மருதாணி…பேரை நினைச்சாலே சிவந்து போகும்.பெண்களுக்கு பிடித்தமானதும் கூட…இதுக்கு இன்னொரு பேர் மருதோன்றி.முட்கள் மாதிரியான அமைப்புடைய செடிகள் பொதுவாகவே தமிழகம் முழுவதும் இலைகளுக்காக வீட்டில் வளர்க்கப் படுகிறது.இதை நம்ம முன்னோர்கள் வெறும் அழகுக்கு மட்டும் பயன்படுத்தலை…இதுக்கு பின்னாடி ஏகப்பட்ட மருத்துவ குணம் இருக்கு.அதை இன்னைக்கு பார்ப்போம்.
அந்த காலத்தில் பைத்தியம் பிடித்தவர்களுக்கு கட்டாயமாக மாதம் ஒரு முறை மருதாணி வைத்து விடுவார்களாம்.மருதாணி ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர் (Stress Buster) என்பது தான் அதற்குக் காரணம்.சரி இப்போ மருத்துவ பலன்களை பார்க்கலாம்.
இலையை அரைத்து நீரில் கரைத்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்.
இலையை அரைத்து தேங்காய் எண்ணையில் கலக்கி பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி தடவி வர முடி செழித்து வளரும்.
மருதாணிப் போவை தலையணையில் வைத்துக் கொண்டால் நல்ல உறக்கம் வரும்.
வேர்பட்டையை அரைத்து காலில் பற்று போட கால் ஆணி குணமாகும்.
இலையை அரைத்து சொத்தை நகங்களுக்கு பூசி வர சொத்தை நகம் நீங்கி புதிய நல்ல நகம் முளைக்கும்.(இதை நான் முயற்சி செய்து பலன் கண்டு இருக்கிறேன்…தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தல் வேண்டும்.)
இப்ப நிறைய பேர் கால மாற்றத்தின் காரணமா மருதாணியை அவ்வளவாக பயன்படுத்துறது இல்லை.ரெடிமேட் கோன் வாங்கி அதைத் தான் பயன்படுத்துறாங்க.ஆனா அதில் நம்ம உடலுக்கு எந்த நன்மையும் இல்லை.ஸோ அழகுக்காக கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்தாமல் மருதாணியை அரைச்சு கைகளில் வச்சுப் பாருங்க…அதோட வாசனை நாசியை மட்டும் இல்லாம மனசையும் நிறைக்கும்.
மருத்துவம் தொடரும்…
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1