5.கண்ணாளனின் கண்மணியே!!!

0
467

கீர்த்திக்கு அபயை கல்யாணம் பண்ணிக்கணும் அது அவன் மேல இருந்த காதலால் இல்ல… அவனுடைய அத்தனை சொத்துக்களுக்கும் அவனே அதிபதி என்பதால் அவனுடைய சொத்தை மட்டுமே தெரிந்து வைத்திருந்தாள் அவள்…

மாடலிங் துறையில் இருக்கும் நவீன யுவதி இவள் அவளுடைய துறைக்கு ஏற்ப அவளுடைய பணபுழக்கமும் அதிகமே.. கீர்த்தியும் அபயும் பப்பில் தான் அறிமுகம் ஆனார்கள்..

அன்று அவன் பப்பில் போதையில் ஆழ்ந்து இருக்கும் போது அவனை பற்றி அறிந்தே நெருங்கி வந்த கீர்த்தி,” ஹாய் யங் மேன்… இப் யூ டோன்ட் மைண்ட், குட் யூ டான்ஸ் வித் மீ?” என அழைக்க அவனும் தள்ளாடியபடியே அவளுடன் சென்றான்..
போதையில் இருந்த அவனை அவளே பிடித்து கொண்டு ஆடிக்கொண்டிருந்தாள்…அதற்கடுத்து சில நாட்களிலும் இதுவே தொடர்ந்து அவர்கள் உறவில் அடுத்த கட்டத்திற்கும் போயிருந்தார்கள்,பாவம் அபய்க்கு தெரியவில்லை இது அவனை எது வரை இழுத்து செல்லும் என்பது…

அதற்கு பின் அவளுடைய செய்கைகள் அவனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த அவன் மனசாட்சியும் நம்ம தப்பு பன்னிட்டமோன்னு அவனை உறுத்த, என்னை பொறுத்தவரை யாராக இருந்தாலும் நான் அவங்களோட விருப்பமில்லாமல் தொட்டதில்லை அதுவும் அவளாக வந்தாள் நான் அதை அக்ஸ்ப்ட் பண்ணிக்கிட்டேன்னு என்று தனது மனசாட்சிக்கு சமாதானம் கூறினான். ஆனால் அவள் காலை சுற்றிய பாம்பு என்பதை அபய்க்கு அதற்கு பின்பே உணர்த்த தொடங்கியிருந்தாள்..

அவன் போதையில் இருக்கும் போது அவனுடன் நெருக்கமாக எடுத்த போட்டோ மற்றும் சில அந்தரங்க புகைப்படங்களை வைத்து அவனை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டாள் அவள்…

எல்லா ஆதாரத்தையும் கைவசம் வைத்துக்கொண்டு யோசிக்க ஆரம்பித்த கீர்த்தி இதை வச்சு நம்மளே டைரக்டா அவன் கிட்ட கேட்டா பணம் பறிக்க முடியாது என்பதை அறிந்தவள் அதை வேறு ஒரு மூன்றாம் நபர் மூலம் செய்ய தொடங்கினாள்.

அன்று அபய் போர்டு மீட்டிங்கில் இருந்த போது ஒரு MMS நோட்டிபிகேஷன் காட்ட அதை தற்செயலாக பார்த்தவன் அதில் அபய் மற்றும் கீர்த்தியின் புகைப்படங்கள் சில நெருக்கமான புகைப்படங்களும் வந்தது அதை பார்த்தவன் அசரவில்லை, இவ்ளோ பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டிருப்பவனுக்கு இது மாதிரி மிரட்டல்கள் எல்லாம் ஜுஜுபி ஆயிற்றே..சரி யாரா இருந்தாலும் நேரில் வரட்டும் என்று நினைத்து கொண்டிருந்தான்…..

கீர்த்தியின் பிளான் படியே அவள் வைத்திருந்த ஆள் MMS அனுப்பிய சிறிது நேரத்திற்கு பின்பு கால் செய்தான்..

அதற்குள் அவனும் போர்டு மீட்டிங் முடித்துவிட்டு தன் அறையில் அமர்ந்து இருக்க மொபைல் ரிங் ஆக அதை அட்டன்ட் செய்து காதில் வைத்தான் மறுமுனையில்,”என்ன இளம் தொழிலதிபரே தங்களுடைய அந்தரங்க புகைப்படங்கள் இப்போ என் கிட்ட இருக்கு , நான் சொல்றதை நீங்க கேக்கல நாளைக்கு எல்லா சேனலும் நியூஸ் பேப்பரும் உங்களை பத்தி தான் பேசும்”என்று மிரட்டி கொண்டிருந்தான்..

எப்படியும் இந்த மாதிரி ஒரு போன் வரும்னு எதிர்பாத்திருந்த அபய் சிரித்துக்கொண்டே,”என்னப்பா
இவ்ளோ லேட்டா கால் பண்ணியிருக்க நான் முன்னாடி இருந்தே உன் காலுக்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்” என்று ரிவீட் அடிக்க எதிர்புறம் இருந்தவனோ கொஞ்சம் பயத்துடனே,”என்ன திமிரா பேசரையா நாளைக்கு இதோட பின்விளைவை பாப்ப”என்று உரைத்தான்..

அபய்,”டேய் உன்ன மாதிரி எத்தனை பேரை பாத்துருப்பேன் உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ”என்று கர்ஜித்துவிட்டு காலை கட் செய்தான்.

தான் ஏவி விட்டவன் மூலம் இதை கேள்விப்பட்ட கீர்த்தி அடிபட்ட புலி போல் அபய் இதுக்கெல்லாம் அசரமாட்டான் என்று வேறு திட்டம் தீட்ட ஆரம்பித்தாள்…

அதற்கு அடுத்து வந்த நாட்களில் எதுவும் மிரட்டல் வரவில்லை அபய் நினைத்தது போலவே, இருந்தும் தன் நண்பன் பாலாவை அழைத்து பேமஸ் டிடக்டிவ் மூலம் அதை யார் செய்தது என்று கண்டுபிடுக்குமாறு கூறினான்..

கீர்த்தியும் அவனை மடக்க காதல் என்னும் ஆயுதத்தை எடுத்தாள்
முதலில் அவனை காதலிக்கிறேன் என்று அவன் பின்னால் துரத்திக்கொண்டிருந்தாள் அவன் தனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை என்று நிராகரித்து விட்டிருந்தான்..

பின்பு அவர்கள் இருவரும் எடுத்த புகைப்படம் எது அபய்க்கு அனுப்பி மிரட்டி இருந்தாலோ அதே புகைப்படத்தை வைத்து தனக்கும் மிரட்டல் வருகிறது என்றும் அது வெளியில் தெரிந்தால் என் எதிர்காலம் பாதிக்கும் என்று அழுது புலம்பி சிம்பதி கிறியேட் பண்ணிக்கொண்டிருந்தாள்.. அதனாலேயே அவன் அவளை பிரச்சனையின் மறு உருவம் என்றே நினைந்திருந்தான், இருந்தும் அவள் அணுகுமுறையில் காதல் துளி அளவும் இல்லை என்பதையும் உணர்ந்திருந்தான்.

அதனுடைய அடுத்த கட்டமாகவே அவனுடைய வீட்டிற்கு வந்திருந்தாள்..
அவள் துரதிஷ்டம் அவள் பாட்டியை பற்றி அறிந்திராதது தான்.

கீர்த்தியை பாத்து ஸ்தம்பித்து நின்றவன் மனதில் இத்தனை நாள் சம்பவம் அனைத்தும் ஓடியது இருந்தும் தன்னை சுதாரித்து கொண்டு என்ன என்று வினவினான்..

கீர்த்தி அபயின் தோலில் காய் போர்ட்டுக்கொண்டே,”எப்போ பேபி என்ன கல்யாணம் பண்ணிக்க போற..”

அபய்,”நான் தான் என் முடிவை அப்போவே சொல்லிட்டேனே இனிமே என்ன பாக்க வீட்டுக்கு வராதே..” என்று மிரட்டும் தொனியில் கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்..

அவளும் கறுத்த முகத்துடனே அவனை விட்டு பிடிக்கவேண்டும் என்று நினைத்து கொண்டு வெளியேறினாள்.

இதை அனைத்தையும் பாத்து கொண்டிருந்த பாட்டி அவனுக்கு கூடிய விரைவில் திருமணம் நடத்த முடிவு
பண்ணி இருந்தார்….

அபய்யின் திருமணம் யாருடன் நடக்கும்????

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here