எடுத்தவுடனே யாரையும் நம்பி விடாதீர்கள். யாரையும் நேரில் இதற்கு முன் பார்க்காமல்,பழகாமல் அவர்கள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள்
ஒரு வியாபாரி ஒருவன் ரோட்டில் நடந்து கொண்டு சென்றான். அப்போது அந்த வியாபாரிக்கு எதிரே வந்தவன், அவனை நிறுத்தி,”என்னை ஞாபகம் உள்ளதா?” என்று கேட்டான்.
பின் “உங்களுக்கு என்னை நினைவு இருக்கிறதோ இல்லையோ, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த நகரத்திற்கு வந்த போது, நான், என்னிடம் பணம் இல்லை என்று உங்களிடம் பணம் கேட்டேன்.
அதற்கு நீங்களும் என்னிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, ஒருவரின் வெற்றிப் பாதையில் செல்ல இது உதவட்டும் என்று வாழ்த்திக் கொடுத்து உதவி புரிந்தீர்கள்” என்று அவருக்கு ஞாபகப்படுத்தினான்.
அந்த வியாபாரியும் யோசித்துப் பின் அந்த வியாபாரி,
“ஆம், நினைவுக்கு வந்து விட்டது என்று சொல்லி, வேறு என்ன சொல்லுங்கள்” என்று ஆவலுடன் கேட்டான்.
அதற்கு அவன், “இல்லை எப்படி அப்போது எனக்கு பணம் கொடுத்து உதவி புரிந்தீர்களோ, அதேப் போல் இப்போதும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முடியுமா?” என்று கேட்டான்.
ஆம்.,நண்பர்களே.,
யாரையும் எளிதில் நம்பி ஏமாறாதீர்கள்…
யாரையும் நம்ப வைத்து ஏமாற்றாதீர்கள்..
.
ஏனெனில்.,
அதற்குப் பெயர் துரோகம்…
யாரையும் நாம் நம்பி ஏமாறவும் வேண்டாம்
யாரையும் நாம் ஏமாற்றவும் வேண்டாம்…..