தீரா மயக்கம் தாராயோ 9

0
769

தீரா மயக்கம் தாராயோ 9

ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி

   என்ற பாடலை மொபைலில் பாட விட்டு தன் மேல் விழுந்த பிஞ்சு தளிரை தன் மேல் படுக்க வைத்து தட்டிக் கொடுத்து தூங்க வைத்தான் மகிழ்வேந்தன்...

பாட்டி தாத்தா யார் கூட இருந்தாலும் வேந்தன் வீட்டில் இருந்தால் அவன் தான் சாப்பாடு ஊட்ட வேண்டும் ….குளிப்பாட்ட வேண்டும் ….தாலாட்ட வேண்டும்…. குழந்தை மகிழினிக்கு…..

தன்னுடைய பிசினஸ் ,டிவி சேனல் என அனைத்தையும் மறந்து குழந்தைதான் உலகம் என தோன்றியது ……சுழலும் பூமி இந்த நிமிடத்தில் நின்று விடாதா என்று இருந்தது வேந்தனுக்கு ……

ஆனால் மகிழினியை இளவரசியாய் வளர்க்க ஆசைப்பட்டு அதற்காக மட்டுமே வேலையில் கவனம் செலுத்துகிறான்……

குழந்தை எப்போதும் மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருப்பதற்காக “மகிழினி” என பெயர் வைத்தார்கள் ….ஆனால் விதியின் சதியால் நிலைமை வேறாகிப் போனது…

வாழ்க்கையில் வெறுமையாய் பணம் பணம் என ஓடிக் கொண்டிருந்த வேந்தனின் வாழ்வில் தென்றலாய் தெரிந்தது சுருதி நந்தினியின் நட்பு…. அதை வாழ்நாள் முழுதும் அனுபவிக்க ஆசைப்பட்டான் வேந்தன் ….

ஸ்ருதியின் ப்ரோக்ராம் டிவியில் ஒளிபரப்பு ஆனதை தொடர்ந்து டிவியின் டிஆர்பி அதிகரித்தது …அதனால் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தான் வேந்தன் …..

டிவி அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரையும் அழைத்து இருந்தான் வேந்தன் …….

பார்ட்டி அலுவலகத்திலேயே நடைபெற்றதால் ஸ்ருதியும் நந்தினியும் எந்த தயக்கமும் இன்றி கலந்து கொண்டனர்…. இருவரும் ஒன்று போல் பிங்க் நிற சுடிதாரில் வந்திருந்தனர் ..ஆனால் சுருதியின் மனதில் ஏதோ ஒன்று நடக்கப் போவதாக தோன்றிக் கொண்டே இருந்தது…

ஸ்ருதியின் கவலைக்கு காரணம் பார்ட்டிக்கு வரும் வழியில் ரகு அவளை பின்தொடர்ந்தது தான்….ஸ்ருதியிடம் பேச முயன்றான் ரகு.. ரகு எப்படியாவது ஸ்ருதியை சமாதானப்படுத்தி தன் காதலை புரிய வைத்துவிட வேண்டும் என்ற ஆசையுடன் பின் தொடர்ந்தான்… ஸ்ருதியோ எங்கே நம்மை பேசிப்பேசி கரைத்துவிடுவானோ ….காதல் கொண்ட மனது அவனிடம் சாய்ந்து விடுமோ …என்ற அச்சத்தில் அவனிடம் பேசுவதை தவிர்த்து வந்தாள்.

பார்ட்டி ஹாலில் அனைவரும் ஸ்ருதியை சூழ்ந்து கொண்டு அவரவருக்கு பிடித்த பாடல்களை இரண்டு வரி மட்டுமாவது பாடச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தனர்….. அப்போது வேந்தன் அங்கு நுழைய அமைதியானது ,அந்த இடம்…..அசரடிக்கும் சிரிப்புடன் புயலென நுழைந்தான் வேந்தன்…

“ஹாய் ,பிரண்ட்ஸ்! என்ன சைலண்ட் ஆகிட்டீங்க? நான் பாஸ் ,நீங்க ஸ்டாப்” அதெல்லாம் பார்ட்டியில இல்லை…. நாம எல்லாம் பிரண்ட்ஸ்… என்ஜாய் பண்ணுங்க … “ என்றவுடன் ..ஹே !!!என்ற சத்தம் அறையை நிறைத்தது ….

“ஹாய், ஸ்ருதி!!!! எல்லாருக்காகவும் பாடுனீங்க! எனக்காகவும் ஒரு பாட்டு பாடுங்களேன்” என்றான் வேந்தன்…

‘ என்ன பாட்டு பாட சொல்வானோ?’ என யோசித்து பதில் அளிக்காமல் இருந்தாள் ஸ்ருதி..

“நீங்க ஃபிரண்டா பாட சொன்னால் ஒண்ணு என்ன ஓராயிரம் பாட்டு கூட பாடலாம், சார் ஆனால் ???” என்றாள் நந்தினி….

“ஆனால் என்ன!” சரியான முந்திரிக்கொட்டை என்றான் மனதினுள் வேந்தன்…

“நீங்க பாஸா பாடச் சொன்னா அக்ரிமெண்ட் முடிஞ்சது சோ நோ சாங்” என்றாள்…நந்து..

“நான் பிரெண்டா தான் சொல்றேன்… பாடுங்க ஸ்ருதி…”என்றான் வேந்தன்…

“என்ன பாட்டுனு சொல்லுங்க?” இது நந்தினி ….

“நீயா பாடப் போற!! ஏன் கிராஸ் டாக் வர்ற ?”

“என்னது கிராஸ் டாக்கா!! யார் கிராஸ் டாக்? நானா?”

“ஆமா!! நீ கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு உட்காரு!! இது பாஸா என்னோட ஆர்டர்….”

“சரி !” என கையைக் கட்டி வாயை ஒற்றை விரலால் பொத்தி சிறுபிள்ளை போல இருந்தாள் நந்தினி ….அவளது செய்கை அனைவருக்கும் சிரிப்பை வரவழைத்தது….

சிரிப்பினூடே சிறிது நேரம் திரும்பி, “சரி ஸ்ருதி எனக்காக வேண்டாம் …என் செல்லக்குட்டிக்காக பாடுங்க…” என்று கூறிவிட்டு “மகிழ்” என அழைத்தான் வேந்தன்…

வேந்தனின் கூக்குரல் கேட்டு ‘டாடி’ என ஓடி வந்தாள் மகிழினி ….

அந்த பிஞ்சுக் குழந்தையைப் பார்த்ததும் அவளை தூக்கி கொஞ்சினாள் ஸ்ருதி

“குட்டிம்மாக்கு பாட்டுனா பிடிக்குமா?”

“ம். பிடிக்குமே!!!” இது மகிழ்..

“என்ன பாட்டு பிடிக்கும்!!”

“ம்….” என சுட்டுவிரலால் குட்டி மண்டையை தட்டி யோசித்தாள் மகிழினி ….

“அவளுக்கு “ஆனந்த யாழை” ரொம்ப பிடிக்கும் ஸ்ருதி” , என்றான் வேந்தன்….

“ இப்ப யார் கிராஸ் டாக்?” என்று கேட்டாள் நக்கல் சிரிப்புடன் நந்தினி…

“சரிங்க மேடம்! நான் ஒண்ணும் பேசல… தயவு செஞ்சு என்னையும் உன்ன மாதிரி வாயில் விரலை வைக்கச் சொல்லி விடாதே ….”
என்று சிரித்தான் வேந்தன்…

மகிழினி ஆசைக்காக “ஆனந்த யாழை” பாடலை பாடினாள் சுருதி.

பாட்டு முடியும் நேரத்தில் தன் தந்தையின் நினைவு தாக்கியதால் ஸ்ருதியின் கண்கள் கண்ணீரில் நிறைந்தது …

அனைவரும் கரகோஷம் கேட்டு சுதாரித்து அழுகையை அடக்கினாள் ஸ்ருதி ….

சுருதி நிலைமை அறிந்து அவள் கையைப் பிடித்து அவளை நெருங்கி அமர்ந்தாள் நந்தினி…’ நான் இருக்கேன்!!கலங்காதே! என்பது போல் இருந்தது …அவளது செய்கை ….

அவளது கண்ணீரைக் கண்டதும் மனம் பதறினாலும் அதை வெளிக்காட்டாது, “ஸ்ருதி உங்க கிட்ட தனியா பேசணும்!!” …என்றான் வேந்தன்…

“ சொல்லுங்க சார் !!” என்றாள்…ஸ்ருதி்

“நான் தனியா பேசனும்னு சொன்னேன்” என்றான் நந்துவை கண்காட்டி….

‘திமிர் பிடிச்ச கேகே’ என்று மனதினுள் வசைபாடினாள் நந்தினி …

அவனது செய்கை நந்தினிக்கு புரிந்தாலும் ஸ்ருதி இப்பொழுது இருக்கும் நிலைமையில் அவனிடம் தனியாக அவளை விட மனமின்றி அவனை இடை வெட்டினாள் நந்தினி…

“ சார் !!”என்றாள் நந்து…

“ யார் ?”என்றான் வேந்தன்…

“நான் தான் கிராஸ் டாக்….”

“சொல்லுங்க ”

“நாங்க ரெண்டு பேரும் வேற வேற இல்ல… அது எல்லாருக்கும் தெரியணும்னு தான் ஒண்ணு போல டிரஸ் பண்ணிட்டு வந்திருக்கோம்…. நாங்க நகமும் சதையும் மாதிரி் ரொம்ப க்ளோஸ்…
அதனால எதுனாலும் நான் இருக்கும்போதே நீங்க ஸ்ருதி கிட்ட
பேசலாம்..”

“நீ இருக்கும்போது அதெல்லாம் சொல்லக்கூடாதே !!!” இது வேந்தன்..

“அப்படி என்ன சொல்லப் போறீங்க??” இது நந்தினி…

“அது பெரியவங்க விஷயம்….”இது வேந்தன்…

“அதனால ??” என்றாள் நந்தினி..

“அதனால, நீ என்ன பண்றன்னா சின்னப் பிள்ளையா ஒழுங்கா லட்சணமா மகிழ் கூட சேர்ந்து இங்கே இருக்கிற ஐஸ்கிரீம் எல்லாத்தையும் காலி பண்ணனும்” என்றான் இதழிடையில் மறைக்கப்பட்ட சிரிப்புடன்…

பிறகு மகளிடம் திரும்பி, “மகிழ், இவங்க பேரு நந்து ..இவங்களுக்கும் உன்ன மாதிரி ஐஸ் நா ரொம்ப பிடிக்குமாம் அதனால இவங்கள ஐஸ் இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போறியா …”
“ஓகே டாடி” என்று சந்தோசம் ஆனாள் மகிழினி…

ஐஸ் என்றதும் தானாக ஸ்ருதி மடியிலிருந்து இறங்கி வந்து நந்துவின் கையைப் பிடித்து இழுத்தாள்…

நந்துவும் வேறு வழியின்றி இடத்தை காலி செய்தாள்..
செல்லும்பொழுது மகிழினி மாதிரியே (வாய்க்குள் தான்) ‘சரிங்க ,கேகே’ என்று கூறி விட்டு சென்றாள்….

“மகிழ் குட்டிக்கு என்ன ஐஸ் பிடிக்கும்”

“எனக்கு எல்லாம் பிடிக்கும்..”

“ஓ !சூப்பர் !சூப்பர் !”

“நம்ப ரெண்டு பேரும் சேர்ந்து எல்லா ஐஸையும் காலி பண்ணுவோம்.. ஓ கே வா!!”

ஓ கே என இருவரும் ஹைபை அடித்துக் கொண்டனர்…

அவர்கள் நகர்ந்ததும் “என்ன சார் சொல்லுங்க!! என்றாள் ஸ்ருதி..

“ ரகுவ உங்களுக்கு முன்னமே தெரியுமா! ஸ்ருதி!”

“சார் என்னோட பர்சனல் விஷயம் பற்றி பேச வேண்டாமே!”

“ சரி நான் என் பர்சனல் சொல்றேன் கேப்பீங்களா ?” அவள் பதில் சொல்லும்முன் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலை’ என்றான் வேந்தன்..

“ அது எனக்குத் தேவை இல்லை” என்றாள் ஸ்ருதி …
“கொஞ்சம் நேரம் இடையில் பேசாமல் நான் சொல்றதைக் கேளுங்க ஸ்ருதி…நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி மகிழ் என்னுடைய குழந்தை இல்லை ..”

“அப்படியா?அப்புறம் உங்களை டாடின்னு சொல்றா!!”

“மகிழினி ,எங்க அண்ணன் குழந்தை …எங்க அண்ணனும் அண்ணியும் பைக்ல போகும்போது ஒரு ஆக்சிடெண்ட்டில் மாட்டிக்கிட்டாங்க.. எங்க அண்ணா ஸ்பாட்டிலேயே இறந்துட்டாங்க… அண்ணி இரண்டு வருடமாக கோமா ஸ்டேஜ்ல இருக்காங்க.. மீண்டு வருவது கஷ்டம் …
ஆக்சிடென்ட் நடந்தப்ப மகிழுக்கு இரண்டு வயதுதான் …. இந்த ரெண்டு வருஷமா நானும் எங்க அம்மா அப்பாவும் சேர்ந்து தான் மகிழை பார்த்துக்கிறோம்…இப்ப மட்டும் இல்ல, எப்பவும் என் குழந்தை தான் மகிழினி…அதான் அப்பானு கூப்பிட பழக்குறேன்… எனக்கு எத்தனை குழந்தை பிறந்தாலும் மகிழ் தான் முதல் குழந்தை” என்று பெருமூச்சு விட்டான் ,வேந்தன்…

“நீங்க கிரேட் சார் !!!”என்றாள் ஸ்ருதி…

“ கிரேட் எல்லாம் ஒண்ணும் இல்ல.. அம்மா அப்பாவோட பாதுகாப்பு, அன்பு இல்லாமல் இந்த பிஞ்சு குழந்தை வளர்வதை பார்க்க முடியல அதான்… ஆனா நான் இப்ப பேச வந்த விஷயம் இது இல்ல….”

ஸ்ருதியின் வயிற்றில் பயம் கவ்வியது…
‘என்ன சொல்ல போறான் ….’

“எனக்கு நந்துவ ரொம்ப பிடிச்சிருக்கு” என்றான்…வேந்தன்

“என்ன?” என்றாள் ஸ்ருதி…

“ஸ்ருதி உங்க காது நல்லா தான் கேக்குது …எனக்கு நந்துவ ரொம்ப பிடிச்சு இருக்கு …உங்க பாஸ்ட் பற்றி எதுவும் கேட்காமல் ஒரு பிரெண்டா எப்படி உங்களை கவனமா பார்க்கிறார்களோ அது மாதிரி என் மகளையும் சேர்த்து பார்த்துப்பாங்க …ஆனால் அதுக்காகத்தான் நந்துவை பிடிச்சிருக்குன்னு நான் சொல்லல… நந்துவோட அந்த குணம் தான் என்னை ஈர்த்துச்சு… நந்து இருக்கிற இடம் எப்போதும் கலகலன்னு இருக்கும்… எங்க வீடும் அவளால கலகலன்னு மாறும்… அவளை நானும் நிச்சயமா நல்லா பாத்துப்பேன் …..” என்றான் வேந்தன்…

“நந்துவுக்கு சொந்தம் என்று யாரும் கிடையாது ..அதான் உங்ககிட்ட கேட்கிறேன் ஸ்ருதி…”

“சரிங்க சார் ரொம்ப சந்தோஷம்… ஆனா அவளுக்கு இஷ்டம் இல்லைனா கம்பெல் பண்ண கூடாது சார்…ஓகே வா!!!”

“ நீங்க கோடு மட்டும் போடுங்க நான் அதுல ரோடு போகிறேன் ….நந்துவை சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு” இது வேந்தன்….

“அவ்வளவு லவ்வா சார் !!”

“அப்புறம் லவ்னா சும்மாவா” என்றதும் சிரித்துக்கொண்டே மகிழ் நந்துவை பார்த்தனர் இருவரும்….

வேந்தனும் சுருதியும் பார்ப்பதை உணர்ந்து சுருதி முகத்தை ஆராய்ந்த நந்துவும் அவள் சிரித்த முகத்தை கண்டதும் நந்துவும் சிரிப்புடன் கையில் வைத்திருந்த ஐஸ்கிரீமை தூக்கி அவர்கள் பக்கம் நீட்டி வேண்டுமா!!! என்பது போல் சைகை செய்தாள் …மகிழும் அவளை பின்பற்றினாள்….

இந்த காட்சியை கண்டதும் வேந்தன் வேந்தனின் காதல் பித்து தலைக்கேறியது.

ஒரசாத உசுரத்தான்

உருக்காத மனசத்தான்

அலசாத என் சட்டை கிழிஞ்சு

வெளிய பறக்கும் இதயம்

என வேந்தன் மனது பாடியது…

காதல் வயப்பட்டவர்கள் பாடுதான் ஸ்ருதிக்கு தெரியுமே…

“ பார்த்து கொஞ்சமா ரசிங்க …நீங்க இருக்கிறது உங்க ஆபீஸ்” என்றாள் ஸ்ருதி ..

உடனே வேந்தன் மனதினுள், ‘ரகுவும் நல்லவன் தான்.. உன்னையும் எப்படியாவது ரகுவுடன் சேர்த்து வைப்பேன்’ என்று சூளுரைத்தான் மனதினுள்…

பாரட்டியில் மகிழினி நந்துவிடமும் ஸ்ருதியிடமும் நன்றாக ஒட்டிக் கொண்டாள்…. சந்தோசமாக ஆடிப் பாடி விளையாடினாள்…

“சரி ,மகிழ்… வீட்டுக்குப் போவோமா?” என்று கேட்டுக்கொண்டே வந்தான், வேந்தன் .

“ஓ. கே டாடி, நந்துவையும் ஸ்ருதியையும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போவோம்” என்றாள் மகள், கொஞ்சம் குரலில்.

“குட்டிமா, நீங்க இப்ப சமத்தா வீட்டுக்கு போவீங்களாம்… நந்து உனக்கு நிறைய சாக்கியும் ஐஸும் வாங்கிட்டு வருவேனாம். சரியா?” என்றாள்…

“நந்து ,அப்பாவுக்கும் வாங்கிட்டு வா “

“இது வேறயா? “என்று நந்து நிமிர்ந்து வேந்தனைப் பார்க்க அவனோ அவளின் பதிலை எதிர்பார்த்து புன்சிரிப்புடன் நின்றான்…

‘சிரிச்சா நல்லாதான் இருக்கான் இந்த கேகே…’

“ஓகே எல்லாருக்கும் வாங்கிட்டு வரேன்,மகிழ் குட்டி”பை” என்றாள்…

“பை ஸ்ருதி!”
“பை நந்து!”
“எனக்கு பை கிடையாதா” என்று நந்துவை பார்த்துக் கொண்டே கேட்டான். நமட்டு சிரிப்புடன்…

உடனே ஸ்ருதியும் நந்துவும் “பை” என்றனர்

மகிழை வழியனுப்பி விட்டு வீட்டுக்கு கிளம்பினார்கள் சுருதியும் நந்துவும்….

அலுவலகத்தை விட்டு வெளியேறியதும் “ஸ்ருதி” என்ற குரல் கேட்டு நின்றனர் இருவரும்..

மறுபடியும் ரகு தான் நினைத்து, “ஏன் இப்டி தொல்லை தரீங்க அத்தான்” என கூறிக்கொண்டே திரும்பினாள் ஸ்ருதி …

அங்கே நின்று கொண்டிருந்தான் …முகுந்தன்…

அதிர்ச்சியில் ஸ்ருதியுடன் நாமும்!!

பொறுத்திருந்து பார்ப்போம்….என்ன நிகழும் என

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here