கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னு ஒரு பழமொழி உண்டு.அது நூற்றுக்கு நூறு சரியான வார்த்தை…பார்க்க தான் கடுகு சிறுசு…ஆனா அதோட காரம் இருக்கே…உச்சி முடியை நட்டமா நிற்க வைக்கிற அளவுக்கு காரம் இருக்கும்.இதுல மொத்தம் மூணு வகை இருக்கு.ஒண்ணு கருப்பு,இன்னொண்ணு சிவப்பு மூணாவது வெள்ளை.இருக்கிறதிலேயே வெள்ளைக் கடுகு தான் காரம் அதிகம்.அதை சமையலுக்கு பயன்படுத்த மாட்டாங்க.மருந்து தயாரிக்க அதை பயன்படுத்துவாங்க.இப்போ இதோட மருத்துவ பயன்பாடுகளை பார்க்கலாம்.
கடுகை பொடி பண்ணி ஒரு கிராம் அளவுக்கு பாயாசத்தில் கலந்து காலை,மாலை இரண்டு வேளை கொடுத்து வர உடம்போட உள் உறுப்புகளில் இருக்கும் அழுக்கை அகற்றும்.சிறுநீரக கற்களை அகற்றும்,வாதம் சம்பந்தப்பட்ட வலிகளை அகற்றும்,நினைவாற்றல்,உடல் வலிமை, செரிமானத் திறன் ஆகியவற்றை அதிகரிக்கும்.
கடுகுடன் சம அளவு முருங்கை பட்டை சேர்த்து அரைத்து பற்று போட கைகால் குடைச்சல்,மூட்டு வலி,நரம்பு பிடிப்பு ஆகியவை குணமாகும். (இந்த method முயற்சி பண்ணும் பொழுது அளவுக்கு அதிகமா எரிச்சல் இருந்தா உடனே பற்று போட்டதை கழுவிடுங்க)
பத்து கிராம் கடுகை பொடித்து கால் லிட்டர் நீரிலிட்டு ஊற வைத்து வடிகட்டி கொடுக்க விக்கல் உடனே நிற்கும்.
கடுகு எண்ணையோடு ஐந்து மடங்கு விளக்கெண்ணெய் கலந்து சிறிதளவு கற்பூரம் சேர்த்து தடவி வர மூட்டு வலி,மார்பு வலி தீரும்.
கடுகை பொடித்து அரிசி மாவுடன் கலந்து நீரில் பிசைந்து களி போல வேக வைத்து துணியில் மூலம் வலி உள்ள இடங்களில் லேசான சூட்டில் தடவி வந்தால் வயிற்று வலி,வாத வலி,கெண்டை வலி ஆகியவை தீரும்.
மருத்துவம் தொடரும்…
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1