Home Blog Page 54
மின்னல் விழியே - 1 சென்னை பெசன்ட் நகர் சாலையில் கம்பீரமாக வீற்றிருந்தது “குமார் விலாஸ்”. அதன் மூன்றுமாடி கட்டிடமும்… வெளியலங்காரமும். பார்ப்பவர்களை திரும்பி பார்க்க தூண்டும்… பங்களா என்று சொல்வதை விட குட்டி அரண்மனை என்று சொல்வது தான் சரியாக இருக்கும்… அவ்வளவு செல்வ செழிப்போடு பார்ப்பவர்கள் கூட, வாழ்ந்தால் இப்படி ஒரு வீட்டில்...
அதிகாலை பனிக்காற்று மேனியை தழுவிச் செல்ல, நிதானமாய் மூச்சை உள்ளிழுத்தபடி கண்களை மூடித் திறந்தாள் வெண்பா. அந்தக் குளிர் காற்று உடலின் எல்லா உறுப்புக்களையும் உஷ்னமாக்கிக் கொண்டு திரும்பியது. போர்வையை மீண்டும் இழுத்துப் போர்த்திய வண்ணம் உறங்கப் போனவளை உறங்க விடாமல் அழைத்தது சித்தி இளமதியின் குரல். “குட்டிம்மா..எழுந்திரு ஆறு மணியாகிருச்சு..” என சித்தி கூற சட்டென மஞ்சத்தில் எழுந்து அமர்ந்து...
மந்திரம் -18 "துஜா…………… " என்று அலறியபடி எழுந்து அமர்ந்த வசிக்கு சற்று நேரம் மூச்சே நின்று விட்டது. ஏசியின் சில்லிப்பிலும் வியர்த்து வழிந்த முகத்தை, பூந்தூவலையால் அழுந்த துடைத்தவனுக்கு அழுவதா சிரிப்பதா என்று தான் புரியவில்லை !!!! அவனுடைய துஜா… அவளுக்கு…. கடவுளே…அவன் இதய துடிப்பு அவனுக்கே கேட்டது…. இத்தனை துலாபாரமாக...
மந்திரம் - 17 "உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு .உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடுநினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு …" என்ற பாடலை கசியவிட்டது வசியின் கைபேசி .. திரையை பார்க்காத போதும் …அழைப்பது தனது தேனு தான் என்பதை உணர்ந்தவனுக்கு , அழைப்பை ஏற்க யோசனையாக இருந்தது...
மந்திரம் - 16 அடுத்த நாள் காலை எப்பொழுதும் போல விடிந்துவிட , முகத்தில் பட்ட சூரிய ஒளியின் வெப்பம் வசியை கண்விழிக்க செய்தது . அமர்ந்தவாறே உறங்கியபடியால் கைகால் எல்லாம் தசை பிடித்துக்கொள்ள சற்று நேரம் சோம்பல் முறித்து வார்ம் அப் செய்தவன் , மெல்ல அறைக்குள் தனது பார்வையை சுழல விட்டான் .
மந்திரம் -15 தன்னை தோளோடு அணைத்தவாறு அமர்ந்திருந்த கணவனின் கையணைப்பு துஜாவை சிந்திக்க விடாமல் குழப்பியது . நேற்றுவரை இவன் யார் ? அவளுக்கும் அவனுக்கும் என்ன பந்தம் ? மனதால் வேறொருவரனை கணமேனும் கணவனாக எண்ணி மகிழ்ந்த அவளால் எப்படி இவனை கணவனாக ஏற்க முடியும் ? தன் விருப்பம் ஒன்றே...
மந்திரம் -14 குளியல் அறையில் இருந்து வெளிப்பட்டவனின் பார்வை, அவள் தன் நெஞ்சோடு அணைத்திருந்த அந்த நோட்டின் மீது ஒருகணம் படிந்தது. "எழுதியவன் நான்….அங்கீகாரம் உனக்கா " என்று அந்த உயிரற்ற அவன் உணர்வு குவியலான அந்த காகித கத்தை மீது பொறாமை துளிர்த்தது வசிக்கு. ஏக்கத்தோடு அவளையும்.....
மந்திரம் -13 யோசனையோடு முதல் பக்கத்தைப் பார்த்தவள், “என் ஆச தேன்மிட்டாய்க்காக “ என்று அதன் முதல் பக்கத்தில் எழுதி இருப்பதை கண்டாள். காலையில் அவன் அவளை ‘தேனு ‘ என்று அழைத்து அணைத்தது அவளுக்கு நினைவு வந்தது. ஆர்வம் உந்த குளியலரை பக்கம் ஒரு கண்ணை வைத்துக்கொண்டே, அந்த நோட்டின் பக்கங்களை...
மந்திரமென்ன மங்கையே -12 கோபமும் சிரிப்பும் சரிவிகிதமாக அவனை ஆட்கொள்ள , முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டுதான் அறைக்குள் நுழைந்தான் வசி . அறைமுழுக்க அவன் ஒட்டிவைத்திருந்த அவனுக்கு பிடித்த கால்பந்தாட்ட வீரர்கள் …அவனது குடும்ப புகைப்படங்கள் …அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அவனது வெற்றி கோப்பைகள் பதக்கங்கள் …எவை ஏன் அவனது மெத்தை விரிப்பு முதற்கொண்டு அனைத்தும் மாற்றப்பட்டிருந்தது...
மந்திரம் -11 அன்று மாலை வசியின் குடும்பம் , துஜாவின் வீட்டிற்கு கிளம்பினார் . துஜாவினுள்ளே ஒரு போராட்டமே நிகழ்ந்து கொண்டிருந்தது . அவள் பிறந்து வளர்ந்த இடம் , காலையில் நடந்த ரசாபாசத்தில் அவளது சுற்றத்திற்கு கண்டிப்பாக விஷயம் பரவி இருக்கும் ..யார் யார் எப்படி எடுத்துக்கொண்டார்களோ ?இந்த நிலையில் திரும்பவும் வீட்டிற்கு போகவேண்டுமா ?...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!