மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ‘(2)
எந்நேரமும் உன்னாசை போல்
பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
எந்நேரமும் உன்னாசை போல்
பெண் பாவை நான் பூச்சூடிக்கொல்லவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ
என்னடா இவ பாட்டெல்லாம் பாடறாளேன்னு பயந்துடாதீங்க மக்களே…இன்னைக்கு நாம பார்க்க போற மூலிகை மல்லிகையைப் பத்தி.அது தான் கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு இப்படி ஒரு யோசனை.சரி விடுங்க விஷயத்துக்கு வருவோம்…
மல்லிகையை பத்தி நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரியணும்னு இல்லை.நம்ம எல்லாரும் கண்டிப்பா அதை பார்த்து இருப்போம்.ஆனா அதோட மருத்துவ குணங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.இதோட இலை,வேர்,மலர் போன்ற பகுதிகள் மருத்துவ குணம் கொண்டவை.
இலையை வதக்கிக் கட்ட புண்கள் விரைந்து ஆறும்.
மல்லிகைப் பூவை தாய்மார்கள் மார்பகத்தில் வைத்து கட்டி வர தாய்ப்பால் சுரப்பு படிப்படியாக குறைந்து விடும்.
இது தவிர மல்லிகைப்பூ எப்பவும் மனசுக்கு இதம் தரக் கூடிய ஒண்ணுன்னு எல்லாரும் சொல்றாங்க.அளவுக்கு அதிகமான ஸ்ட்ரெஸ் இருக்கும் பொழுது மல்லிகையை சூடினா அது குறைய வாய்ப்பு இருக்கு.
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1