இழப்பதற்கும் பெறுவதற்கும்
எதுவும் இல்லை என்னிடம்
எதையும் கொண்டு வரவில்லை
எதையும் கொண்டு செல்லப்போவதில்லை
ஆடம்பரமான வாழ்வு தேவையில்லை உன் அன்பு மட்டும் போதும்
அரண்மனை வாழ் க்கை தேவையில்லை குடிசைக்குள் உன்னோடு கூடி இருந்தாலே போதும்
ஆடி கார் கேட்கவில்லை உன்னோடு கைகோர்த்து காலரா நடந்தாலே போதும்
நட்சத்திர ஹோட்டல் உணவு தேவையில்லை, நீ ஊட்டிவிடும் கஞ்சி சோறு போதும்
பட்டு பீதாம்பரம் தேவையில்லை, உன் அன்பு இழை கலந்து நெய்த பருத்தி ஆடை போதும்
“தேவையில்லை” என்று சொன்னதை எல்லாம்
ஒரு நொடி பொழுதில் பெற்றிடுவேன் “அப்பா” நீ என்னோடு என்றும் இருத்தல்
அம்மாவின் அன்பு ஊட்டிவிடும் ,
உன் அன்பு ஊக்கமளிக்கும்.
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில்
நான் பெற்றது உன் அன்பை மட்டுமே
இழப்பதற்கு எதுவும் இல்லை , பெறுவதற்கு உன் அன்பை தவிர எதுவும் இல்லை இந்த உலகில் “அப்பா”
“அப்பா” அது வார்த்தை அல்ல என் உயிரின் உள்நாதம்.