7. கிணற்று தவளை

0
134

தன் உயிராய் நினைக்கும் காதலி இன்னொருவனை காதலிப்பதாக சொல்லும்போது கோபம் கட்டுக்கடங்காமல் வரும் அதேநேரம் அவள் மனம் போல் இருக்கட்டும் என்று வாழ்த்தவும் செய்யும் அந்த நிலையில்தான் நித்யன் இருந்தான். நிர்பயா கூப்பிடும்போது வரமாட்டேன் என்று சொல்ல மனம் வரவில்லை. ஆனால் இங்கு அவள் யாரையும் சந்திக்க கூடாது என்று மனம் துடிக்க ஆரம்பித்தது. அந்த நேரம் அங்கு ஆஜானுபாகுவாய் ஒரு நெடியவன் அவளை நோக்கி வரவும் இவன் இதயத்துடிப்பு இரட்டிப்பானது.

நித்யன்,”ஐயோ யார் இவன்? ஆள் பார்க்க பயங்கரமா இருக்கானே! ஒருவேளை இவள் தான் பார்க்க வந்திருப்பாளோ?

இவன் சிந்தித்து கொண்டிருந்த அதே நேரம் அவன் அவளை நெருங்கி இருந்தான். அவளும் அவனுடன் சிரிதுதப்படியே பேச ஆரம்பித்து இருந்தாள்.

நிர்பயா,” ஹாய், சீனியர் நீங்க எப்படி இங்க? எப்படி இருக்கீங்க? இப்ப எங்க இருக்கீங்க? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டு இருந்தாள்.

வந்தவனை பற்றி சிறிது பார்ப்போம். அவன் பெயர் சத்யன், நிர்பயாவின் சீனியர், அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்டவன். அதனால் நிர்பயாவும் அவனிடம் சகஜமாக பழகுவாள்.

சத்யன், ” ஹாய், நிர்பயா ஐ ஆம் பைன், நீ எப்படி இருக்க? அண்ட் நீ என்ன இப்படி கேக்குற நான் உன்னை இங்க வர சொல்லி மெசேஜ் பண்ணி இருந்தேனே!அத பாத்துட்டு தானே நீ வந்த! பின்ன என்ன கேள்வி கேட்டுட்டு இருக்க!

நிர்பயா,” என்ன சொல்றீங்க நீங்க? நீங்க எப்ப என்ன வர சொன்னீங்க? எனக்கு உங்க கிட்ட இருந்து எந்த மெசேஜும் வரலையே? என்று எடுத்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி. ஏனெனில் அவளுக்கு மெசேஜ் அனுப்பும் நபரிடமிருந்து இந்த இடத்திற்கு வர சொல்லி குறுஞ்செய்தி வந்திருந்தது. அவளுக்கு மயக்கம் வராத குறைதான் நித்யன் தான் தன்னிடம் விளையாடிக் கொண்டிருக்கிறான் என்று வந்தவள் இப்படி ஒரு அதிர்ச்சியை எதிர்பார்க்கவில்லை. தான் அவனை சிக்க வைக்க எண்ணி ஒரு பொய் சொன்னால் அதுவே உண்மையாக நடந்தால் பாவம் அவளும் என்னதான் செய்வாள்.

நிர்பயா,” அப்ப சீனியர் நீங்களா? நீங்க இந்த மாதிரி பண்ணீங்க? சும்மா பொய் சொல்லாதீங்க. நீங்க இல்லைன்னு சொல்லுங்க. என்ன பத்தி நல்லா தெரிஞ்சு இருந்தும் ஏன் இப்படி பண்ணீங்க? நீங்க இத்தனை நாள் என் கூட பழகி இருக்கீங்க எனக்கு பொய் சொன்னாலும் இல்ல ஏமாற்றினாலும் புடிக்காதுன்னு தெரியும்ல? அப்புறம் எதுக்காக இந்த மாதிரி பண்ணீங்க? அங்க மெசேஜ் பண்றவன் யாருன்னு தெரிஞ்சா நல்லா நாலு அடி அடிக்கலாம்னு நினைச்சேன். ஆனால் நீங்க வயசுல பெரியவராகவும், எனக்கு நல்ல பிரண்டாவும் இருந்து இருக்கீங்க அதனால உங்கள சும்மா விடுறேன். இந்த இடத்தை விட்டு போயிடுங்க என்று கத்தி கொண்டிருந்தவளை நோக்கி வந்தான் நித்யன்.

நித்யன்,” நிர்பயா, என்ன ஆச்சு? ஏன் கத்திகிட்டு இருக்க? மறுபடியும் ஏதாவது பிரச்சனையா?

நிர்பயா மைண்ட் வாய்ஸ், ஐயையோ இவனே நம்மள மாட்டி விட்டுடுவான் போலயே!! இவன மாட்ட வைக்கலாம்னு நெனச்சு நானே மாட்டிப்பேன் போலயே!! இவனை இதுக்கு மேல பேசவிட்டால் அவன் கைய புடிச்சு அனுப்பி வச்சிடுவான். இது வேலைக்கு ஆகாது நாம ஒண்ணு நினைச்சா இங்க அதுவா ஒன்னு நடக்குது.

நிர்பயா,” நித்யன் இது என்னோட சீனியர் சத்யன். சத்யன் இவர் நித்யன் என்னோட லவ்வர் நான் கல்யாணம் பண்ணிக்க போறவர் என்றதும் நித்திய னுக்கு வானத்தில் பறப்பது போல இருந்தது ஆனால் சத்யனுக்கு அடக்க முடியாத கோபம் கொப்பளித்தது.

சத்யன்,” என்ன நிர்பயா விளையாடுறியா நீ. உன்ன பத்தி எனக்கு நல்ல தெரியும். நீ யாரையும் லவ் பண்ண மாட்ட. நான் இத்தனை வருஷமா உன்ன பத்தின விஷயத்தை ஒன்னு விடாம கலெக்ட் பண்ணி வச்சிருக்கேன். நீ தேவை இல்லாமல் ஒருத்தர் கிட்ட பேசி கூட நான் பார்த்தது இல்லை. அப்படி இருக்கும்போது இவன நீ லவ் பண்றியா ? இத நான் நம்பனுமா? பொய் சொல்றது பிடிக்காது அப்படின்னு சொல்லிட்டு நீயே பொய் சொல்லாதே.

நிர்பயா நித்யனிடம் திரும்பி , ” நித்யன் இவர்கிட்ட நாம எப்ப லவ் பண்ண ஆரம்பிச்சோம் அப்படின்னு சொல்லுங்க என்று சத்யன் அறியாவண்ணம் கண்ணடித்தாள்.

அதைப் புரிந்து கொண்டவனாய் நித்யன் தன்னுடைய லவ் ஸ்டோரியை சொல்லத் தொடங்கினான். இவன் இவளைப் பார்த்த நாளிலிருந்து இன்று வரை சொல்லி முடித்தான். அதைக் கேட்ட சத்யன் கோபம் கொண்டாலும் தன்னை அவள் காதலிக்கவில்லை என்று தெரிந்ததும் விலக முடிவு எடுத்தான். மற்றவர்களைப் போல் தன்னை காதலிக்கவில்லை என்று காதலியை கஷ்டப்படுத்தும் கொடூரமானவன் அவன் இல்லை. இயல்பிலே கூச்ச சுபாவம் உள்ளவன் அதனால் அவர்களை வாழ்த்தி விட்டு சென்று விட்டான்.

ஆனால் இங்கு நிர்பயாவின் நிலைதான் மோசமாகி போனது. இருந்தாலும் நித்யனிடம் கேட்டுவிட எண்ணி அவன் புறம் திரும்பினாள்.

நிர்பயா,” தேங்க்யூ நித்யன், எனக்காக அவனிடம் பொய் சொன்னதுக்கு. தேவையில்லாமல் என்னுடைய பிரச்சனையில உங்கள மாட்டி விட்டுட்டேன். நீங்களும் அத சமாளிகிறேன்னு பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டீங்க. ஆனா செம ஸ்டோரி
எனக்கு இந்த ஸ்டோரியை கேட்ட பிறகு என்னை யாராவது இந்த மாதிரி லவ் பண்ணா நல்லா இருக்கும்னு தோணுது என்று சிரித்தவள் நித்யன் சொன்ன வார்த்தை கேட்டு வாயடைத்துப் போனாள்.

நித்யன்,” நிர்பயா நான் பொய் சொல்லல ஐயம் இன் லவ் வித் யூ. நான் உன்ன கல்யாணம் பண்ணிக்க என்னோட வீட்டுல மகாராணியா இருக்க உனக்கு சம்மதமா? நான் சொன்னது கதையல்ல எல்லாமே உண்மை தான். நான் உன்ன தான் இத்தனை வருஷமா லவ் பண்றேன் ஆனால் இதை சொல்ல சான்ஸ் கிடைக்கல.இப்ப கூட அவர்கிட்ட நீ இந்த மாதிரி சொல்லலனா இன்னும் கூட என்னோட லவ்வ உன்கிட்ட சொல்லாமேயே இருந்திருப்பேன். தேங்க்ஸ் பார் யூவர் சீனியர்.

இதைக் கேட்ட நிர்பயாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் குழப்பம் அடைவதை பார்த்ததும்,

நித்யன்,” நிர்பயா நீ என்னோட காதல ஏத்துகனும்னு கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால் ஏத்துகிட்டா சந்தோஷப்படுவேன் என்று அவளை மேலும் குழப்பினான்.

அவனை நிமிர்ந்து ஒரு முறை பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து காரில் சென்று அமர்ந்து கொண்டாள். இவனும் அவளின் எண்ண ஓட்டங்கள் என்னவென்று தெரியாமல் அவள் பின்னாலேயே காருக்கு சென்றான்.

நித்யன்,” கிளம்பலாமா? இப்ப நீ எங்க போகணும்.

நிர்பயா,” நீங்க சொன்னதுக்கு நான் இதுவரைக்கும் நீ எந்த பதிலும் சொல்லலை ஏன்னு கேக்க மாட்டீங்களா?

நித்யன்,” சிரித்துக்கொண்டே, சீ என்னோட மனசுல இருந்தத உன்கிட்ட சொல்லிட்டேன். அதுக்கு நீ எனக்கு உடனடியாக பதில் சொல்லணும் என்று அவசியம் இல்லை. என்ன பத்தி முழுசா தெரிஞ்சுக்கணும், புரிஞ்சுக்கணும். அதை நீ போகப்போக தெரிஞ்சிப்ப. கொஞ்ச நாள் யோசி உடனே எடுக்கிற முடிவு ரொம்ப நாள் நிலைக்காது, அப்படி என்றது என்னுடைய எண்ணம். சோ டேக் யூவர் ஓன் டைம்.

அவன் சொன்னதைக் கேட்டதும் ஒரு தெளிவு வந்தவளாய் புன்சிரிப்புடன் சரி என்றாள்.

அவளை வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுவிட்டு ஒரு புன்சிரிப்புடன் விடைபெற்றான் நித்யன்.

வீட்டிற்குள் வந்தவளுக்கு எதன் மீதும் நாட்டம் செல்லவில்லை. யார் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. இதை கண்ட நிரஞ்சனாவிற்கு ஏதோ சரியில்லை என்று தோன்றவே அவள் பின்னோடு சென்றாள்.

தன் அறைக்கு சென்றவள் அங்கேயும் இங்கேயும் நடந்து கொண்டிருந்தாள்.
அவளுக்கு நித்யன் தன்னை இவ்வளவு காதலிக்கிறானா? ஏன் இத்தனை நாள் சொல்லவில்லை? அவன் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பான், அப்படி இருக்க என்னிடம் பேச முடியவில்லை என்று சொன்னானே? அய்யோ என்னால் முடியவில்லை என்று கத்தியவளை சமாதானம் செய்தாள் நிரஞ்சனா.

நிரஞ்சனா, “என்ன ஆச்சு உனக்கு? போன விசியம் என்ன ஆச்சு? உனக்கு மெசேஜ் பண்றது நித்யன் தானா? ஏதாவது பேசுடா, எதுக்கு பேய் அறைஞ்சா மாதிரி நிக்குற?

நிர்பயா,” அக்கா அங்க நடந்ததை நீ தெரிஞ்சிக்கிட்டா என்ன மாதிரி தான் நீயும் ஒண்ணும் புரியாம புலம்புவ.

நிரஞ்சனா, “அப்படி என்ன தான் ஆச்சு?

நிர்பயா, “அது வந்து என்று அங்கு நடந்த அனைத்து விசயத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.

நிரஞ்சனா,” ஏய் என்னடீ சொல்ற? நித்யன் உன்ன லவ் பண்றாரா? நீ அவருக்கு என்ன பதில் சொன்ன?

நிர்பயா,” நான் இன்னும் எதுவும் சொல்லவில்லை. என்ன நல்லா யோசிச்சி சொல்ல சொல்லி இருக்காரு.

நிரஞ்சனா, “சூப்பர், நீ என்ன செய்ய போற? எப்ப பதில் சொல்ல போற? என்ன சொல்ல போற? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கொண்டு இருந்தாள்.

நிர்பயா, ” அக்கா, என்னால இப்ப எதுவும் சொல்ல முடியாது. சொல்லவும் மாட்டேன். ஒரு வேலை அவர் மேல லவ் வந்தா கூட சொல்ல மாட்டேன். இவ்வளவு நாள் வெயிட் பண்ணாருல. இப்ப இம்ப்ரஸ் பண்ண டிரை பண்ணட்டும். சும்மா லவ்வ சொன்ன உடனே வாங்க டுயட் பாடலாம்னு சொல்லனுமா? முடியாது. பர்ட்ஸ்ட் இந்த கேஸ் ஜெயிக்கட்டும்.

(என்னம்மா சொல்ல வர, அவன லவ் பண்றீயா இல்லையா)

நிரஞ்சனா, “ரொம்ப கஷ்டம் என்று தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.

வெளியே சென்றவள், நித்யன் கேட்டீங்களா? உங்க நிலைமை ரொம்ப கஷ்டம். அவள எப்படி இம்ப்ரஸ் பண்றது, அப்புறம் கேஸ் எப்படி ஜெயிக்கிறதுனு யோசிங்க.

நித்யன்,” எனக்கு இப்பவே தலை சுத்ததுதே. உங்க தங்கச்சிய லவ் பண்ண வைக்கறதுக்குள்ள எனக்கு வயசாகிடும் போலையே?

நிரஞ்சனா,” அதெல்லாம் நீங்களாச்சி, அவளாச்சி எதையோ பண்ணுங்க. பாய் என்று அவன் அழைப்பை துண்டித்து விட்டாள்.

இரவெல்லாம் யோசித்து கொண்டிருந்தவனுக்கு ஒரு யோசனை தோன்ற அதை கிரிஷிடம் சொன்னான். அவனும் ஓகேடா செய் என்று சம்மதம் தெரிவித்தவுடன் அதை செயல்படுத்த எண்ணி நிம்மதியாக உறங்கினான்.

மறுநாள் குளித்து முடித்து ஒரு மாப்பிள்ளை தோரணையில் வெளியே வந்தவன் தன் தந்தையுடன் நிர்பயா வீட்டை நோக்கி பயணமானார்கள். அதுவும் அவள் வீட்டில் இல்லாத நேரத்தில்.

தொடரும்…
Bayasade-Bali-Bande-Serial|690x390

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here