என் சுவாசமே – 2

0
156

என் சுவாசமே – 2

வாழ்வில் மாற்றம் ஒன்றே மாறாதது.

அகத்தியாவின் மனநிலையை விவரிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். ஆம், காலையில் அவள் இருந்த மனநிலை என்ன?, இப்பொது அவள் இருக்கும் நிலை என்ன?

இந்த சம்பவம் அவள் மனதை மிகவும் பாதித்து இருந்தது. தான் பொறுப்பாகாத ஒரு சம்பவத்திற்கு அவள் தன் மேலேயே பழியை போட்டுக் கொண்டாள்.

இதில் அவள் பங்கு துளி கூட இல்லாதிருப்பினும்,அவளுள் இருக்கும் மென்மனதுடையவளோ, நடந்த அனைத்திற்கும் அவளையே பொறுப்பாகி இருந்தது. மனசாட்சியின் குற்றச்சாட்டுகளை தாள முடியாமல் அவள் மனமோ “ஓவென” கதற வேண்டும் போல் இருந்தது. அதன் பழிச்சொற்களால், அதன் வீரியம் தாங்க முடியாமல் அவள் கண்கள் நில்லாமல் அருவியை பொழிந்த வண்ணமே இருந்தது.

சிலர் இப்படி தான் தேவை இல்லாத விசயகளுக்கு, தேவையே இல்லாமல் குற்றஉணர்ச்சிகளுக்கு ஆளாகி, தன்னை தானே வருத்திக்கொண்டு

இருப்பர். இவளும் இந்த ரகம் தான்.

அதனால் தான் மிருதுலாவின் சமாதானங்கள் எடுபடாமலே போயிற்று. தோழியின் நிலை கண்டு அவளுக்கும் பாவமாக இருந்தாளும், எதையும் காது கொடுத்து கேட்க மாட்டேன் என்பவளிடம் கோவமும், பரிதாபமும் ஒருங்கே தோன்றியது.

ஐ.சி.யு வின் அறை கதவு திறக்கப்பட்டது. ஏதோ தனது குடும்பத்தில் உள்ளவர்க்கே எதோ ஆனது போல் ஒரு பதற்றத்துடன் காத்திருந்தாள். டாக்டர் வெளி வர எடுத்துக்கொண்ட அந்த ஒவ்வொரு நொடியும் அவளுக்கு மட்டும் அல்ல அங்கே இருந்த மற்றவர்களுக்கும் நரகமாக இருந்தது.

இவள் இவ்வாறு இருக்க அம்முதியவரோ எதையும் உணரும் நிலையில் இல்லை. அவர் அருகில் இருந்த டிரைவர் அவரை இரு முறை கூப்பிட்டு அழைத்தும் பயன் இல்லாமல் போக, அவரை தொட்டு அழைத்தார்.

அதில் தன்னிலை மீண்டவர், அவர் முகத்தை உணர்வின்றி நோக்க அவருடன் டாக்டர் வெளியே அவரை நோக்கி வருவதை தெரிவித்தார். டாக்டரின் முகத்தை எதிர் நோக்கினர்.

அவர் கூறப்போகும் வார்த்தைகளுக்காக தனது உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தார்.

டாக்டரின் முகம் ஒரு நொடி சந்தோசத்தையும், மறு நொடி துயரத்தையும் காட்டியது. “துரை நம்ம வாசு பொழச்சுட்டான். அவனுக்கு ஒன்னுமில்லைடா.” படபடவென சந்தோசத்துடன் கூறினார். “ஆனா?”, என ஒரு கேள்விக்குறியுடன் நிறுத்தினார்.

“என்னடா என் மகனுக்கு என்ன?” என அவர் குரலில் ஒரு தவிப்புடன் கேட்டார். இல்லைடா நம்ம வாசுக்கு ஒன்னும் இல்லை, அவன் உயிருக்கு ஆபத்து ஒன்னும் இல்ல. ஆனா தலையில கொஞ்சம் அடி பலமா பட்டு இருக்குற மாதிரி தெரியுது. இன்னும் கண் முழிக்கல அவன் கண் முழிக்க இன்னும் ஒரு 8 மணி நேரம் கிட்ட ஆகும் இல்ல அதுக்கும் மேலயும் ஆகலாம். அப்படி இல்லனா இருபத்தி நாலு மணி நேரம் வெயிட் பண்ணி பார்ப்போம்”, என ஒரு சிறிய இடைவெளி விட, மேலே சொல் என்பது போலவும், இதற்கு மேல் வேறு எந்த சோதனையும் என் மகனுக்கு இருக்க கூடாது என அவர் மனம் ஒரு அவசர வேண்டுதல் வைத்தது.

ஒரு பெருமூச்சுடன் மேலே சொல்ல துவங்கினார். 24 மணி நேரம் தாண்டியும் அவன் கண்ணு முழிக்கலனா அப்புறம் பார்ப்போம் நீ ஒன்னும் கவலை படாத என அவர் அங்கிருந்து நகர்ந்து அடுத்த கேஸ் பார்க்க சென்றார்.

இதை கேட்ட துரைவேல் அப்படியே இடிந்து அமர்ந்தார். அவர் மனதில் சொல்ல முடியா துயரம் அழுத்த என செய்வது என தெரியாமல் பித்து பிடித்தார் போல் அமர்ந்துவிட்டார்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அந்த இயந்திரப்பறவை ,”கிரர்ர்ர்ர்” எனும் ஒலியுடன் மண்ணில் இருந்து விண்ணை நோக்கி மேலெழும்பியது.

முதல் 6வது வரிசையில் ஜன்னலோர இருக்கையில் கண்களை மூடி பின்னே சாய்ந்து அமர்ந்து இருந்தாள் அகத்தியா. ஆம் அகத்தியா தான். அவள் தான் அவளே தான்.

மிகவும் சோர்ந்து போய் தெரிந்தாள் அவள். அவள் முகத்தில் சோர்வை மீறிய கவலை தெரிந்தது. இனி என்ன நடக்குமோ என எண்ணாமல், என்ன நடந்தால் என்ன எனும் மனநிலையில் இருந்தாள் அவள்.

என்னவானது அவளுக்கு? அதற்கு பதில் அவளிடமே. மனம் தன் போக்கில் யோசித்து கொண்டு இருந்தது, ஏதேதோ நினைவுகள் மனதினுள் சுழன்று கொண்டு இருந்தது. அதன் வேகத்தில் தன்னை சமாளிக்க முடியாமல் நீரோட்டத்தில் இழுத்து செல்லப்பட்டு தத்தளிக்கும் எறும்பு போலானாள்.

எங்கே கண் மூடினால் அது தன்னை இழுத்து சென்று விடுமோ என பயந்தவள் போல படக்கென்று கண் திறந்தாள். என்ன முயன்றும் அதனை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவள் சிந்தை அவள் கட்டுக்குள் இல்லை. அதை தெளிவாய் அவளால் உணர முடிந்தது. அதை நினையாதே என்ன மனதிற்கு கட்டுப்பாடு விதிக்க அவள் நினைக்கவில்லை.

மாறாக அப்போது தான் அது இன்னும் அந்த நினைவுகளுக்குள் சிக்கி வெளி வரத் தெரியாமல் தவிக்கும். வேண்டாம் வேண்டாம் எதையும் நினைக்க வேண்டாம் என அவளுக்கு அவளே பல முறை சொல்லிக்கொண்டு அதில் தோற்றும் போய் இருந்திருக்கிறாள். அதனால் அதே தவறை தவறியும் மீண்டும் மீண்டும் செய்ய அவள் முற்படவில்லை.

ஏன் எதற்கு என ஆயிரம் கேள்விகள் மனதினுள் இருந்தாலும் அதற்கு விடை தெரியாமல் மனதினுள்ளே மருகி தவித்து இருக்கிறாள். இப்போது இது இப்படி தான் என அவளே சமாளித்துக்கொண்டு இருக்கும் போது இவ்வாறு நடந்ததால் அவள் முற்றும் உடைந்து போனாள்.

எதையும் யோசிக்க பிடிக்காமல் மறுபடியும் கண்களை மூடிக்கொண்ட போது ஒரு மென் தளிர்க் கரத்தின் வருடலில் மெதுவாக கண் திறந்து பார்த்தாள். அவள் கண் முழித்ததும் அவளை நோக்கி ஒரு மென்னகையை சிந்தியது.

பக்கத்துக்கு இருக்கையில் இருக்கும் பெண்ணின் குழந்தை அது. அத்தளிர் கரத்தின் ஸ்பரிசம் அவளது மனக்காயத்திற்கு மயில் இறகால் வருடியது போல இருந்தது.

ஒரு மழலையின் ஸ்பரிசம் எப்பேர்பட்ட மனக்காயத்தையும் ஆற்ற வல்லது. அதன் நிலாமுகம் கண்ட போது தன் துன்பம் அனைத்தும் குறைந்து காணாமல் போய் விட்டது போல், மனம் லேசாகி பேப்பர் போல் ஆனது போன்ற ஒரு தோற்றம் உண்டானது.

அது அவளது தாயிடம் இருந்து இவளிடம் தாவ முற்பட்டது. எது ஒரு இனம் புரியா பாசம் எதோ ஏழேழு ஜன்மம் பழகியது போல் ஒரு உணர்வு அவளுள் ஏற்பட்டது. இவளை கண்டதும் தனது இரு கை விரித்துஅவளிடம் செல்ல முற்பட்டது.

குழந்தையை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா இல்லை அவளும் தான் அதற்கு விதிவிலக்கா? அவள் தனது கையை விரித்ததும் அது ஒரு மயக்கும் சிரிப்புடன் அவளை நோக்கி வந்தது.

ஏதோ மிகவும் பழகியவர் போல அவள் கன்னத்தை முத்தமிட்டு முத்தமிட்டு எச்சில் செய்தது. இதோ இருந்த கொஞ்ச நஞ்ச மனகிலேசமும் தன்னை விட்டு பறந்து தொலை தூரம் தொலைந்தது போன்று இருந்தது.

தன் கவலை மறந்து அக்குழந்தையுடன் ஒன்றி லயிக்க ஆரம்பித்தாள். பின்பு அதனுடன் மெய் மறந்து சேர்ந்து விட்டாள்.

அந்த குழந்தை தன் பவள செவ்வாயால் அவள் முகம் முழுவதும் முத்தமிட்டுகொண்டு இருந்தது.

திருச்சி விமான நிலையம் வரும் வரை அந்த குழந்தை அவளிடமே ஒட்டி கொண்டு வந்தது. விமானம் தரை இறங்க வேண்டிய அறிவிப்பு வந்தவுடன் அவள் முகம் தன் சோகத்தை வெளிபடுத்தியது. குழந்தையும் அவள் சோகம் உணர்ந்ததோ என்னவோ அதன் முகம் கூம்பி வாடி விட்டது.

இவள் அந்த குழந்தையை விட்டு பிரிய வேண்டுமோ என்ன நினைத்து கலங்கிப் போனாள். அந்த நிமிடம் தனது கவலைகள் அனைத்தும் நினைவடுக்கின் எதோ ஒரு மூலையில் ஓடி ஒளிந்து விட்டது என்பது தான் உண்மை.

அதன் தாய் அவளிடம் குழந்தையை வாங்க கை நீட்டிய போது ஏதோ தன் குழந்தையை யாரோ தன்னிடம் இருந்து பிரித்து செல்வது போலவே உணர்ந்தாள்.

“நீங்க உங்க luggage எடுங்க அப்புறம் நான் எடுத்துக்குறேன் என்றாள். அந்த பெண்ணும் சிறிது மென்னகை சிந்தி, தலை அசைத்து தனது luggage எடுத்துக்கொண்டு குழந்தையை வாங்க கை நீட்டினாள்.

குழந்தையோ அவளிடம் இருந்து பிரிய மறுத்து அழுதது. அவளுக்கே மனது சங்கடம் ஆகி போய் விட்டது. அந்த பெண்ணும் குழந்தையை அவளிடமே விட்டு விட்டு, “உங்க luggage எதுன்னு சொல்லுங்க நான் எடுத்து தரேன்” என, அகத்தியா பதறி

“இல்லல உங்களுக்கு ஏன் வீண் சிரமம் நானே எடுத்துக்குறேன்” என அவசரமாக மொழிந்தாள்.

“இதுல என்னங்க இருக்கு பாருங்க அவன் சமத்தா அடம் பண்ணாம உங்க கிட்ட இருக்கான் நீங்க விடுங்க நான் எடுத்துட்டு வரேன்”. “இல்ல நீங்க குழந்தையை பிடிங்க நான் எடுத்துக்குறேன்”, என அகத்தியா சொல்ல குழந்தை அதை உணர்ந்து கொண்டதோ என்னவோ அவளது டாப் கழுத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு வர மாட்டேன் என அடம் பிடித்தது.

அதன் தாயிடம் வரவே மாட்டேன் என முரண்டு பிடித்தது. அகத்தியாவிற்கோ சங்கடமாக போய் விட்டது. பரவில்லை விடுங்க நான் எடுத்து தரேன் இதுல என்ன formalities என சொல்ல அவள் மெதுவாக தலை அசைத்தாள்.

இப்போது அவள் தனது கை கொண்டு அதன் முதுகை வருட குழந்தை அவளது தோளிலே சுகமாக முகம் புதைத்து, அவளது கழுத்தை கட்டிக்கொண்டு வாகாக படுத்துக்கொண்டது.

செக்கிங்கிலும் அவளிடமே குழந்தை இருந்தது. செக்கிங் முடித்து இருவரும் பிரியும் நேரம் வந்ததும் அவளுக்கு மனம் மிகவும் கனத்து போனது. எதோ சில மணி நேரம் பழகிய ஒரு குழந்தைக்காக அவள் மனது மிகவும் தவித்தது.

மனதை இறுக்கிக்கொண்டு குழந்தையை அதன் தாயிடம் கொடுத்தாள். அதுவோ அவளை விட்டு வரவே மாட்டேன் என அழுதது பாவம் அழுது அழுது அதன் முகமே சிவந்து விட்டது.

அவளுக்கு மிகவும் பாவமாக தான் இருந்தது. அனால் மனதை கல்லாக்கி கொண்டு அங்கிருந்து ஏதோ தப்பி ஒளிபவள் போல அங்கிருந்து வேகமாக அகன்றாள்.

திரும்பியும் பார்க்காமல் வேக எட்டுகள் வைத்து அவள் முன்னே நடக்க குழந்தையின் அழுகை ஒலி இன்னும் தொடந்து கேட்டது.

திரும்பி பார்க்க சொல்லி சொன்ன மனதை அடக்கி இன்னும் வேகமாக நடந்தாள். குழந்தையின் அழுகை ஒலி அவளது செவியில் இருந்து தேய்ந்து மறைந்து காற்றோடு கலந்து போனது.

சுவாசம் வரும்.

.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here