயிட்டு இருந்தான்”, இடையில் அவனை பார்த்து சிலர் வாழ்த்திவிட்டு சென்றனர் அவனும் எல்லாரையும் அனுப்பிவிட்டு குடும்பத்துடன் டைனிங்க்கு வந்தான்.

ஆரா அவ குடும்பத்துடன் டைனிங்ல சாப்பிட்டுட்டு இருந்தா. அங்கு வந்த சிவாவோ ஒரு நிமிசம் அவளை பாத்து அவ சாப்பிடற அழகை ரசிச்சவன், நொடிப்பொழுதில் தன்னை மீட்டுக்கொண்டு சிவா வாழ்க்கையில நீ இப்போ தான் நிம்மதியா இருக்க இதே மாதிரியே இருந்துக்கோ தேவையில்லாத எந்த விஷயத்துலயும் தலையிடாதே என்று தனக்கு தானே அறிவுரை கூறிகொண்டு சாப்பிட சென்றான்.

ஆதவ்,” சிவாவை கவனித்தவன் அவன் சென்ற பார்வை சென்று வந்த இடத்தையும் கவனித்திருந்தான்”.(ஏன்னா அவன் தான் சிவாவோட நிழல் ஆச்சே)

ஆதவ்,”என்ன மச்சான் பொண்ண எல்லாம் பாக்கற என்ன விஷயம்னு கேட்டான்”

சிவா,”அவனை பாத்துட்டு நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னான்”

ஆதவ்,”மச்சான் நீ சொல்றத பாத்தா திட்டுன மாதிரி தெரியுது ஆனா இப்ப நீ பாத்த பார்வை சரியில்லையேனு ” கண்ணடிச்சு கேட்டான்.

சிவா,” டேய் நீ வேற,சும்மா தேவை இல்லாத கற்பனைய வளத்துக்காத பேசாம வாய மூடிட்டு சாப்பிடு”

ஆதவ்,” எங்க நீ கொஞ்சம் வாய மூடிட்டு சாப்பிட்டேன்”

சிவா ஆதவ்வை முறைக்க, ஆதவ் ” ஹி ஹி சும்மா மச்சான் சரி சாப்பிடு”ன்னு சொன்னவன் மனதிற்குள் சிவாவின் மாற்றத்தை எண்ணி மகிழ்ச்சி அடைந்தான்……

சிவாவின் வாழ்வில் வசந்தம் வருமா பழைய ஆறா நினைவுகளை ஆரா மாற்றுவாளா?

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here