உயிரானவளே பகுதி 13

0
395

முகிலன் மயூரி வருவாள்னு எதிர் பாக்கவில்லை..
இவள் எப்படி வந்தாள்…? யார் சொல்லிருப்பா எனக்கே இப்பதான தெரியும் … இவ எப்படி…? யோசித்து கொண்டிருந்தான்.

மயூரி..கோவத்தில் முகமெல்லாம் சிவந்து நின்று கொண்டிருந்தாள்..

மயூரிய பார்த்ததும்
கார்த்திக் திக் பிரமை பிடிச்ச மாதிரி பார்த்து கொண்டு இருந்தான்…

. தப்பு பண்ணிட்டோமே னு
குற்ற உணர்வு கூட இல்லை உன்கிட்ட என்ன தெனாவட்டா திமிரா பேசுற…நீ
ச்சீ.. நீயெல்லாம் மனுஷனா டா பொறுக்கி …

ஒரு பொண்ண அடையனும் னா அவளை கெடுத்துட்டா அடைஞ்சிடலாமா…
எவளோ கீழ்தரமான எண்ணம் உனக்கு உன்ன மாதிரி பொறுக்கிகள் இருக்குறது நாளா தான் டா எத்தனையோ பெண்கள் கோழை மாதிரி தற்கொலை பண்ணிக்குறாங்க…

சில பொண்ணுகல பாக்கும் போது எனக்கும் கோவம் வரும் … இவங்கலாம் ஏன் தப்ப தட்டி கேக்காம ஒதுங்கி போறாங்கனு. ஒரு பொண்ணுக்கு தப்பு நடந்தா ஓராயிரம் பெண்கள் வீதிக்கு வந்து போராடனும் அப்ப தான் பெண்ணுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு தீர்வு பிறக்கும்.

ஆன ஒரு பாவம் அறியாத என் அனுவுக்கே இந்த நிலைமை….

அனு எவளோ தைரியமான பொண்ணு தெரியுமா அவளே கோழை மாதிரி தற்கொலை பண்ணிக்க முடிவு எடுத்திருக்க னா அவளை அந்த முடிவுக்கு தள்ளுனது நீ…

அவளையே கோழை ஆக்கிட்டியே டா உன்னை…மறுபடியும் அடிக்க கை ஓங்கியவளை … முகிலன் தடுத்து நிறுத்தினான் ..

மயூ … ப்ளீஸ் காம் டவுன்…

இவனை அடிச்சி உன் கைய ஏன் அழுக்கு பண்ணிக்குற… கார்த்திக்கை முரைத்துக்கொண்டே…பேசினான்

விடுங்க முகிலன்… அனுக்கு இந்த நிலைமை வர காரணமே இவன் தான்… இவனை அடிச்சி கொன்னே போடணும்… ராஸ்கல்.. . கோவத்தில் முகம் செவ செவனென்று தகித்தது..

சீ… இவனை தொட்டாலே பாவம்.. முகத்தை வேற பக்கம் திருப்பி கொண்டாள்..

கார்த்திக்க்கு மனசு வலித்தது யாருக்காக இதெல்லாம் பண்ணேனோ அவளே என்ன வெறுக்குற மாதிரி ஆகிடுச்சே…

ப்ளீஸ்….. என்ன புரிஞ்சிக்க மயூ… நான் பண்ணது தப்பு தான் இல்லனு சொல்லல…ஆன அதெல்லாம் உன்னால தான் பண்ணேன்…

என்னது…..??? நானா…?அனுவுக்கு இப்படி நடக்க .
நானா காரணம்.. அதிர்ச்சியோடு பார்த்தாள்..

ஆமா ….
மயூ நான் உன்ன விரும்புறேன் நீ எனக்கு கிடைக்கணும்னு ஆசைப்பட்டேன்… அதான் இந்த தப்பு பண்ணிட்டேன் .

சத்தியமா நான் அனு வா நினைக்கவே இல்லை … நான் உன்ன மட்டும் தான் நெனச்சேன்..

ச்சீ … இப்படி பேச உனக்கு வெக்கமா இல்லை..
. நீ நெனைச்வுடன்.. எல்லாம் பொண்ணுகளும் படுக்கைக்கு வந்துடுவாங்க னு நினைப்பா உனக்கு…

இடியட்…..
உன்னால தான் டா அங்கே அனு நடைபிணமா இருக்கா அவளுக்கு என்ன பதில் சொல்லப்போற..

ப்ளீஸ் மயூ புரிஞ்சிக்கோ …..

நா கெட்டவன் லாம் கிடையாது மயூ ஐ லவ் இம் சோ மச்… நீ இல்லனா நான் இருக்க மாட்டேன் மயூ…. கண்கலங்கினான்.

செத்து போடா… நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்க

இன்னும் எத்தனை பேர கெடுக்க போற …

உன்ன மாதிரி ஒரு தறுதலையை
பெத்து போட்டா பாரு உன் அம்மாவ சொல்லணும்…..

மயூ என்ன என்னவேனா சொல்லிக்கோ திட்டிக்கோ…
ப்ளீஸ் எங்க அம்மாவ ஒன்னும் சொல்லாத மயூ என்னால தாங்கிக்க முடியாது…

ஓ… உன் அம்மாவ சொன்ன உனக்கு …. கோவம் வருதா….
அம்மா னா அவளோ பிடிக்குமா… உனக்கு..

ஆமா மயூ …

எனக்கு எங்க அம்மா நா உயிர்
அவங்க எது சொன்னாலும் நான் கேப்பேன்…

ஓஹோ…

அப்போ இந்த மாதிரி கேவலமான வேலைய உங்க அம்மா தான் செய்ய சொன்னாங்கலா…

மயூ…. யூயூ….. கோவத்தில் கத்தினான்…

ஹேய்… சும்மா கத்ததா தா.. கத்துனா நீ
நல்லவனா ஆகிடுவியா… ஒழுங்கா அனுவை கல்யாணம் பண்ணிகிற வழிய பாரு … இல்லை உன்ன கொள்ளவும் தயங்கமாட்டேன் ஜாக்கிரதை..

மயூ….. “காம் டவுன் உனக்கு
எப்படி தெரியும் மயூ யார் சொன்னாங்க முகிலன் கேட்க…

ஹ்ம்… நா அனுக்கு மருந்து வாங்க பார்மசி வரை போயிருந்தேன்..
வாங்கிட்டு
வரும்வழியில் நீங்களும் உங்க கூட வந்தான் ல ஒருத்தன் அவனையும் பார்த்தேன் ….

நீங்க உள்ளே போனதும் அவன்… நடந்து வந்துட்டு இருந்தான்…

இவனை எங்கியோ பாத்தா மாதிரி நியாபகம்…ஆன எங்கனு தான் நியாபகம் வரல… எவ்வளவு யோசிச்சித்தும்.

அந்த நேரம் பாத்து உங்க கூட வந்தவன் என்ன பாத்ததும் …. தடுமாறிநின்றான்.

என்ன இவன் எதுக்கு தடுமாறனும்.. யோசிச்சிட்டே நின்னுட்டு இருக்கிறேன்…. அவன் பாட்டுக்கு
மயூரி நான் எதுவும் பண்ணல …. என்ன தப்பா நினைக்காத… சொல்லிட்டு நிக்கமாமலே ஓடிபோய்ட்டன்…

என்ன சொல்லிட்டு போறான் யோசனையோடவே தான் வந்தேன்.

நீங்க போன ரூம்க்கு இங்க வந்து பாத்தும்

நீங்க பேசுனதுலாம் கேட்டு அதிர்ச்சி ஆகிட்டேன்.

அனுவை.. இப்படி பண்ணது இவன் தான்னு புரிஞ்சிக்கிட்டேன்..

இவன் உங்ககிட்ட.. திமிரா பேசவும் .எனக்கு கோவம் தான் வந்துச்சு .. தப்பு பண்ணிட்டு எவளோ தைரியமா பேசுறா னே … இவனைஎனக்கு வர ஆத்திரத்துக்கு என்னென்னமோ பன்னனும்போல தோணுது… . அதான் கோவத்தில் அடிச்சிட்டேன்…

இவனை எவளோ அடிச்சாலும் திட்டுனாலும் … பாதிக்க பட்டது என்னவோ அனுதான் .. மயூ அவங்களுக்கு இவன் தான் னு தெரிஞ்சா என்ன பண்ணுவாங்கனு முடிவு எப்படி எடுப்பாங்க னு கூட தெரில மயூரி.கவலையாய் சொன்னான்.

எனக்கும் அதே டவுட் தான் முகில்..

பட் அனுக்கிட்ட இதை சொல்லியே ஆகணும் சொன்னதற்கு அப்பறம் என்ன நடந்தாலும் சரி முடிவு அவ எடுக்கட்டும் நாம கம்பிள் பண்ணக்கூடாது…

கார்த்திக் இருவரும் பேசிகிட்டு இருக்குறது ஒரு கையாளாகதனதுடன் பார்த்துட்டு கொண்டு இருந்தான்…

என்னால மயூ வா விட முடியாது அவ
இருக்க வேண்டிய இடத்துல அனுவ நெனைச்சிக்கூட பார்க்க முடியாது..

. எனக்கு மயூ வேணும்…. இவளை எப்படியாவது அடையனும்… எனக்கு கிடைக்கலனா… இவனுக்கும் கிடைக்க விட மாட்டேன் .. வன்மம்மாய் நினைத்து கொண்டான் .. இப்போதைக்கு அமைதியா இரு கார்த்திக் மனதுக்குள் சொல்லிக்கொண்டான்…

முகிலன் கார்த்திகை பார்த்து எழுந்திரு அனுக்கிட்ட போகணும்…..

ஏன்.. நான் ஏன் வரணும்..?

ஆஹான்.. நீ வராம உன் தாத்தா வா கூட்டிட்டு போவாங்க.. எழுந்திரு டா சும்மா பேசிகிட்டு…. கடுப்போட சொன்னான்..

டேய் …. இப்போ எழுந்துக்க போறியா இல்லையா மயூ மறுபடியும் அடிக்க போக …

முகிலன் தடுத்து .. அவன் வருவான் மயூரி… இல்லனா யார் விட்டது அவனை.. கைமூஷ்டி இறுக்கமா வச்சிக்கிட்டே பேச.

எழுந்து வரல நா அடிச்சே கொன்னுடுவாங்க போல…
எழுந்து போய்ட்டு டா கார்த்திக்… அதான் உனக்கு நல்லது ….

இவங்கள அப்பறம் பாத்துக்கலாம்…. ஹ்ம்ம்ம் வரேன்.. குரலில் சுரத்தே இல்லாமல் சொன்னான்..

அது அந்த பயம் இருக்கனும் ….. வா…

கார்த்திக்கை அனு ரூமிற்கு கூட்டிச்சென்றார்கள்
..
அனுவ பார்த்ததும் கார்த்திக்கு அன்னைக்கு காலேஜில் எப்படி இருந்தால்.. னு நினைத்து பார்த்தான்… துரு துரு னு அழகுதேவதை போல வலம் வந்தவளா இவ கார்த்திக்கால் நம்பவே முடியல…

இதுக்கெல்லாம் தான் தான் காரணம்னு ஒரு பக்கம் மனது உறுத்தினாலும் இன்னொரு பக்கம்… மயூ மீது ஏக்கமாய் பார்வை சென்று மீண்டது….உன்ன அடைய இவளை பலி கொடுக்கவும் தயங்க மாட்டேன்… பாவம் அனுக்கு நல்லது பண்ணுறேன்னு நினைத்து… கெடுதல் பண்ணிட்ட மயூ… கொடூரமாய் முகத்தை வைத்துக்கொண்டு… நின்றுந்தான்..

மயூ… அனுகிட்ட போய் மெதுவா அழைத்தால்.. அனு … கண் முழிச்சி பாரு… யார் வந்து இருகாங்க னு… சொல்லவும்..
அனு மயக்கம் தெளிஞ்சு.. சுத்தி பார்வையை ஓட்டினாள்… அவள் பார்வையில். படாமல் ஒதுங்கி நின்று கொண்டான்… முகிலன்.

கண்டிப்பா அனுஎன்ன பாத்தா சண்டை போடுவா… எதுக்கு வீணா சண்டை வரணும்.

கார்த்திக் பின்னாடி போய் நின்றுகொண்டான்…
அனுவின் பார்வை அந்த ரூமில் எல்லாம் இடமுமும் சென்றுகொண்டே கடைசியில் கார்த்திக்கிடம் நிலைகுத்தி நின்றது.

அதிர்ச்சியில்… கார்த்திகா … இங்க இருக்கிறது.. அதிசயமா பார்த்து கொண்டிருந்தாள்….

அனு எதுவும் பேசாமலே இருக்கவும்…. மயூ அனுவிடம் சென்று.. கார்த்திக் உன்ன பாக்க தான் வந்து இருக்கான் சொல்லவும்..

என்னய்யா…? என்ன .. எதுக்கு பாக்கணும்… டவுட்டோட மயூவை பார்த்தாள்
ஆமா அனு உன்ன தான் பாக்க வந்து… இருக்கான்.

ஓ…….. முன்ன இருந்த அனுவா இருந்தா சந்தோஷபட்டு இருப்பாள்.. ஆனால்… உதட்டை கடித்து அழுகை கட்டுப்படுத்தினாள்.

அவள் அழுகை அடக்க கஷ்டபடுவதை தாங்கிக்க முடியாமல்…நீ எதுக்கு டி அழுற…..

தப்பு பண்ணவனே தைரியமா வந்து நிக்கும் போது…

நீ எதுக்குடி அழுற.முட்டாள்
. கோவமா பேசினாள்

நீ.. என்ன சொல்லுற மயூ..?FB_IMG_1554200916487|690x431 FB_IMG_1554200938316|500x500 FB_IMG_1553742977308|636x424 அதிர்ச்சியோட கார்த்திகை…. பார்த்துக் கொண்டிருந்தாள்…..

அவள் கண்களில் நீயா இப்படி பண்ணினா. உன்ன தானே நான் விரும்பினேன். எதுக்கு டா இப்படி பண்ணினா என்ற கேள்வி தெரிந்தது.

.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here