இது ஒரு தேவதையின் கால சுவடுகள் .
1925--ஆம் ஆண்டு அந்தியூர் என்ற கிராமத்தில் நள்ளிரவில் ஒரு பெண் பிரசவ வேதனையில் துடித்து கொண்டு இருந்தாள் .அவளுடைய கணவன் ஆர்வத்துடன் குடிசைக்கு வெளியே காத்திருந்தான் .கொஞ்ச நேரத்துல குழந்தை அழும் சத்தம் கேட்க உள்ளிருந்து வந்த மருத்துவச்சி"பொன்னா பொம்பளை புள்ள பொறந்திருக்கு.அதுமட்டுமல்ல உன் பொண்ஜாதிக்கு இந்த பிரசவமே மறு பொழப்பா போச்சு...
சில கதைகள் கேட்க கேட்க இனிமையா இருக்கும்.சில கதைகள் மட்டும் தான் இதயத்திலேயே இருந்துரும்.அப்படியோரு கதை தான் இது.
அவன் பேரு கிருஷ்ணா .அவ பேரு சத்யா.இரண்டு பேரும் ஒரே காலேஜ்ல ஒரே கிளாஸ்மேட்ஸ்.இரண்டு பேரும் லவ்வர்ஸ்.காலேஜ்ல அது கடைசி வருஷம்.செமஸ்டர் டைம்ல அவுங்க ப்ரண்ட்ஸ் கூட டூர் போயிட்டு வந்துட்டு இருந்தாங்க .அப்ப எதிர்பாராத விதமாக ஒரு ஆக்சிடென்ட் ஆகி...
சில்லுனு ஒரு லவ் ஸ்டோரி படிக்கலாம் வாங்க.என் பேரு தீபிகா.சென்னையில பெரியஷ இன்ஜினியரிங் காலேஜ்ல மூணாவது வருஷம் படிச்சிட்டு இருந்தேன்.எங்க குடும்பம் மிடில்கிளாஸ் தாங்க .அண்ணா தம்பினு நாங்க மூணு பேர் செம ரகள பண்ணுவோம்.எனக்கு கிடச்சது எல்லாமே சூப்பர்ங்க.அன்னைக்கு செமஸ்டர் லீவ் முடிஞ்சு முதல் நாள்.சிக்குன பஸ்ட் இயர் பசங்கள கலாய்ச்சுட்டு இருந்தோம் .அப்ப தான் அவன் சத்தம் இல்லாமல் தாண்டி போக பாத்தான்.புடிச்சு...
காதல் புடிக்கும்னா மட்டும் இந்த பதிவை படிக்க ஆரம்பிங்க ப்ரண்ட்ஸ்.
என் பெயர் கெளதம்.சொந்த ஊர் கோவை.இப்ப சென்னைல இருக்கேன்.இந்த உலகத்த வெறும் கண்களால் பாக்க புடிக்காதுங்க எனக்கு காரணம் நான் ஒரு கேமரா மேன்.சின்ன வயசுல இருந்தே கேமரா மேல பைத்தியம் எனக்கு .அப்பாக்கு புடிச்ச மாதிரி படிச்சிட்டு எனக்கு புடிச்ச மாதிரி தமிழ் சினிமால பேமஸ் கேமரா மேன்ட...
நடுத்தர வர்க்கத்தோட வாழ்க்கை போராட்டம் அவ்வளவு சீக்கிரமா முடிவுக்கு வர்றது இல்லைங்க .மிகப்பெரிய உழைப்பையும்,இழப்புகளையும் பலி கொடுத்து தான் முன்னேறி வர முடியுது .எனக்கும் அப்படி தான் நடந்தது .
என் பேரு இளவரசன் .அம்மா,அப்பா,அக்கா,தங்கச்சின்னு அழகான குடும்பம் .நாங்க குடியிருந்தது லைன் வீடு .வரிசையா அடுக்கி வச்ச மாதிரி வீடுகள் இருக்கும் .நிறைய பேர் வெளியூரில் இருந்து குடும்பத்தோட வந்து...
(நேர்மையா காதலிக்கிற எல்லோருக்கும் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்)
எல்லோருக்கும் வணக்கம் என் பெயர் தீபன் சக்ரவர்த்தி .அப்பா சரவணப்பெருமாள்,அம்மா மகாலட்சுமி,தங்கச்சி ஆனந்தி.அப்புறம் என் அம்மா மட்டும் தங்கச்சிய பேர்ச்சொல்லி கூப்பிட மாட்டாங்க ஏன்னா அது அப்பாவோட முன்னால் காதலியோட பேர்ன்னு பின்னால் தான் தெரிஞ்சதாம்.அழகான குடும்பம் .என் அப்பா அடிக்கவும் மாட்டார் அட்வைஸ் பண்ணவும் மாட்டார் .கண் பார்வையில் எங்களை சரிப்படுத்த...
கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி என்னை பத்தி சொல்லிறேன்.என் பேரு பிரபாகரன்.மிடில்கிளாஸ் குடும்பம் .எனக்கு ஆர்த்தி,ஷோபனான்னு இரண்டு தங்கச்சி இருக்காங்க .அம்மா கெளரி.அப்பா கங்காதரன்.அவ்ளோ தான் .இனி கதைக்கு போகலாம் .
என்னோட பிரச்சனையே என்னோட படிப்பு தான்னு சொன்னா நம்புவீங்களா?அதுதாங்க உண்மை.நல்லா படிச்சு ஒருத்தன் பஸ்ட் ரேங்க் வாங்கிட்டா அவன எல்லாரும் ஒதுக்கி வைக்குறீங்க?என்னங்க நியாயம் .என்னை விளையாட கூப்புட்டு போக...
இது முழுக்க முழுக்க கற்பனை கிடையாது .என் கண் முன்னாடி நடக்குற சம்பவங்களின் தொகுப்பு தான் .
இந்த கதையோட நாயகன் பேரு முரளி.ஆனா பசங்க எல்லோரும் முரட்டு சிங்கிள் முரளின்னு தான் கூப்புடுவாங்க.எப்படி முரட்டு சிங்கிளா ஆனார்னு அவரே சொல்லி கேளுங்கள் .
எனக்கு அப்பா இல்ல அம்மா மட்டும் தான்.ஒரு தம்பி இருக்கான் பேரு...
அன்று மனநல ஆலோசகர் ரங்கராஜன் .நீதிமன்றத்தில் இருந்து கவுன்சிலிங் பெற அனுப்பி வைத்த இளம் தம்பதியினர் அசோக்--அபர்ணா சம்மந்தப்பட்ட பைலை படித்துவிட்டு இருவரையும் தனிதனியாக பேச விரும்பினார் .முதலில் அபர்ணா வாடிய முகத்துடன் வந்து அமர்ந்தாள்.அப்போது ரங்கராஜன் "எந்த பிரச்சனையா இருந்தாலும் நீ மறைக்கவும் வேண்டாம்.தயங்கவும் வேண்டாம்.உன் முன்னாடி இருக்குறது உன் அப்பான்னு நினைச்சுட்டு சொல்லும்மா"என்றதும் வடிந்த கண்ணீரை துடைத்து கொண்டு பேச ஆரம்பித்தாள் .
கிருஷ்ணன் விடை தெரியாத கேள்விகளை சுமந்து கொண்டு போலிஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தார்.அங்கே நின்றுகொண்டு இருந்த மணமக்களை பார்த்து கொண்டே இன்ஸ்பெக்டர் முன்னாடி போய் அமைதியாய் அமர்ந்தார்.இன்ஸ்பெக்டர் அவரிடம் "சார் உங்க வேதனை ஒரு அப்பாவா எனக்கும் புரியுது.ஆனாலும் எங்களுக்கும் சில கடமைகள் மனசாட்சிய மீறி செய்ய வேண்டி இருக்கு.இனி நீங்க தான் முடிவு பண்ணனும்"என்றதும் கிருஷ்ணன் தனது செல்போனில் மனைவியை அழைத்தார் .