வணக்கம் மக்களே இன்னைக்கு நீங்க தெரிஞ்சுக்கப் போறது நித்யகல்யாணி மூலிகையைப் பத்தி.இந்த செடியை பொதுவா பலபேர் தங்களோட வீட்டில் அழகுக்காக வளர்க்கிறது உண்டு.
இந்த செடில இரண்டு வகை உண்டு.ஒண்ணு வெள்ளை,இன்னொண்ணு இளம்சிவப்பு. இந்த பருவத்தில மட்டும் தான்னு குறிப்பிட்டு இல்லாம எல்லா பருவத்திலேயும் பூக்க கூடியது.கிராமப்புற பகுதிகள்ல இந்த பூவை சுடுகாட்டுப் பூ,கல்லறைப் பூ சொல்றது வழக்கம்.
இதனோட மருத்துவ பயன்பாடு பெரும்பாலும் நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இல்லை.இனி இந்த செடியோட மருத்துவ குணங்களை பத்தி பார்க்கலாம்.
ஐந்து அல்லது ஆறு பூவை அரை லிட்டர் தண்ணீர்ல போட்டு காய்ச்சி அது பாதியாக குறைஞ்ச பிறகு (அதாவது கால் லிட்டர்)ஒரு நாளைக்கு நாலு வேளை குடிச்சா அதிக தாகம்,அதிக சிறுநீர் வெளியேற்றுதல்,உடல் பலவீனம்,அதிக பசி இதெல்லாம் காணாம போய்டும்.
இந்த செடியோட வேரை சூரணம் செஞ்சு ஒரு சிட்டிகையை வெந்நீரில் கலந்து கொடுக்க சிறுநீர் சர்க்கரை குறையும்.
இன்னும் இந்த மூலிகை புற்றுநோயைக் கூட குணப்படுத்தக் கூடியதுன்னு சொல்றாங்க…ஆனா அதைப்பத்தி முழு விவரம் எனக்குத் தெரியலை…கிடைச்சா நிச்சயம் முதல்ல உங்ககிட்டே தான் பகிர்ந்து கொள்வேன்.
மருத்துவம் தொடரும்…
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1