சஞ்சனாவிடம் பேசிவிட்டு மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த ஸ்ருதி இலக்கில்லாமல் நடக்க ஆரம்பித்தாள்.
சஞ்சனாவிடம் செல்லும்போது கூட தன் கணவனின் மீது தவறு இருக்காது வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட வீடியோவும் போட்டோவும் பொய்யாக இருக்கும் என மனதின் மூலையில் ஒரு நப்பாசையுடனே சென்றாள் சஞ்சனாவிடம் பேசியதும் தன் காதல் கணவனின் மீது வைத்திருந்த துளி நம்பிக்கையும் தூள் தூளாக உடைந்ததை எண்ணி கண்ணீர்...
ரகுவின் பெற்றோரை பார்த்துவிட்டு வந்ததில் இருந்து புவி ஸ்ருதியுடன் பாராமுகமாகவே இருந்தான்,ஸ்ருதிக்கும் இது தெரிந்து தான் இருந்தது ஸ்ருதியே அவனை தேடி சென்றாலும் அவன் உண்மையை கூற முடியாமல் அவளை நெருங்கவும் முடியாமல் தவித்து கொண்டிருந்தான் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதற்கிணங்க.
புவிக்கோ உண்மையை கூற வேண்டும் என்றஎண்ணம் இருந்தாலும்,ரகுவை அவள் வெறுப்பதற்கான காரணம் அவனது அவசர புத்தியால் நடந்த விளைவின்...
சென்னையில் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொன்டிருந்த அந்த பிரபல தனியார் மருத்துவமனையின் பின்புறம் உள்ள பூங்காவில் தனது மகனுடன் விளையாடிக் கொண்டிருந்தான் ரகு.
"பப்பா நான் இங்க இருக்கேன்.. இங்க இருக்கேன்.." என அவனது கால்களையே சுற்றிக்கொண்டிருந்தான் மூன்று வயதான "ரிஷி ".
கண்களில் கட்டிய துணியின் இடைவெளியில் மகன் எங்கே நிற்கிறான் என்று தெரிந்தும் தேடுவது போல்...
தீரா மயக்கம் தாராயோ..21
முகுந்தனும் ரகுராமனும், ஸ்ருதியும் நந்தினியும் எங்கே சென்று இருப்பார்கள் தெரியாமல் குழம்பியபடி நின்றவர்கள் கார்த்திக்கை பார்த்து “அவள் எந்த ஊருக்கு சென்று இருக்கிறாள் டீடெய்லா விசாரிச்சு வரனும்” முகுந்த் சொல்லிவிட்டு ரகுவை பார்த்து திரும்பி, “அவள் எங்கு சென்றாலோ தெரியாது தேவையில்லாமல் இனி என் வழிக்கு வந்த்தேன்னா நடப்பதே வேறு உன் உயிர் உன்னிடம் இருக்காது போடா...
கண் விழிக்கும் போது மகிழ்ச்சியான மனநிலையை உணர்ந்தான் புவி., தனது காதல் உண்மையானது இல்லையென்றால் இத்தனை வருட காத்திருப்புக்கு பிறகு எத்தனையோ பிரச்சினைகளை சந்தித்த பிறகு எனக்கு கிடைத்திருக்குமா என்ற எண்ணத்தோடு எழுந்தவன் எப்போதும் போல தன் உடற்பயிற்சியை பார்க்க சென்று விட்டான்.
ஸ்ருதியும் அதுபோன்ற ஒரு சந்தோஷமான மனநிலையிலேயே எழுந்தாள். அவள் மனதிலும் காதல் வந்ததை அவள் அறியாமல் போனாலும்...
முகுந்தனிடமிருந்து தங்களை காத்து கொள்ள நினைத்தவர்கள் ஒன்றை யோசிக்க தவறிவிட்டார்கள்.. இத்தனை நேரம் ஆகியும் கார்த்தியிடமிருந்து நந்துவிற்கு அழைப்பு வரவில்லை.. புவியிடமிருந்து ஸ்ருதிக்கும் அழைப்பு வரவில்லை.. ரகுவிடமிருந்தும், முகந்தனிடமிருந்தும் தப்பித்து ஊர் போய் சேர்ந்தால் போதும் என்ற நினைப்பே அவர்களின் பிரதானமாக இருந்தது..
நந்து, “ பேபி நாம எப்படி போறது? நீ ஏதாவது ப்ளான் வச்சி இருக்கியா? பிளைட் டிக்கெட்...
ஸ்ருதியும் புவியும் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்தனர். சுருதியின் கைகள் புவியின் கைகளுக்குள் அடங்கி இருந்தது. சில்லிட்டு இருந்த அந்த கைகள் அவளின் பதட்டத்தை அவனுக்கு எடுத்துக்காட்ட போதுமானதாக இருந்தது. அவளின் இமைகள் தட்டும் சப்தம் கூட தனக்கு கேட்பதாக தோன்றியது புவிக்கு ஏன் என்றால் அந்த அமைதி அத்தனை கொடியதாக இருந்தது. கண்டிப்பாக அவள் மனதில் தன் மேல் காதல் இல்லை இருந்தும் என்னிடம் உதவி...
சுதா கூறியதைக் கேட்ட ஸ்ருதியின் உடல் முகுந்தனை நினைத்து நடுக்கம் கொள்ள, நடுங்கும் தன் கரத்திலிருந்த முகுந்தனுக்கு எதிரான ஆதாரங்களை வெறித்தபடி இருந்தது அவளது விழிகள்.
ரகுவின் கூற்றையும் சுதாவின் ஆதாரங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தவளால் முகுந்தனை சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை. ‘காதல் என்னும் மாய வலை ஒருவரை இப்படியும் வெறி கொள்ள செய்யுமா’ என்று ஆராயும்படி செய்திருந்தது முகுந்தனின் செய்கைகள்.
ஐஸ்கிரீம் சுவையையும், அதன் குளிர்ச்சியையும் தொடர்ந்து அனுபவிக்க விடாமல் இடையூறாக முகுந்தனும் கார்த்திக்கும் வந்துவிட்டார்களே என்று நந்து ஒரு கணம் நினைக்காமல் இல்லை. வேறு வழி இல்லாமல் கார்த்திக்குடன் வெளியே வந்தாள். ஆனாலும் கார்த்திக்குடன் இருக்கும் தனிமையான நேரத்தில் அவனை பற்றி அறிந்துக்கொள்ள வாய்ப்பாக அமையுமே என்ற எண்ணமும் அவளுக்கு வந்தது.வெளியே வந்து காஃபி ஷாப்பை சுற்றி அமைக்கப்பட்டிருந்த சிறிய தோட்டத்திற்கு சென்று அங்கு இருந்த...
அந்த ஆடம்பரமான ஸ்டுடியோவில் முகுந்த் தன் இடது கையில் குலாப்ஜாமுனை ஏந்திக்கொண்டு இடது காலை மடக்கி தரையில் பதித்து வலது காலை ஊன்றி அதில் தன் வலது கையை வைத்தவாறு அவன் முன்நின்ற காதலை தலையை நிமிர்த்தி பார்த்துக் கொண்டிருந்தான்
"முகுந்த் நீங்க"
"நான் இப்போ உன்கிட்ட காதல யாசிக்கல ஸ்ருதி ஜஸ்ட் இந்த இனிப்பை சாப்பிட்டுட்டு...