இந்தோனேசியாவின் டொரஜான் மக்கள் தங்களது இறந்த உறவினர்களை பெருமைப்படுத்துவதற்காக ஒரு வினோத சடங்கை மேற்கொள்ளுவார்கள். அவர்களே தங்களுடைய உறவினர்களின் சடலங்களை தோண்டியெடுத்து, புதிய ஆடைகளை அணிவித்து மகிழ்வார்கள்..
ஒவ்வொரு மூன்று ஆண்டுகளிலும், சுலவேசி தீவில் இருந்து பழங்குடி மக்கள் இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். ‘சடலங்கள் சுத்தம் செய்வதற்கான சடங்கு’ என்று சொல்லப்படும் சடங்கு, ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இந்த இனத்தில் நடைபெறுகிறது.
அவர்களின் இனத்தை பொறுத்தவரை இறந்த பிறகு செய்யப்படும் அடக்கம் மிக அவசியம்.அதை ஆடம்பரமாகவும்,மரியாதையான முறையிலும் செய்வார்கள்.கிட்டத்தட்ட ஒருவாரம் வரை இறந்து போனவரின் வீட்டில் கொண்டாட்டங்கள் இருக்கும்.ஒருவர் இறந்த பின்னர் , உடல் சிதைவை தடுக்க பல துணிகளால் மூடப்பட்டிருக்கும்.
பின்னர், அவர்கள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளிலும் அவர்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்படுவார்கள். அவர்கள் குடும்பத்தினர் அவர்களுக்கு புதிய ஆடைகளை அணிவித்து மகிழ்வார்கள்.
நம் ஊரில் கல்லறைத் திருவிழா நடைபெறுகிறதே அதைப் போலத் தான் இதுவும்.என்ன ஒன்று இவர்கள் இறந்து போனவர்களை தோண்டி எடுத்து,புது உடைகள் போட்டு அலங்கரித்து,தலை சீவி தங்களுடன் சேர்த்து போட்டோ எடுத்து வைத்துக் கொள்கின்றனர்.
விசித்திரங்கள் தொடரும்…
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1