Persian Princess

0
519

 


19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈரானில் ஆட்சி செய்த நாசர் அல்-தின் ஷா கஜார் என்ற இளவரசனைப் பற்றிய  சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.அவரை மணந்து கொண்ட மனைவியை மிகவும் நேசித்தார் அவர்.அன்றைய காலக்கட்டத்தில் அவர் மனைவி ஒரு அழகு ராணியாவார்.

போட்டோவில் இருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் உங்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம்.புதர் போல புருவங்களும்,மூக்கின் கீழே மெலிதான மீசையும் உள்ள இவரா அழகி என்று…

இந்த இளவரசருக்கு சிறுவயது முதலே புகைப்படம் எடுத்துக் கொள்வது என்றால் ரொம்பவே இஷ்டம்.எனவே இவர் ஆட்சிக்கு வந்ததும் முதல் காரியமாக அவரது ஊரில் ஒரு ஸ்டுடியோ ஒன்றை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

இது என்ன பிரமாதம் என்று நீங்கள் நினைக்கலாம்…உண்மையில் அது மிக கடினமான காரியம் தான்.ஏனெனில் அந்த காலக்கட்டத்தில் பெண்களின் முகத்தை போட்டோ எடுப்பது என்பது மிகப்பெரிய குற்றமாகும்.அந்த தடைகளை எல்லாம் உடைத்து அவர் அந்த ஸ்டுடியோவை துவங்கி வைத்தார்.

தன்னுடைய அரண்மனையிலேயே சொந்தமாக ஸ்டுடியோ ஒன்றை வைத்திருந்தாராம்.தனக்கு தோன்றும் பொழுதெல்லாம் விதவிதமாக போட்டோ எடுத்து அதை முறையாக ஆல்பம் போட்டு வைப்பது அவரது வழக்கமாம்.

இதில் முக்கியமான ஒரு கொசுறுத் தகவல் என்ன தெரியுமா? போட்டோவில் இருக்கும் அந்த ராணியை மணப்பதற்கு விரும்பிய ஒரு பதிமூன்று பேரை அவர் நிராகரிக்கவே அவர்கள் மனம் வருந்தி தற்கொலை செய்து கொண்டார்களாம்.அவ்வளவு டிமாண்ட் அவருக்கு.

 

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here